கதையாசிரியர் தொகுப்பு: வாசவன்

1 கதை கிடைத்துள்ளன.

சிதைந்த கூடு

 

 சிந்தாமணி பொய்யாகி விட்டாள்! நேற்றுவரை எல்லா நிஜங்களுக்கும் நிஜமாக இருந்து, இன்று எல்லாப் பொய்களுக்கும் பொய்யாகிப் போனவள் ஊர்க் கோயில் மூன்றடிக் குழியிலே உறங்குகிறாள். என் நெஞ்சில் மண்ணை அள்ளிப்போட்ட அந்தச் சண்டாளியை நானும் வஞ்சம் தீர்த்துக்கொண்டேன் மூன்று பிடி மண்ணை அந்தக் கழுதையின் நெஞ்சில் வாரி இறைத்தேன். ஆனால் அது மண்ணா ? இல்லை. என் கண்களிலிருந்து திரண்ட வெம்பனித்திரள். வெயிலில் வெடித்து விடுகிற வெறும் பனித்துளி கூட அல்ல அது. என் நெஞ்சைக் கிழித்துப்