கதையாசிரியர் தொகுப்பு: அன்புசெல்வம்

1 கதை கிடைத்துள்ளன.

மலைச்சாமியோட மயான காண்டம்

 

 ஒசக்க மத்தியானம் பன்னெண்டு மணி இருக்கும். தத்தனேரி சுடுகாடு அம்புட்டும் ஒரே பொகை. அஞ்சு சுடலை கொட்டியிலும் பொணம் ஒன்னு விட்டு ஒன்னு பதமா எரிஞ்சிக்கிட்டிருக்க ஒத்த கொட்டி மத்தர‌ம் வெறகு, எருவாட்டியோட‌ வெறிச்சோடி கெடந்திச்சு. யாருக்காண்டியோ! அங்கனயே கரண்ட்டு அடுப்புலயும் பொணம் பொசுக்குறாங்க. ஒரே நேரத்தில‌ ரெண்டு அடுப்புல பொணம் எரிக்கலாம். ஒத்த அடுப்புல பொணம் எரிஞ்சி, கூண்டு வழியாகப் பொகையை கக்க‌, எதிர்த்தக்கூடி இருந்த ரேடியா செட்ல ‘சமரசம் உலாவும் இடமே’ பாட்டு படிச்சிக்கிட்டிருந்திச்சு.