கதையாசிரியர் தொகுப்பு: ராஜாஜி ராஜகோபாலன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

செம்பருத்தி

 

 அம்மா வந்து எங்கள் வீட்டு வாசல்கதவைத் தட்டியபோது காலை ஏழு மணியாகி வானம் சிலுசிலுவென வெளுத்துவிட்டது. வாசலில் மின்சாரமணி அடிக்கப் பொத்தான் இருந்தபோதிலும் அம்மா அதில் விரலை வைப்பதில்லை. வீட்டுக்காரரைக் கூப்பிடவேண்டுமென்றால் கதவைத் தட்டிக் கூப்பிடுவதுதான் முறையானது என்ற கோட்பாட்டில் அம்மா தீவிரமான நம்பிக்கை வைத்திருந்தார். அம்மா வந்த வேளை என்னவள் மஞ்சு கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்தாள். எனவே இனியும் போர்வைக்குள் சுகம் காணமுடியாது என்று கண்டதும் எழும்பிப்போய்க் கதவைத் திறந்தேன். அம்மா வெளிக்கிட்டுக்கொண்டு வந்திருந்தார். முதல் நாள்


சுபத்திராவிற்கு என்ன நடந்து விட்டது?

 

 அன்றைய அதிகாலைப்பொழுது வழக்கத்திலும் பார்க்க அழகாகவே புலர்ந்தது போலிருந்தது சுபத்திராவுக்கு. தூரத்துக் கோயிலிலிருந்து ண்ங்க்! ண்ங்க்! என்று மணியோசை காற்றோடு மெல்லியதாய்த் தவழ்ந்து வந்து யன்னல் திரைகளைச் சுண்டிச் சுருதி சேர்க்க முயன்றது. யன்னலினூடே வழுக்கியபடி விழுந்து சூரியன் முதலில் சுபத்திரா படுத்திருந்த கட்டிலின் கரையைத் தொட்டு அடுத்து அவளின்மீது ஏறித் தவழ எத்தனித்தவன்போல் ஊர்ந்து வந்தான். சுபத்திரா தன்னைச் சுற்றிப் பார்வையை ஓடவிட்டாள். இன்றோடு நான்கு நாட்கள். இப்படியே வெளியுலகை நோக்குவதும் பகலில் தன்னைக் காண


அம்மாவின் அடுக்குப்பெட்டி

 

 “டேய் முத்தவன், பின்னேரம் பள்ளிக்கூடத்தாலை வரக்கை சந்தைக்குப் போய் ரண்டு சாமான் வாங்கிக்கொண்டு வரவேணும்.” இதைக் கேட்டுக்கொண்டிருந்த அப்புவுக்கு வலு சந்தோசம். அம்மா இன்றைக்கும் அண்ணாவை வேலை வாங்கப்போகிறா. “ஏனம்மா, உவன் சொத்தி வாயனுக்கு என்னவாம், பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலைதானே சந்தை. பின்னேரம் வீட்டை விழுங்க வரக்கை சொன்ன சாமானை வாங்கிக்கொண்டு வாறதுதானே?” அண்ணா இதைச் சொன்ன கையோடு தேடி வந்து அம்மாவுக்குத் தெரியாமல் தனது மண்டையில் ஒரு குட்டு குட்டுவான் என்ற அனுபவ ஞானத்தால் அப்பு ஓடிப்போய்


சில நேரங்களில் சில கடவுள்கள்

 

 ஆரது கதவடியிலை நிக்கிறது? சாந்தி இல்லம் நிர்வாகி மரகதம் அம்மா என்றவர் நீங்களா? நான் தான் மரகதம், நீங்கள் ஆர், என்ன விஷயமா வந்தியள்? உங்களைக் காணவேண்டுமென்று வந்தேன். பொறுங்கோ, நாங்கள் இப்ப கை முட்ட அலுவலாய் இருக்கிறம். காலமை வெள்ளெனச் சந்திக்க வழக்கத்திலை நாங்கள் ஒருதருக்கும் நேரம் கொடுக்கிறதில்லை. என்ன விஷயமா வந்தனீங்கள் எண்டு சுருக்கமாய்ச் சொன்னால் நல்லது. இங்கேயிருக்கிற பிள்ளைகளைப் பார்க்கலாமென்று வந்தேன். ரண்டு நாளைக்கு முந்தியும் உங்களைப்போல மூண்டு நாலு பேர் சும்மா


பௌருஷம்

 

 ஸ்டேசன் விளக்குகள் மின்ன ஆரம்பித்த மாலை நேரக் கருக்கலில், பிளாட்போமில் கசகசவென நின்ற ஜனச் சிதறலை உசார்ப்படுதியவாறு வந்து நின்ற அளுத்கம ரயிலிலிருந்து அவதியோடு இறங்கிய கும்பலின் பின்னால் ஓரிரு பொறுமைசாலிகளோடு இவனும் ஒருவனாக இறங்கினான். வாசலில் சிரத்தையில்லாமல் நின்றுகொண்டிருந்த காக்கிச் சட்டைக்காரனின் கையில் வலியச் சென்று தன் டிக்கட்டைத் திணித்துவிட்டு வெறுங்கைகளை வீசியபடி எதிர்ப்புற ரயில்வே லயினோடு ஒட்டிய பிளாட்போமுக்கு வந்தான். அது ஒரு சின்ன ஸ்டேசன். எதிரும் புதிருமாக ஐந்து நிமிடத்துக்கொருமுறை ஓடும் ‘டீசல்’களுக்காக