கதையாசிரியர் தொகுப்பு: பால்ராஜன் ராஜ்குமார்

1 கதை கிடைத்துள்ளன.

முதலிரவு

 

 இன்று காலையில்தான் சங்கரனுக்குக் கல்யாணம் முடிந்தது. முருகன் கோவிலில் வைத்து, மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டு நடந்த கல்யாணம். சுருக்கமாக சொல்லியே ஏகப்பட்டக் கூட்டமாகிவிட்டது. நெருங்கிய சொந்தத்தில் என்று சொன்னால்கூட, ஒருத்தருக்குச் சொல்லி இன்னொருத்தருக்குச் சொல்லவில்லையென்றால் மனச்சடவுதான் வரும் ஊருக்குள்ளே. கல்யாணத்திற்கு வந்தவர், விஜயாவின் மாமாவை பார்த்து கேட்டார், “ ஏம்பா, வீரபாகு, பையன் கல்யணத்தை சுருக்கமா எடுக்கேனு சொல்லிப்புட்டு, தடபுடலா நடத்துறியே. நல்லதுதான் …………நடக்கடும்…..நல்லபடியா” இதற்கு மாமா பதில் எதும் சொல்லாமல், சிரித்துக்கொண்டே, “வணக்கம்