கதையாசிரியர் தொகுப்பு: மாதங்கி

2 கதைகள் கிடைத்துள்ளன.

புரு

 

 வக்கீல் மாமாவிடமிருந்து அவசர பச்சைச் செய்தி கிடைத்தவுடன் மூத்தவன் சல்யன் மனைவி ரேஷ்மாவுடன் ராக்கெட்டில் வந்தான். அடுத்தவன் கேசரி, மனைவி லதா, மகள் நீதுவுடன் ஏர் டாக்ஸியில் வந்தான். அடுத்தவள் அனா என்ற அன்னம், மகனை கணவனுடன் ஊரில் விட்டுவிட்டு வந்திருந்தாள். மூவரும் படுக்கையில் நினைவிழந்து இருந்த கிழவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். பெரியவர் உண்மையில் ரொம்ப நைந்து போயிருந்தார். அவரது முகம் மட்டும் திறந்திருக்க உடல் வெள்ளைப் போர்வையால் போர்த்தப்பட்டிருந்தது. அவ்வப்போது நினைவிழப்பதாக வக்கீல் வேறு கூறியிருந்தார்.


ஒரு கோடி டொலர்கள்

 

 தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ் சிங்கப்பூர் ஜூன் 16 புதன்கிழமை 2010 முதல்பக்கத் துக்கச் செய்தியின் ஒரு பத்தி: அனைத்துலகச் சுரங்க ஆபத்துதவிக் குழுவினர் இன்றைக்குச் சுலபத் தீவில் தொழிலாளிகள் சிலர் இன்னும் இருக்கும் இடத்தை அடையப் பனிரெண்டு மீட்டர்கள் இருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கையுடன் துளையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நேற்றுவரை மீட்கப்பட்ட உடல்களில் இதுவரை அடையாளம் அறிய இயலாத வெளிநாட்டவர் ஒருவர், சிங்கப்பூரர் என்பது அடையாள அட்டை மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஜூன் 12 சனிக்கிழமை 2010 காலை மணி