ஷாராஜ்

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: December 29, 2024
பார்வையிட்டோர்: 386 
 
 

சிறுகதைகள்.காம், இருபதாயிரம் கதைப் பிரசுர எண்ணிக்கையை அடைந்துள்ளது குறிப்பிடத் தக்க சாதனை. அதற்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். 2011-க்கும் மேற்பட்ட கதாசிரியர்களின் படைப்புகளைப் பிரசுரித்துள்ளீர்கள் என்பது, நானும் ஒரு கதாசிரியன், வாசகன் என்ற வகையில் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.சிறுகதைகள் மீது உங்களுக்கு உள்ள அபரிமிதமான அக்கறையினாலும், உங்களின் திட்டமிட்ட, அயராத உழைப்பினாலும்தான் இவை சாத்தியமாயிற்று. அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்! உங்கள் தளத்தில் நானும் ஒரு பங்கேற்பாளன் என்பதில் மகிழ்கிறேன். நான் அனுப்பும் எனது கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி! சிறுகதை வெளியீட்டுக்கும், வாசிப்புக்கும், ஆய்வுக்கும் உதவும் வகையில் ஒரு பேரியக்கமாக இத் தளத்தை நடத்திச் செல்லும் உங்களுக்கு சக சிறுகதையாளர்கள், வாசகர்கள் சார்பில் இதயம் கனிந்த நன்றிகளும் பாராட்டுகளும்! உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துகள்!

ஷாராஜ்