கதையாசிரியர் தொகுப்பு: எம்.எஸ்.அமானுல்லா

1 கதை கிடைத்துள்ளன.

வரால் மீன்கள்

 

 தாவூது மாஸ்டருக்கு உடனடியாகச் செயற்படும்படியாக இடமாற உத்தரவு கிடைத்த போது விக்கித்துப் போனார். அந்தக் கணமே தான் அந்தப் பாடசாலையிலிருந்து அந்நியப்பட்டுப்போன மாதிரியான உணர்வு…. சிறியதொரு காகிதத்துண்டினால் தனக்கும் அந்தப் பாடசாலைக்கும் இடையிலிருந்த உறவை, நட்பைப் பிரித்து விட முடியுமா? தானும், தனது பெற்றாரும் தொடர்ந்து கல்வி கற்று வந்த பாடசாலை… தனது மகனும் இங்குதான் கல்வி கற்க வேண்டி இருக்கின்றது…. இடமாற்றக் கடிதம் கிடைத்த போது காலை பத்து மணி. இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பாடசாலை எது