கதையாசிரியர் தொகுப்பு: ஜெயராணி

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஆதியிலொடு அன்பிருந்தது…

 

 ”நீ நீயாக இரு!” ”இல்லை… நான் நீயாக இருக்க விரும்புகிறேன்.” ”அது சாத்தியமற்றது. போலியானது.” ”ஏன்?” ”நீ நீயாக இருக்கும்போது, என்னை அதிகம் நேசிப்பவளாகிறாய். எனக்காக மாறும்போது, நீ உள்ளிருந்து எங்கேயோ என்னை வெறுக்கத் தொடங்குவாய்.” ”உனக்காகச் சில விஷயங்களை இழக்கும்போதும், விட்டுக்கொடுக்கும்போதும், வாழும்போதும், அது எனக்கு அதீத சுகத்தை அளிக்கிறது.” ”அதைத்தான் போலியானது என்கிறேன்.” ”ஏன்?” ”ஏனென்றால், உலகத்திலேயே மிக உன்னதமான விஷயம், சுயமாக இருப்பதும் சுதந்திரமாக வாழ்வதும். ஒவ்வொரு மனிதரின் அதிகபட்சத் தேடல் அதுதான்.”


மழைத் துளிகளை பரிசளித்தவன்

 

 இருளின் சாயம் மெள்ள மெள்ள கரைந்தது. விடியலை விரும்பாமல் மனமும் உடலும் போர்வைக்குள் சுருண்டுகிடந்த நேரம், நீல வானத்துப் பறவைகளும் மஞ்சள் விரித்த பாலைவனத்தின் ஒட்டகங்களும் கண்ணுக்குள் மிதந்தன. பன்னீர்ப் பூக்களைப் போல ஈரங்களுடன் சிதறியிருந்த அதிகாலை மயக்கம். விழித்துக்கொண்டாலும் திறக்க மறுத்தன கண்கள். மனநிறைவில் சந்தோஷமும் அமைதியும் அப்பிய அரைத் தூக்கம். நினைவுச் சுருள் எங்கும் அவன் வியாபித்து, உணர்வுகளைச் சொடுக்கி உயிரைப் பிழிந்தெடுத்தான். ‘உன் தூரமும் சுகமாகவே இருக்கிறது’ – வாய்விட்டுச் சொன்னது மனம்.