கதையாசிரியர் தொகுப்பு: லறீனா ஏ. ஹக்

3 கதைகள் கிடைத்துள்ளன.

எனக்கான வெளி

 

 என் வளாகத் தோழி வந்துவிட்டுப் போனாள். நீண்ட நாளைக்குப் பின் பழைய நினைவுகளை மீட்டி மகிழ்ந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. எவ்வளவோ வற்புறுத்தியும் பகலுணவுக்காகத் தாமதித்துச் செல்ல அவள் உடன்படவில்லை. போகும் போது மன்றாட்டமாய் அவள் குரல், ‘கட்டாயம் வீட்டுக்கு வா. ஓரிரு நாட்கள் தங்கிப்போகவே வா, காலில் சுடுதண்ணி கொட்டிக்கொண்டது போல அரக்கப்பரக்க வராதே.’ ‘அண்ணா, உங்களுக்கு நேரமில்லாட்டில் அவளை மட்டுமாவது அனுப்பி வைங்களேன்’ – இது என் கணவரிடம். அவர் புன்னகையோடு தலையசைக்கிறார். அன்றிரவு


நிலாச்சோறு

 

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் பஸ் வரும் வரை பஸ்தரிப்பில் காத்து நிற்கிறேன். காலைவேளை ஆகையால், டவாகனங்களெல்லாம் நிரம்பி வழிகின்றன. இதுவரை சென்ற இரண்டு வண்டிகளை சனநெரிசல் காரணமாகத் தவறவிட்டுவிட்டேன். இன்னும் இருப்பது ஒரே ஒரு வண்டி. இப்போது வரும்நேரம்தான். இளம் விதவையான நான், ஆசிரியையாக கடமையாற்றி வருகிறேன். உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. தனிமையைப் போக்க, கௌரவமாகச் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ, என் தொழில் எனக்கு


நாங்கள் மனிதர்கள்

 

 (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இருள் மங்கை உலகை அரவணைத்திருக்க, மின்மினிப் பூச்சிகள் மட்டும் சின்னச்சின்ன வெளிச்சப் பொட்டுக்களாய் ஆங்காங்கே பறந்து கொண்டிருந்தன. இருட்டை வெறித்தவளாய், சன்னல் கம்பிகளைப் பற்றியபடி கற்சிலை போல், ஆடாது அசையாது நின்றிருந்தாள் சுமனா. அவளது கண்கள் கண்ணீரை மழையெனப் பொழிந்து கொண்டிருந்தன. ‘ஹு…ம்’ இதயமே பிளந்து கொண்டதைப் போல், பெருமூச்சொன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது. சின்னஞ்சிறுமியாய் அவள் உலாவித்திரிந்த அந்த வளவு, சரத், கௌரி,