ஐயோ அம்மா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2026
பார்வையிட்டோர்: 128 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“யாருடா அவன், வாயில்லா ஜீவன்கள் குடிக்கிற தண்ணியை எச்சி பண்றது?” 

என்ற முரட்டுக்குரல் ஒன்று கேட்டது. நிமிர்ந்து பார்த்தான். ஓங்கி ஒரு அறை “பளார்” என்ற சத்தம். அதைத் தொடர்ந்து “ஐயோ அம்மா” என்ற அவலக் குரல்! விறைக்க விறைக்கத் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த இரண்டு மாடுகளும் நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் குடிக்க ஆரம்பித்தன. கன்னத்தைத் தடவிக்கொண்டே நின்ற இவனுடைய கைகளை அவள் மெல்லப் பற்றினாள். பரிவாக அடிபட்ட அந்தக் கன்னத்தைத் தடவிக் கொடுத்தாள். இரண்டு துளி கண்ணீர் அந்தக் கையை நனைத்தன. 

“அழுவாதே. அவனுங்களே அப்படித்தான். மொரட்டுப் பசங்க” என்று அன்போடு சொன்னாள். 

அவர்கள் இருவரும் எப்படியோ அறிமுகமானவர்கள். இவன் அழைத்து வரவேண்டியது. கூட்டு வியாபாரம்! அதுகூட அந்த இரண்டு நாட்களாக மந்தம். வீடு வீடாக நின்று தங்கள் குறை களை முறையிட்டார்கள். வீதி வீதியாக நின்று கெஞ்சிப் பார்த் தார்கள் நெஞ்சிலே இரக்கமுள்ள புண்ணியவான்களில் எவரும் கண்ணில்படவே இல்லை. அலுத்து சலித்து அயர்ந்து தண்ணீரை யாவது இரண்டு வாய் குடிக்கலாம் என்று வந்தபோதுதான் அந்த அறையும் அவதியும் ! 

வெகுநேரம் கையை நீட்டி கெஞ்சிக்கொண்டே நின்றார்கள். எத்தனையோ பேர் காப்பி சாப்பிட்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந் தார்கள். ஒருவருக்காவது ஒரு காலணா கொடுத்தால் கடவுள் காப்பாற்றுவார் என்பதில் நம்பிக்கையே இல்லை. விதம் விதமான நிறங்களில் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருந்த அந்த தின் பண்டங்கள் இவர்கள் இருவரையும் பார்த்து புன்னகை புரிந்தன. கலாரசிகர்கள் யாராவது அவைகளைப் பார்த்திருந்தால் “கடைக்காரர் தருங் காட்சி” என்று கட்டுரை எழுதியிருப்பார்கள். இவர் கள் இருவரும் படிக்காதவர்கள்தானே. அவைகளைப் பார்க்கப் பார்க்கப் பசிதான் அதிகமாயிற்று. 

யாரோ ஒரு “நாகரீகமான” மனிதர், எங்கே முகத்தில் வழி யும் வியர்வை பவுடரைக் கலைத்துவிடப்போகிறதோ என்ற கவலை யால் வியர்வையைத் துடைக்க கைக்குட்டையை எடுத்தார். ஒரு காலணா நழுவிக் கீழே விழுந்தது. இவன் ஓடி அதை எடுத்தான். சுற்றிலும் திரும்பிப் பார்த்தான். உலகமே அவனை உற்று நோக் கிக்கொண்டிருப்பதைப்போ லிருந்தது. அறை வாங்கிய கன்னீத் தில் குடியேறியிருந்த அந்த வலி அப்போதுதான் காலி செய்து கொண்டிருந்தது. அவர் பின்னாலேயே ஓடினான். 

“ஐயா…” என்று இழுத்தாற்போலக் கூப்பிட்டான்.

“எட்டிப்போடா. சீ! பிச்சைக்கார நாயே,” என்று சொல் லிக்கொண்டே அவர் வேகமாக நடந்து போனார். 

இவன் கையில் இருந்த அந்தக் காலணாவை என்ன செய்வ தென்று இருவருக்குமே புரியவில்லை. காப்பிக் கடையில் இருந்த எந்தத் தின்பண்டமும் அந்த செப்புக்காசை மதிப்பதாக இல்லை. பக்கத்தில் வெற்றிலைப்பாக்குக் கடையில் தொங்கிக்கொண்டிருந்த வாழைப்பழக் குலை அவர்கள் கண்களில் பட்டது. காசை எடுத் துக்கொண்டு இவன் அந்தக் கடைக்கு ஓடினான். 

“ஐயா காலணாவுக்குப் பழந்தாங்கோ.” என்று அந்தக் காலணாவை நீட்டினான். 

“ஒரு “வில்ஸ்” தாங்கோ” என்று யாரோ ஒருவர் ஒரு அணாவை நீட்டினார். 

“இந்தாங்கோ வில்ஸ், பாக்கி அரையணா” என்று கடைக் காரன் சிகரட்டையும் சில்லறையையுந் தந்தான். 

“ஐயா வயத்தைப் பசிக்குது. காலணா பழந்தாங்கோ” என்று உரக்கக் கூவினான். 

