கதையாசிரியர் தொகுப்பு: ஆதிரை சுப்பிரமணியன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

தீ விழா

 

 “ஊர்த் திருவிழான்னு ஏன் எங்களை அசிங்கப்படுத்த பெங்களூரர்லர்ந்து கூட்டி வந்த? ஆறுமுகம் ” என்ற எனது உரத்துக் கத்திய கூச்சலுக்கு. பனந்தோப்பில் சரக்கடிக்க சேர்ந்த அந்த ஊர் நண்பர்கள் ஆறுமுகம் பெருமாளும் அவர்கள் இருவரது நண்பர்களும் அதிர்ந்தனர். சரக்கு ஏறுமுறன்னேயே நான் மப்பில் பேசியதாய் நினைத்தார்களோ என்னவோ “சத்தம் போடாத மணி”. என் கம்பெனி டீம் மெம்பரும் சகாவுமான ஆறுமுகத்தின் ஊர்க்காரனுமான பெருமாள் எச்சரித்தான். ஊருக்குள்ளே இங்கு பேசிய விஷயம் விஷமாகக் கூடாது என்று ஆறுமுகம் அவன்


நொண்டிக் காக்கா!

 

 “என்ன ராஜா அப்படிப் பார்க்கர? நீ படிச்ச வெட்னரில இந்த காக்கா ஊனத்தை சரி பண்ண வழியிருக்கா பாரு” சிரித்துக் கொண்டே சோற்றை காக்கை கூட்டத்தில் வீசியெறிந்தார். தினமும் காக்கை, அணில் மற்றும் புறாக்களுக்கு உணவளிப்பதை வழக்காக கொண்ட ஆர்மி ரிடையர்டு சோல்ஜர். “இதுல ஒரு கண்றாவியான நிலைமை என்னன்ன நல்லா காலு இறக்கையியிருக்கிற காக்காவோட போட்டி போட்டு நொண்டி நொண்டி சண்டை போட்டு போட்டி போட்டு சாப்பிடனும். மத்த காக்கா பச்சாதாபம் காட்டாது தெரியுமோ?” என்று


கணக்கு பிணக்கு புண்ணாக்கு

 

 முட்டாள்? மாத்ஸ், சயின்ஸ் வராட்டி பள்ளிப் படிப்பை விட்டுட்டியா? சரி இப்போ என்ன பண்ற? வனஜா எங்க ஊருப் பொண்ணு சென்னைல காலேஜ் படிக்கிறவ கேட்டாள் என்னை நாக்கு பிடுங்கி சாகிற மாதிரி. என் வீட்டிற்கு எதிர் வீட்டு பொண்ணு. சின்ன வயசில பாண்டி ஆடியது. ஒன்னா கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சோம்.அவளை அப்பவே அவ மாமா நல்லா படிக்கிற பொண்ணூன்னு மெட்ராஸ் கூட்டிக் கொண்டு போனவர். நான் ஒம்பதாங் கிளாஸ் முழுப்பரிட்சை எழுதின கையோட என் மாமாவோட


நீந்தத் தெரிந்த ஒட்டகம்

 

 “இந்தியா மலேசியா பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் தொழிலாளி என்றால் அதிகம் கொடுக்க வேண்டும். கொஞ்சம் படிப்பு வாசனையிருக்கும். பங்களாதேஷ் பாகிஸ்தான் இந்தோனேசியா சம்பளமும் குறைவு.பள்ளிப் படிப்பு பாதி முடித்தோர் இருப்பார்கள்.” மஸ்கட் நகரில் வீட்டு வேலை, சமையல் செய்ய ஹவுஸ் மெய்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை என்றதற்கு ஏஜென்சி கொடுத்த தகவல்.அவர்கள் விளக்கம். “பரவாயில்லை பாகிஸ்தான் பங்களாதேஷ் “ஆக இருக்கட்டும் என்றேன். ஆகட்டும் ஓரிரு மாதத்தில் விசாவோடு வரவழைப்பதாய் ஏஜன்ட் சொன்னார்கள். “உன் பெயர் என்ன”