கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.சங்கர்

5 கதைகள் கிடைத்துள்ளன.

ஃபில்டர்காபியும், பைந்தமிழ்தேனீயும்…!

 

 “என்னடா சொல்ற! நாக்கில் எப்படிடா தேனீ கடிக்கும்?” என்றேன். “நிஜமாத்தான் சொல்றியா?” எனக்கு நம்புவதற்கு கடினமாக இருந்தது. “இதை பாரு!” என்றான், நாக்கை வெளியே நீட்டி. நாக்கின் நுனியிலிருந்து சென்டிமீட்டர் தூரத்தில், உள்ளே வெண்மையான, பழுப்பு நிறத்தில் சீழ் பிடித்த கொப்புளம் பட்டாணி அளவில் இருந்தது. அதை சுற்றிலும் இளஞ்சிவப்பு நிறத்தில், வரைந்தது போல் எல்லையிட்டிருந்தது. “எல்லாம் ஃபில்டர் காபியினால் வந்த வினை!” என்றான். ‘பில்டர் காபிக்கும், தேனீக்கும் என்ன சம்பந்தமாயிருக்கும்?’ மேலே தொடர காத்திருந்தேன். “நான்


ஒரு முடிவின் துவக்கம்

 

 “ஒரு ஆணிலியிடம் உதவி கோரி அரசப் பட்டத்திற்கு வருமளவிற்கு, அத்துணை தரம் தாழ்ந்து விட்டதா, பாண்டிய குலத்தின் வீரமும், மானமும்?” என்ற வீரபாண்டியன், மருத மரத்தின் பெரிய அடிமரத்தண்டில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அருகே ஆயிரத்தவர் படையின் தலைவன் கந்தசேனன் நின்று கொண்டிருந்தான். அவர்களுக்கெதிரே கொள்ளிடம் ஆற்றின் நீரோட்டம், மாலைக் கதிரொளியில் பொன்னிறத்தில் நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது. வீரபாண்டியன் அமர்ந்திருந்தது ஒரு தீவு. கொள்ளிடம் ஆறு கடலில் சேருவதற்கு முன், இரண்டாக பிரிந்து ஒரு மேட்டுப் பாங்கான நிலத்தை


முடிவிலியின் நிகழ்தகவு

 

 1. “அப்போ மனித பரிணாம வளர்ச்சி பற்றிய சார்லஸ் டார்வினின் இயற்கைத் தேர்வு மற்றும் தக்கன பிழைத்தல் கோட்பாடு தவறுண்ணு சொல்றீங்களா?” “அப்படி சொல்லவும் முடியாது. மனிதன் எப்படி தோன்றினான் என்று நிறைய பேர் அவங்கவங்க கொள்கைகளை உருவாக்கிச் சொன்னாங்க. அதில் டார்வின் அவரோட கருத்தை அறிவியல் பூர்வமாக விளக்கினார். அதை உலகம் ஏற்றுக் கொண்டது.” “என்னோட மனசுக்கு, நான் ஏற்றுக் கொண்ட கொள்கை, சரியாக இருக்குமென தோணுச்சு. அதான் அதை நீருபிக்க இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டேன்.


தெற்றுப்பல் சிரித்தது…

 

  நான் சொல்லப் போகும் விஷயம் உங்களுக்கு கண்டிப்பாக, நம்புவதற்கு கடினமாகத் தான் இருக்கும். என்னை மனப்பிறழ்வு ஏற்பட்டவன் என்று கூட நீங்கள் நினைக்கலாம். அதற்காக நான் வருந்தப் போவதில்லை. இந்த கதையை வாசிக்கத் தொடங்கியதால், உங்களுக்கும் நம்புவதை தவிர வேறு வழியில்லை. தெற்றுப் பல் என்றதும் உங்களுக்கு தோன்றுவது என்ன? நடிகை சித்தாரா, பாவனா, போன்ற தெற்றுப் பல் அழகிகளின் புன்னகை தானே. ஆம், பெண்களுக்கு அழகாகத் தான் இருக்கிறது. எனக்கும் அவர்களைப் போல தெற்றுப்பல்


குப்பை

 

 “ம்ம்மா…, குப்பேய்…!” அடித்தொண்டையிலிருந்து கிளம்பிய குரல், இரண்டு பக்கமும் அப்பார்ட்மென்ட் கட்டடங்களும், மாடி வீடுகளும் நெருக்கியடித்து நின்றிருந்த அந்த வீதியின் தொடக்கத்திலிருந்து கேட்டது. குரலின் தொடர்ச்சியாக வீதிக்குள் திரும்பி கொண்டே, நுழைந்தது இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்ட, அடர்த்தியான பச்சை நிற குப்பை வண்டி. வண்டியின் உள்ளே இரண்டு பெரிய பிளாஸ்டிக் ட்ரம்கள். பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களில், வெயிலில் வெளுத்துப் போய் கிட்டத்தட்ட பச்சையாகவும், சிவப்பாகவும் இருந்தன. வண்டியின் ஒரப்பகுதிகள், ட்ரம்களில் மாநகராட்சியின் பெயர், வெள்ளை பெயிண்ட்டால்