கதையாசிரியர் தொகுப்பு: து.ராமமூர்த்தி

3 கதைகள் கிடைத்துள்ளன.

கழைக் கூத்தன்

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸ்ரீ சதாசிவம், காரிலிருந்து இறங்கி, ‘கேட்’டைத் திறந்த சத்தத்தைக் கேட்டு, வேலைக்கார முனிசாமி உள்ளேயிருந்து ஓடி வந்தான். அன்று சனிக் கிழமையான தால், சதாசிவம் இரண்டு மணிக்கே ஆபீஸிலிருந்து வந்து விட்டார். நான்கு தடவை ஹாரனை அமுக்கியும், முனிசாமி யைக் காணவில்லை. “நாசமாய்ப் போக! எங்கேயோ பீடி குடிக்கத் தொலைந்து போய்விட்டான் போலிருக்கிறது” என்று மனதுக்குள் அவனை அவர் வைது கொண்டே, காரை


கப்பல் தலைவன் காதலி

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பயங்கரமான பெரிய சப்தத்துடன் சுழற் காற்று வீச ஆரம்பித்தது. அன்று கடலுக்குக் கொம்மாளந்தான். அலைகள் மலைபோல் உயர்ந்து கரையில் திட்டுத் திட்டாக இருந்த பாறைகளின் மேல் மோத ஆரம்பித்தன. கண்ணைப் பறிக்கும் மின்னலும் காதைத் துளைக்கும் இடி முழக்கமும் மனத்திற்கு நடுக்கத்தைத் தந்தன. இப்படிப்பட்ட இரவில் அச்சத்தைக் கொடுக்கும் இந்தக் கடற்கரைக்கு அருகிலுள்ள கற்பாறைகளுள் ஒன்றின்மேல் நின்று கடலைப் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்மணிக்கு என்ன


காளியின் கண்கள்

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 கிருஷ்ணகிரி அரசன் வீரமார்த்தாண்டன் மைசூர் ராஜ வம்சத்தில் பிறந்த ஒரு சிற்றரசன்; அமோகமான ஐசுவரியத்துக்குத் தலைவன். புகழ் பெற்ற கோமதி வைரங்கள் இரண்டும் அவனிடத்தில் இருந்தன. வைரமொன்று ஓர் எலுமிச்சம்பழம் அவ்வளவு பெரியது. விலை மதிக்க முடியாத இவ் வைரங்கள் ஒரு காலத்தில் ஸோமநாத் கோயிலுக்குச் சொந்தமாயிருந்தன என்றும் அவை எப்படியோ வீரமார்த்தாண்டன் வசம் வந்தனவென்றும் ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள். கோமதி