உலகம்





(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தாமரையைக் கொத்திக் கிழித்து வீசவேண்டும் போல் மீனுக்குத் தோன்றியது.
குளத்துக்குத் தேன் அருந்த வந்த வண்டு மீனைப் பார்த்துக் கேட்டது
‘உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறாயே ஏன்?’
‘ஒன்றுமில்லை… காலம் முழுதும் தன்னைத் தாங்கி நிற்கும் தண்ணீரைத் தாமரை இலை உருட்டி வெளியே தள்ளுகிறதே இந்தத் தாமரைக்கு மனச்சாட்சியே இல்லை பார்…’
வண்டு புரிந்துகொண்டது.
அழுத்தமாக நெஞ்சின் அடியில் அது உச்சரித்தது.
‘தாங்கும் தண்ணீரைத்
தாங்காத தாமரை’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.