“அசோகா காலணா, வெற்றிலைக் காலணா” என்று ஒருவர் அரையணாவைத் தூக்கிப் போட்டார். 

“அசோகா இல்லியே, வேற எதாவது தரட்டா” என்று கடைக்காரன் தன்னை நாணயமாகக் காட்டிக்கொண்டான். 

“அப்போ காலணாவுக்கு வெற்றிலைப் பாக்குத் தந்துடுங்கோ” என்றார் அவர். 

“ரொம்ப நாழியாக் கேக்குரேனே” என்று இவன் கத்தியே விட்டான். 

“ஏண்டா கத்துறே? கொண்டா காசை” என்று காசை வாங் கிப்பெட்டியில் போட்டுவிட்டு “என்னா வேணும்?” என்று கடைக் காரன் கேட்டான் 

“காலணா பழந்தாங்கோ” என்று இவனும் பழைய பாடத் தைப் படித்தான். 

“பழம் ஒண்ணு அரையணா, பாக்கி தா” என்று கடைக்காரன் கையை நீட்டினான். 

பரிதாபமாக அந்தப் பழங்களை இவன் பார்த்தான். அவை களும் “அவளுக்கு நான் என்ன மட்டமா?” என்று காப்பிக்கடை. தின்பண்டங்களைக் காட்டின. “இல்லை” என்பதற்கு அறிகுறியாக தலையை அசைத்தான். வீசி எறியப்பட்ட அந்தக் காசு உருண் டோடி எதிரில் உட்கார்ந்திருந்த முடவன் முன்னால் விழுந்தது. அவனும் “நல்லாயிருப்பீங்க சாமி! மகராஜனா என்று வழக்கம் போல வாழ்த்தினான். விழுந்து கிடந்த காசை இவன் ஓடி எடுத்தான். 

“சீ! பிச்சைக்காரக் கழுதை” என்று திட்டிக்கொண்டே அந்த முடவன் விட்டான் ஓங்கி ஒரு அறை. “பளார்” என்ற சத்தம் கேட்டது. உங்களுக்குத்தான் தெரியுமே “ஐயோ அம்மா ” என்ற அலறல் அதைத் தொடர்ந்தது. கடைக்காரன் பார்த்துக்கொண் டுதா னிருந்தான். வெற்றிலைப் பாக்குப் போட்டவன் காரி உமிழ்ந் தான். சிகரட் வாங்கியவன் சுருள் சுருளாக புகைவிடப் பழகிக் கொண்டிருந்தான். அடிவாங்கிய இவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்! 

வெகு நேரம் இந்த விசித்திரமான உலகத்தை வேதனையோடு பார்த்துக்கொண்டே இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். யார் யாரோ போய்க் கொண்டிருந்தார்கள். சிலர் “ஐயோ பாவம்’ என்று அனுதாபந் தெரிவித்தார்கள். சிலர் “பிச்சைக்காரர்கள் தொல்லையைப்” பற்றி குறிப்புரை கூறினார்கள். சிலருக்கு இவர்கள் இருவரும் அங்கு இருப்பதாகவே தெரியவில்லை ! 

“இந்தக் கண்றாவியை என் கண்ணால் பார்க்க முடியாது’ என்று மனங் கசிந்து சூரியனும் மறைந்து போனான். 

“தம்பி! இன்னைக்காவது யாரும் கெடைப் பாங்களான்னு போய் பார்த்துட்டு வா” என்று சொன்னாள் அந்த இவனுடைய அக்காள். 

அவள் குரலிலே வெட்கம் துக்கம் ஏதுங் காணப்படவில்லை. தெளிவாக ஏதோ பழக்கப்பட்ட பொருளைப்பற்றிப் பேசுவது போல தொனித்தது. வாடிக்கைக்காரர்கள் அல்லது வருகிறவர் போகிற வர்கள் யாரும் அகப்படமாட்டார்களா எனத் தேட இவனும் போனான்: 

வரும்போது எவனோ ஒருவனை அழைத்துக்கொண்டு வந்தான். உடலில் பட்டுச்சட்டை இருந்தது கையில் கட்டப்பட் டிருந்த கடிகாரம் ஓடிக்கொண்டிருந்தது. பையில் பௌண்டன் பேனா கூட இருந்தது. 

“இங்கேயே இரு தம்பி! வந்துடுறோம்” என்று வந்தவனோடு எங்கேயோ போனாள் இவன் அக்காள். 

சுற்றிலுஞ் சூழ்ந்திருந்த அந்த இருள் நிம்மதியை உலாவவிட் டிருந்தது. தளர்ந்து போன உடலும் அயர்ந்து போன கண்களும் இவனை 

ஒரு நிலையில் இருக்கவிடவில்லை. பல முறைகள் இவ னுடைய அக்காள் யார் யாருடனோ போயிருக்கிறாள். “எங்கே போகிறாள்?” என்று இவன் கவலைப்பட்டதே இல்லை, “ஏன் போகிறாள்?” என்பது இவனுக்குப் புரிவதே இல்லை. “எப்போது வருவாள்?” என்பதை மட்டும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருப்பான். 

