கதையாசிரியர் தொகுப்பு: அ.எக்பர்ட் சச்சிதானந்தம்

5 கதைகள் கிடைத்துள்ளன.

பிலிப்பு

 

 குடிசைக்குள் மயான அமைதி. கட்டிலில் வதங்கிய செடியாகப் படுத்திருக்கும் பிலிப்புவின் வெறிச்சோடிய பார்வை. படுக்கைக்கு முன் நான் மட்டும் தனியாக நாற்காலியில். பக்கவாதக் கணவனை விட்டுவிட்டு எங்குதான் போயிருப்பாள் வேதம்? மணி ஐந்து. வேதத்தை இரண்டாந்தாரமாக பிலிப்பு கல்யாணம் செய்துகொண்டபோதுதான் நான் கடைசியாக இந்தக் குடிசைக்கு வந்தது. ‘பிலிப்பண்ணே..’ ஐந்தாவது முறையாகக் கூப்பிடுகிறேன். பார்வையில் உணர்ச்சியற்ற லேசான அசைவு. அவ்வளவுதான். பளிச்சென்ற சுத்தமான தரை. பினாயிலின் மெலிதான நெடி. பக்கவாத நோயாளியின் வீடு என்று நம்புவதற்கு கடினமாக


ஒப்பனையுதிர் காலம்

 

 மேற்புறத்தில் படிந்திருந்த தூசியைத் தட்டியபடி மைலாப்பூர் கோவிந்தன், புத்தகத்தைக் கொடுத்தான். ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ முதற்பதிப்பு கொடுத்த மகிழ்ச்சியை விட, அதிலிருந்த பெயர் அதிக அதிர்ச்சியைக் கொடுத்தது. கே. சாமுவேல் அமிர்தசாமி, உ.வெ.சா. தெரு, தாம்பரம். அதே கோழி கிறுக்கிய கையெழுத்து. “சும்மா சொல்லக் கூடாது சார், பெரிய புதையல், அந்த வீட்டு அம்மாவே போன் பண்ணி வரச் சொன்னாங்க” “வீட்ல இவரு இல்லையா?” என்று சாமுவேல் பெயரைக் காட்டினேன். “அவரு நம்ம ரெகுலர் கஸ்டமர் சார்.


சோதோம் பட்டணம்

 

 நிலா வெளிச்சம் ஊருக்குள்ள நுழைய முடியல. பனிமூட்டமும், தூசும் சோதோமை போர்வையா போர்த்திகிட்டு இருக்கு. ஊர் முழுக்க கும்பல், கூச்சல், குடியாட்டம். உடம்புல ஒட்டுத்துணி கூட இல்லாம செலர் ஓடுறாங்க. அவங்கள துரத்திக்னு இன்னொரு கும்பல். மரத்தடியில, கூடாரத்துல அய்யோ… இன்னாது… கீழே கெடத்தி அவுங்க மேல ஏறி உட்கார்ந்துக்னு வலிக்குதே.. அம்மா… வுடுங்கடா என்னை வுடுங்கடா வலிக்குதுடா… +2, காலேஜ் பசங்க இங்க எப்படி வந்தாங்க? என்தொடை வழியா ரத்தம் வழியுதே… சதை மரம் ஒன்னு


மலையின் தனிமை

 

 கருகிய காகித அடுக்குகள் கிணற்றடியில் புரண்டு கொண்டிருந்தன. உடைந்த சில காகிதத்துண்டுகள் காற்றில் நகர்ந்து, காம்பவுண்டு சுவரில் ஏறமுயன்று பின் கீழே விழுந்து சிதறின. ஒரு குச்சியால் பிரிசில்லா காகித அடுக்குகளைப் புரட்டினாள். கறுப்புத் துகள்கள் குபுக்கென்று எழுந்தன தீய்ந்த நாற்றத்தோடு. அடுக்குகளுக்கு அடியில் நீலநிற டைரி ஒன்றும், வேறு இரண்டு நோட்டுகளும் ஓரங்கள் எரிந்த நிலையில் கிடைத்தன. நோட்டுப்புத்தகங்களில் கிரேசுக்கு எழுதிக் காண்பித்தவை இருந்தன தேதி வாரியாக. 2013 டைரியில் திறந்தாள். மார்வெல்ஸ் செல்வநாயகம் என்று


நுகம்

 

 ரவுண்ட் பங்களா எதிர்புறக் கிணற்று மேட்டில் இவள் தேவன்புடன் உட்கார்ந்தாள். வராண்டாவில் அங்கியினுள் ஏரியா சேர்மன் இருந்தார். இடுப்புக் கறுப்புக் கயிற்றின் முனை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அருகில் சபை ஊழியரின் வழுக்கைத் தலை செவ்வகத்தில் மின்னியது மூங்கில் தட்டி வழியே. எதிரே கைகட்டி நின்றவர்கள் யாரென்று தெரியவில்லை இவளுக்கு. வாசலில் சிம்சன், நேசமணி, அருள் இன்னும் மூவர் நின்றிருந்தனர் பயம், பணிவுடன். “விசுவாசத்தோடு லெட்டரை கொண்டு போய் குடுய்யா. கட்டாயம் செய்வாரு.” “தயானந்தம் தட்டமாட்டாருபா சேர்மன்