கதையாசிரியர் தொகுப்பு: கௌரி அம்மாள்

1 கதை கிடைத்துள்ளன.

நீர் ஊற்று

 

 ”தபால்!” என்று கூவினான் தபால்காரன். கடிதத்தை வாங்கிக் கொண்டாள் கமலா. கடிதத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் சமயம் அவள் தகப்பனார் வந்தார். நல்ல வெயிலில் அலைந்து முகம் கன்றிப்போயிருந்தது. கொஞ்சம் தண்ணீரைச் சாப்பிட்டுவிட்டுத் தாழ்வாரத்தில் உட்கார்ந்தவர், ”யார் எழுதியிருக்கிறார்கள்?” என்றார் கமலாவைப் பார்த்து. கடிதத்தைப் படிக்கும்பொழுதே அவள் முகம் ஏனோ வேறுபட்டுக் கொண்டே வந்தது தெரிந்தது. தலையைத் தூக்காமலே, ”அவர் தாம்” என்றாள் தாழ்ந்த குரலில். ”இரண்டு மாச காலமாச்சு. ஒரு வரி இல்லை! என்ன வரிந்து