கதையாசிரியர் தொகுப்பு: கா.மது

8 கதைகள் கிடைத்துள்ளன.

சாட்சி

 

 பானுவுக்கும் அவளுடைய மூன்று பிள்ளைகளுக்கம் மிகுந்த சந்தோஷமான நாள். தடுப்பில் இருந்த நகுலன் இன்று விடுதலை. அந்த செய்தி கேட்டதில் இருந்து அவள் உள்ளத்தில் பெரும் சந்தோஷம். யுத்தம் நிறைவடைந்து எல்லோரும் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, நகுலனை ஓமந்தை இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு மூன்றான்டுகளாக புனர்வாழ்வு அளித்து இன்று சமூகத்தோடு இணைக்கும் நாள். யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் அரங்கு நிறைந்த கூட்டம் எல்லோருக்கும் சந்தோஷம். விடுதலையாகும் விடுதலைப்புலி உறுப்பனாகளின் முகத்தில் ஒரு ஏக்கம். நிகழ்வில் உரையாற்றிய


அடுத்த பொங்கலுக்கு!

 

 தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. இந்த பழமொழியை தை மாதம் பிறக்கும் முன்பே எல்லோரும் சொல்லிக்கொள்வார்கள். வழி பிறக்குதோ இல்லையோ ஒரு மன ஆறுதலுக்காவது சொல்வதுண்டு. காவிதாவுக்கும் அவளுடைய பத்துவயது மகன் திணேஸ்சுக்கும் கடந்த ஆறு வருடங்களாக தை பிறந்தும் வழி பிறக்கவே இல்லை. வன்னியின் சிறப்புக்களில் ஒன்றாக திகழும் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரன் எழுந்தருளியுள்ள ஒட்டுசுட்டான் கிராமத்திலேயே வாழ்ந்து வருகிறாள் கவிதா. அவள் இளம்வயதில் விளையாட்டாக கற்றுக்கொண்ட தையல் இன்று அவளுடைய குடும்ப


களிமண் கணினி

 

 முல்லைத்தீவுக்கு அண்மையில் உள்ள விவசாயக் கிராமமே முத்துஐயன்கட்டு. இங்கு வாழ்பவர்கள் தமது ஜீபநோபாய தொழிலாக விவசாயத்தினையே மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் இல்லையெனில் இவர்களுக்க வாழ்க்கையே இல்லை. பல்வேறு பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினை கொண்டே தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இவ்வாறு விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டு தமது சீவியத்தை நகர்த்தும் குடும்பமே வேலுவின் குடும்பம். மல்லிகா தோட்டத்தில் வேலை செய்யும் வேலுவுக்கு தேனீர் கொடுத்துவிட்டு இரவுக்கு சாப்பாடு


தாத்தா

 

 அன்று விடுமுறை நாள் சீலன் பாடசாலை செல்லவில்லை. இன்றைக்கு தாத்தாவுடன் நல்ல விளையாட்டுத்தான் என நினைத்துக்கொண்டு வெளியே வந்த சீலன் தாத்தா வழமையா இருக்கும் இடத்தில் காணவில்லை. தாத்தாவை எழுப்புவதற்காக பாடுத்திருக்கும் அறைக்குச் சென்றான். அங்கு தாத்தாவை காணாததால் அலறிக் கொண்டு ‘அம்மா அம்மா ……தாத்தாவைக் காணோம்….தாத்தாவை காணோம்…’ என கத்திக் கொண்டு ஓடிவந்தான். கிணற்றடியில் வேலைபார்த்துக் கொண்டுடிருந்த பங்கையம் சீலன் அலறிக் கொண்டு வருதை கண்டு ‘என்ர கத்திறா உங்கதான் இருப்பார் தேடிப்பார்’ என கூறிவிட்டு


துளசி..

 

 காலை வெய்யில் இதமாக அடித்துக் கொண்டிருக்க படலையடியில் ‘றீங் றீங்’ பெல் சத்தம் யாரெனப் பார்போம் என வெளியில் வந்தாள் துளசி. ‘அட செந்தில் அண்ணையே… வாங்கோ’ என்று கூப்பிட்டுக் கொண்டே படலையை நோக்கி நகர்ந்தாள் துளசி. ‘அது பிள்ளை வந்து.. வீட்டுத்திட்டத்துக்கு கொஞ்சபேற்ற பேர் நோட்டிஸ் போட்டில போட்டிருக்கு உன்ர பேரும் போட்டிருக்கு போல இருக்கு போய் பார்’ என்று கூறிவிட்டு புறப்பட்டார் செந்தில். துளசிக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி. படலையில் இருந்து ‘அம்மா அம்மா..’ என்று


வீடும் வளவும்

 

 சுமதி தெரிந்தவர்கள் எல்லோருக்கும் போன் எடுத்து ‘எங்கேயும் தெரிஞ்ச இடத்தில வீடு வடகைக்கு இருக்கிறதா’ என விசாரித்துக் கொண்டிருந்தாள். தாய் வசந்தி அடுப்படியில் சமையல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். மகள் வேலைக்கு போகும் முன் சமைத்து முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் சமைத்துக்கொண்டிருந்தாள். சுமதியும் தாய் வசந்தியும்; என்பத்தியொன்பதாம் ஆண்டு மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து இன்று சுன்னாகத்தில் வசித்து வருகின்றனர். இடம்பெயர்ந்த காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினையின் போது காணாமல் போன சுமதியின் தந்தை இன்னும் வரவில்லை


நினைவுகள்

 

 குண்டுகளின் வெடியோசை காதைப்பிளக்கின்றது, மல்ரிபரல் எறிகணையில் இருந்தும் ஆட்டிலெறி எறிகணைகளும் வீழ்ந்து வெடித்து கொண்டு இருக்கின்றது. பலர் உடல் சிதறிப் பலியாகியவண்ணம் இருக்கின்றார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் கயங்களுடன் எங்களைக் காப்பாறுங்கள் காப்பாற்றுங்கள் என கத்தியவண்ணம் இருக்கின்றனர். சுதா ஒரு ஆலமரத்துக்கு பின் ஒழிந்து கொண்டு “கடவுளே கடவுளே..” என வேண்டிக் கொண்டிருந்தான். அவன் அருகில் விழ்ந்து வெடித்த எறிகணையின் சிதறல் துண்டு அவன் வயிற்றப்பகுதியை பதம் பார்த்தது “நான் காயப்பட்டிட்டன் … நான்


ஒரு போதும் கூடாது….

 

 வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்திருவிழா நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அலைகடலென திரண்டு திருவிழாவில் சங்கமம் ஆனார்கள். காந்தனும் தனது மனைவி பிள்ளைகள் ஐவரையும் அழைத்துக்கொண்டு திருவிழாவுக்கு வந்திருந்தான். சன நெரிசலில் பிள்ளைகள் தவறிவிடுவார்கள் என அவர்களை காந்தனும் மனைவி ரதியும் கண்ணும் கருத்துமாக அழைத்து சென்றனர். ஆலயத்துக்குள் சென்று அருட்ஷனையினை செய்துவிட்டு பிரசாதத்தினை எடுத்து கொண்டு பிள்ளைகளுக்கு பேழையினையும் வேண்டி கொண்டு ஆலயத்தின் உட்பகுதியை விட்டு வெளியே வந்தனர். ஆட்கள் நடமாட்டம் ஓரளவு குறைந்த இடத்தில்