கதையாசிரியர் தொகுப்பு: மருதூர்க்கொத்தன்
மூக்குத்தி
(1966 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக் கலையை வாழ்விப்பதற்கான யோக்கிய தாம்சங்கள் சகலமும் அவளிடம் சம்பூரணமாக இருக்கின்றன. பரம்பரை வழியில் பசையற்ற கணவனைக் கட்டிக் கொண்டவள். பிதுர் சம்பத்தென்னும் காந்தசக்தியின்மை யால் பசையுள்ள கணவன் என்ற இரும்பைக் கவர அவ ளால் முடியாது போய்விட்டது. கணவனோ, தட்டிச்சுருட்ட வக்கற்ற கோழைத்தனத் தாலும் ஏய்த்துப் பிழைக்க லாயக்கற்ற மந்தமதியாலும், குறுக்குவழிகளைக் கைக்கொள்ளும் சாதுர்ய சூனியத்தாலும் வார்க்கப்பட்ட தூய்மைவாதி. கிராமத்தவர் பாஷையில்,
அழகிய இதயங்கள்
(1969 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செம்பூக்கள் இழைத்த திரைச்சீலை போல கீழ் வானம் செக்கச்சிவந்து விட்டது. கண்பட்ட இடமெல்லாம் பரந்து கிடக்கும் குன்றுகளும், செம்மயமாகிச் சிரிக்கின்றன. காலையிளஞ்சூரியன் மேலநோக்கி மெல்ல மெல்ல உயர்கிறது. அது, பேரீத்தம் பழச்சாற்றில் தோய்த்தெடுத்த வட்ட வடிவமான கோதுமை ரொட்டி போல பேரழகு சிந்துகிறது ஷாம் தேசத்தின் தலைநகரான் திமிஷ்க்கின் மத்தி யிலே, உள்ள நீர்ச்சுனை பாலையின் கனிந்த இதயத்தைப் பிரதிபலித்துக் கிடக்கிறது. இதயத்தின்