கதையாசிரியர் தொகுப்பு: செழியன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

ஹார்மோனியம்

 

 மதிப்பிற்குரிய திரு. ஹசன் பண்டிட் (வயது 43) அவர்களை ஒரு மாலைப்பொழுதில்தான் சந்தித்தேன். நெடிய கட்டிடங்களுக்கு இடையிலான குறுகலான சந்தில் நடந்து, செங்குத்தான மாடிப் படிகளில் ஏறி அந்த மேன்ஷனின் ஏழாவது அறையைக் கண்டுபிடித்தேன். ‘ஹார்மனி இசைப்பள்ளி’ என்று எழுதப்பட்ட, காய்ந்த கதம்ப மாலையிட்ட விளம்பரப்பலகை இருந்தது. வாசலில், இரண்டு தேய்ந்த ரப்பர் செருப்புகள் கிடந்தன. அறையின் உள்ளிருந்து ஊதுபத்தி வாசனையோடு ஹார்மோனிய இசை கேட்டது. “வணக்கம்.” பண்டிட் கண்களால் என்னை அமர்த்திவிட்டு, ஹார்மோனியத்தில் ஊர்ந்த தன்


ஒரு சாண் மனிதன்!

 

 சாதாரணமாக ஒரு புகையிரத நிலையத்தில் நிகழ்வது போலத்தான் இது நடந்து வந்தது. ஏழு வித்தியாசங்கள் சொல்லலாம் என்றாலும் அதில் முக்கியமானது, இது அங்கு நடப்பது போல, இங்கு தினமும் நடைபெறுவதில்லை. வாரத்திற்கு ஒரு தடவை வருகின்ற புதன்கிழமைகளில் மட்டுமே நடக்கின்றது. கண் இமைக்கும் நேரத்தில், மிக வேகமாக வருகின்ற புதையிரதத்தில் இருந்து, புகையிரத நிலைய அதிபரின் கைக்கு மாறுகின்ற அந்த வளையம் போல, கணநேரத்தில் இது கைமாறுகின்றது. பார்க்கின்ற போதெல்லாம், ஒரு கைதேர்ந்த சர்க்கஸ்காரர் நடத்துகின்ற அற்புதமான


அம்மாவைத் தேடி…

 

 மழை மாதத்தின் பின் மதியம். மேகங் கள் வெண்புகையாக வானத்துக்கும் பூமிக்குமாக நிரம்பித் ததும்பி இருந்தன. விமானத்தின் கண்ணாடி சன்னல் வழியே, அரபிக் கடலின் நுரை விளிம்புடன் நீண்டு செல்லும் மெரினாவின் கடற்கரை தொலைவில் தெரிகிறது. நெளிநெளியாக விரிந்த சாம்பல் நிற நீர்ப் பரப்பில் உரசி, உடன் வருகிறது சூரியன். கண்கள் கூசும் உலோகப் பரப்பாக விரிந்து கிடந்தது கடல். இத்தனை உயரத்தில் அம்மாவின் நினைவு வந்தது ஆச்சர்யமாக இருந்தது. மனதின் ஆழத்தில் இருந்து விதவிதமான அம்மாவின்


மிஸ்டர் மார்க்

 

 இயற்பெயர் சி.மார்க்கண்டன். இதில் சி என்பது சின்னையா, சினிமா என்ற இரண்டு வார்த்தைகளையும் குறிக்கும். ‘மிஸ்டர் மார்க்’ என்றால் கோடம்பாக்கத்தின் திரையுலக நண்பர்கள் பலருக்குத் தெரியும். மார்க்கண்டன், 1993-ல் வெளிவந்த ‘மல்லிகை’ என்ற திரைப்படத்தின் இயக்குநர். “அடுத்து என்னன்னே போய்க்கிட்டு இருக்கு?” என்று யார் கேட்டாலும் “ஃபைனல் பண்ணியாச்சு… புரொடியூசர் வெளிநாடு போயிருக்கார். வந்ததும் உக்கார்ந்திரலாம்” என்பார். தற்போது டீக்கடை பெஞ்ச்சில் உட்கார்ந்திருக்கிறார். 90-களில் வெளிநாடு போன தயாரிப்பாளர் என்னும் கற்பனைப் பாத்திரம் நேற்று வரை சென்னை


SMS தோழி

 

 சமீபகாலமாக சுகுமாரனுக்கு ஒரு வினோதமான ஆசை. கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் ஆன பிறகு, இந்த ஆசை தோன்றுவது சரியா என்று அவர் மனசாட்சியால் கணிக்க முடியவில்லை. புதிரைத் தீர்ப்பதற்கு வினோத்தால் முடியும். வினோத்குமார். வயது இருபத்தெட்டு இருக்கும். அலுவலகத்தில் இளையவன். இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னைக்காரன். அவனிடம் இரண்டு செல்போன்கள் இருக்கும். ஒருவருக்கு எதற்கு இரண்டு செல்போன்கள்? ஒன்று உண்மை பேசவும், இன்னொன்று பொய் பேசவும் இருக்குமோ? ‘‘சிம்பிள் சார். ஒண்ணு பசங்களுக்கு… இன்னொண்ணு பெண்களுக்கு’’ என்று