கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீதரன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு பஸ்தோப்புக் குயில் பாட்டு

 

 (1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (குயில் பாட்டுத் தெரிந்தவர்களுக்கு மட்டும்) “..நாற்கோணத்துள்ள பல நகரத்து வேடர்களும் வந்து பறவை சுட வாய்ந்த பெருஞ்சோலை….” அது ஒரு பஸ் நிற்பாட்டுகிற இடம். ஊர்த் தலைநகரம். பல நாகரிகங்களும் சேர்ந்து ஒரேயொரு நாகரிகமாகப் பரிணமிக்கும் ஒரு சொர்க்க நரகம். இந்த லோகத்திலேயே சபிக்கப்பட்ட பிச்சைக்காரர்களைத் தாபரிக்கிற நரகம். இல்லை, அப்படி இல்லை… ‘சிக்’கென உடையணிந்த ரம்பைகள் நிறைந்த தேவலோகம். இதில் ஜயப்பாடு


ராமசாமி காவியம்

 

 (1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்த ராமசாமி மனிதனாகக் கருதப்பட்டதற்குச் சரித்திர மில்லை. தேயிலைச் செடிக்குள் எல்லாமிருக்கும்’ என்று நம்பிக் கடல் கடந்த சீவராசிகளின் சந்ததியில் வந்தவன் மனித னாக முடியுமா? காட்டையழித்துப் பச்சைக் கம்பளம் போர்த்து, அதைப் பேணி, உணவுப் பிச்சையளித்தவன் மனிதனாக முடியுமா? இதெல்லாம் ராமசாமிக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள். இன்று, இந்த மாங்குளத்துச் சந்தியில் வெய்யில் நெருப்பில், அதை வெல்கின்ற வயிற்று வெக்கையுடன் மீனாச்சி, ‘செவனு’,


தொடர்புகள்

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஊரைவிட்டு வந்ததிலிருந்து, நிலவு வளர்ந்து தேய்ந்தது நூறு இருநூறு முறை இருக்கும். போட்டியாய் நகர் விளக்குகள் எரிந்து, நிலவு தோற்கும் இந்த ஊரில் யார் கணக்கெடுக்கப் போகிறார்கள்? வெய்யில் பதம் பண்ணிய செம்மண் மத்தியில் பனந்தோப்புகளுக்குப் பின்னால் சந்திரன் ஒளிவீசும் அழகை யெல்லாம் விட்டுவிட்டு குளிர் நடுங்கும் பனிப்பிரதேசத்தில் வாழ்கிறேன் என்று நாட்களைக் கடத்தும் நிலைமையாகிவிட்டது. எஞ்சினியர், ஆராய்ச்சியாளன். எப்படியிருந்தால் என்ன? நாளை