கதையாசிரியர் தொகுப்பு: அமுதா பாலகிருஷ்ணன்

1 கதை கிடைத்துள்ளன.

வரப்பு

 

 என்ன கோபாலு இந்தப்பக்கம்…? எங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டியே…என்ன விசேஷம்?” “”இல்ல மச்சான்…உங்களைத்தான் பாத்துட்டுப் போகணும்னு வந்தேன்” “”வா…வா…உட்காரு! யம்மா…யார் வந்திருக்கான்னு பாருங்க…! நம்ம கோபாலு” “”யப்பா…வா…ஆயிரம் வாட்டி இந்தத் தெருவுல போவ…ஆனா ஒரு வாட்டிகூட வீட்டுக்குள்ள வந்ததில்ல…இன்னைக்கு மச்சான் இருக்கான்னு தெரிஞ்சி வந்திரிக்கியாக்கும். எப்படியிருக்க? தொழிலெல்லாம் எப்படியிருக்கு…?”ன்னு கேட்டுகிட்டே குறுங்கட்டில்ல வந்து உட்கார்ந்தாங்க மாடசாமியோட அம்மா. “”யய்யா…கோபாலு என்ன சோலியா வந்திருக்கானாம்…?” “”தெரிலம்மா…இப்பத்தான வந்திருக்கான்” என்றான் மாடசாமி. “”யய்யா…இரு; நான் காப்பித்தண்ணி கொண்டாரேன்”-எழும்ப முயன்ற அவர்களை…””வேண்டாந்த்த…நீங்க உக்காருங்க