கதையாசிரியர் தொகுப்பு: கே.புதுராஜா

4 கதைகள் கிடைத்துள்ளன.

கவுரவக் கொலை!

 

 ஒரு மகன், தாயிடம் கேட்கக் கூசும் கேள்வி தான். ஆனாலும், வேறு வழியில்லை. இன்னும், எத்தனை நாள் தான் பொறுத்திருப்பான்? நாளை அவனுக்கென்று ஒருத்தி வந்தால், அவள் கேட்கும் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல், விழிக்கக் கூடாது பாருங்கள். அதற்கு முன்னதாகவாவது கேட்டுத்தானே ஆக வேண்டும். ஆம்… முடிவு செய்தான் ரமேஷ். இன்று, அம்மாவிடம் கேட்டே விடுவதென்று. அதற்காகவே, இன்று ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, வீட்டிலேயே இருந்தான். அப்பா வெளியில் போகும்வரை பொறுமை காத்தான். “”ஏம்பா ரமேஷ்…


ஈரம் பூத்த நெருப்பு!

 

 டேய் கஜா… அண்ணங் கேட்டார்டா… அமௌன்ட் எவ்ளோ கலெக்ஷனாயிருக்கீதுன்னிட்டு…? இன்னா… ஒரு மூணு… மூன்றை இருக்கும் தல.. “மூணா? மூன்றையா? ஒயுங்கா சொல்டா பேமானி.’ “அய! இன்னா சத்தாய்க்கிற. இன்னவோ நானே தூக்கிணு பூட்றாமாதிரி. இத்த நீயே எண்ணிப்பாரு’ என்றபடி தன் கையிலிருந்த லெதர் பேக்கை தூக்கிப் போட்டான் கஜா. கத்தை கத்தையாகத் திணிக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுக்களைப் பிரித்து எண்ணத் தொடங்கினார்கள். மூன்று லட்சத்து முப்பத்தையாயிரத்து எழுநூற்றைம்பது இருந்தது. பத்தாதேடா கஜா, ஒரு அஞ்சு ரூபாயாவது தேறும்னு


புதுக்குடித்தனம்!

 

 “”என்னங்க… காபி ரெடி. இதைக் குடிச்சிட்டு ஆபீஸ் கிளம்புற வேலையைப் பாருங்க. அப்புறம், இன்னிக்கு ஒருநாள், காலை டிபனும், மதிய சாப்பாடும், உங்க ஆபீஸ் கேன்டீன்லயே சாப்பிட்டுக்கோங்க. அது பிடிக்கலைன்னா, ஏதாவது ஓட்டல்ல சாப்பிட்டுக்கங்க. கொண்டு வந்து இறக்கி போட்ட சாமான்களெல்லாம் அப்படியே குவிஞ்சு கிடக்கு. இதெல்லாத்தையும் ஒழுங்குபடுத்தவே எனக்கு நேரம் சரியா இருக்கும்; சாயங்காலத்துக்குள்ள, முடியுமான்னு தெரியல. எதுக்கும் ஈவினிங் வரும்போது, ஓட்டலேர்ந்து ஏதாவது டிபன் பார்சல் வாங்கிட்டு வந்திடுங்களேன்,” என்றபடி, எதிர்புறமிருந்து பதிலைக் கூட


ஒரு திருட்டுப் பையனும் சில கடிதங்களும்…

 

 ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்தத் தனி வீட்டை ஒரு மாத காலமாகக் கண்காணித்து வந்த அவனுக்கு இன்றுதான் எண்ணம் ஈடேறியது. ஆம். அவன் எதிர்பார்த்தபடியே அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் இன்று காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்கள். இந்தத் தருணத்துக்காகத்தானே காத்திருந்தான்? ஆனாலும் இது நேரமல்ல என்பதால், இரவு வரை பொறுமை காத்தான். தன் ஆசைகள் நிறைவேறப் போவதை எண்ணிக் களித்திருந்த அவனுக்கு அன்றைய பொழுது போனதே தெரியவில்லை. இரவு மணி பத்து இருக்கலாம். அவன்