ஏதோ குரல் கேட்டது. உற்றுக் கவனித்தான். ‘சும்மா இருடி தேவடியா முண்டே! கூச்சல் போட்டா போலீஸிலே புடிச்சுக் குடுத்துடுவேன்.” இது ஒரு ஆண் குரல் 

‘சும்மா நிறுத்தய்யா. காசைக் குடுத்துட்டு அப்பாலே போய்யா!’ இது பெண் குரல். 

ஆம்! இவன் அக்காளின் குரல். குரல் கேட்ட திசையை நோக்கி ஓடினான். கால்கள் தள்ளாடி, உடல் கட்டுமீறி “கொஞ் சம் இளைப்பாற விடு” எனக் கெஞ்சிற்று. இவன்மட்டும் ஓடிக் கொண்டே இருந்தான். உருவங்கள் தெளிவாகத் தெரிந்தன. அந்தக் கிழிசல் சேலைக்காரியின் தலைமயிரை ஒரு கையால் சுற்றிக் கொண்டு வயிற்றில் எட்டி உதைத்தான் அந்தப் பட்டு சட்டைக் காரன். “ஐயோ அம்மா 1 என்று கத்திக்கொண்டே அடிபட்ட இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் அவள். ஓடிவந்த இவன் பற்களால் தலைமயிரைப் பிடித்திருந்த அந்தக் கையைக் கடித்தான் எட்டி ஓரு உதை! இவனுடைய உடல் எங்கேயோ பறந்து சென்றது. “ஐயோ அம்மா” என்ற அலறல் நிம்மதியைப் விளந்துரொண்டு பாய்ந்தது! 

விழுந்து கிடந்த இவன் உடலை மெல்ல அவள் தூக்கினாள். பேச்சில்லை. மூச்சில்லை. உயிரைப் பரமண்டலத்துக்கு அனுப்பி விட்டு அழுக்கேறிய அந்த உடல் அலங்கோலமாகக் கிடந்தது. அழுதாள். கண்ணீர்விட்டாள். கதறினாள். நிமிர்ந்து பார்த்தாள். பட்டுசட்டைக்காரன் வேகமாகப் போய்க்கொண்டிருந்தான் கண்ணீருங் கண்ணுமாக அவளும் ஏதோ நினைத்துக்கொண்டு எங்கேயோ நடந்தாள். இருள் அவள் உருவத்தை மூடி மறைத் துக்கொண்டது. 

பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த பரந்தாமன் திடுகிட்டுக் விழித்தெழுந்தார். பக்கத்தில் படுத்திருந்த லட்சுமி, 

“ஏன் இவ்வளவு சீக்கிரம்?” என்று குழைவாகக் கேட்டாள். 

“அர்த்த ஜாம பூஜைக்கு நேரமாகிவிட்டது” என்று ஆத்திரத்தோடு பதிலளித்தார் ஸ்ரீமந் நாராயணன். 

மெள்ளத் திருமகள் அவருடைய தோளைப்பற்றினாள் ஏக்கமுந் தாபமும் நிறைந்த குரலில், 

“இன்றைக்கு ஒரு நாள் போகாவிட்டால் என்ன?’ என்று ஏக்கத்தோடு கேட்டாள். 

“அரைமூட்டை அரிசிபோட்டு வடித்திருப்பார்கள். அத்தனை யும் வீணாகப் போகுமே” என்று கவலையோடு கூறினார் பெருமாள். 

“ஐயோ அம்மா! அரைமூட்டை அரிசியா?” என்று ஆச்சரியத்தோடு கத்தியேவிட்டாள் பூமகள். 

அவள் ஆச்சரியம் திடீரென மறைந்தது. “அத்தனையும் ஜீரணமாகாவிட்டால் ஆபத்தாயிற்றே!” என்ற கவலை தோன் றியது; திரும்பிப் பார்த்தாள். திருமால் மறைந்து விட்டார். கவலை யோடு தலையணையைக் கட்டி அணைத்துக்கொண்டு கண்களை மூடினாள் அந்த “அனாதை ரட்சகனின்” வாழ்க்கைத் துணைவி. பாம்பும் தாமரையும் ஒன்றையொன்று பார்த்து கண்சிமிட்டிக் கொண்டன! 

– நிலவும் தாமரையும், முதற் பதிப்பு: 1961, கே.ஆர்.நாராயணன் வெளியீடு, சென்னை.

டி.கே.சீனிவாசன் தி.கோ.சீனிவாசன் (டி.கே. சீனிவாசன் - Tamil Wiki) தமிழ்நாட்டின் ஒரு முன்னணி அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் சிறந்த பேச்சாளர் ஆவார். திராவிட இயக்கத்தில் இவரது ஆழமான சிந்தனைகள் மற்றும் பங்களிப்பிற்காக இவர் "தத்துவ மேதை" என்றும், பேரறிஞர் அண்ணாவால் "சின்ன அண்ணா" என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். முக்கிய குறிப்புகள்: பிறப்பு: நவம்பர் 14, 1922 அன்று கோதண்டபாணி - அலமேலு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் பயணம்: தொடக்கத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *