கதையாசிரியர் தொகுப்பு: நிப்தாஸ் அஹமத்

1 கதை கிடைத்துள்ளன.

ஓவியம் உறங்குகின்றது

 

 “இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக் காலத்தில் ஓவியங்கள் வரையப்பட்டன” என்ற முதலாம் பக்கத்தில் உள்ள மூன்றாம் பந்தியை வசித்து கொண்டிருக்கும் போது அவனின் தந்தையின் இருமல் சத்தம் கேட்டு புத்தகத்தை மூடி தலையணைக்கு கீழே ஒழித்துவிட்டான் நீயானாகி. அவனின் பெயர் போன்று அவனும் வித்தியாசமானவன் ஓவியம் வரைதலில் அசாத்திய திறமை படைத்தவன். ஆனால் என்னவோ அவனின் ஓவியங்களை யாரும் ஏறடுத்தும் பார்ப்பதில்லை பார்த்தாலும் பொறாமை வழியும் நாவுகள் கடும் சொற்களை கக்கும்.