கதைத்தொகுப்பு: மல்லிகை

ஈழத்து இலக்கியச் சிற்றிதழ் வரலாற்றில் மல்லிகை எனும் சிற்றிதழ் முக்கியமானது. 1966 ஓகஸ்ட் மாதம் முதலாக, 47 ஆண்டுகள் வெளிவந்து, இலக்கியச் சாதனை நிகழ்த்திய இந்த மாதாந்த இதழின் ஆசிரியர், எழுத்தாளர் டொமினிக் ஜீவா. ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இவ் இதழ், பின்னர் கொழும்பிலிருந்து வெளியாகியது.

சுதந்திர இலங்கையில் நிகழ்ந்த அரசியல் நிலவரங்களைப் பல்வேறு படைப்புகளூடாக வெளிப்படுத்தியதுடன், இலங்கைத் தமிழ் இலக்கியத்தைத் தமிழக எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தும் பணியையும் மல்லிகை மேற்கொண்டது. இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பலரும் மல்லிகையில் எழுதினர். தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் மல்லிகையில் எழுதியுள்ளனர்.

இலங்கையின் முற்போக்கு இலக்கிய முக்கியஸ்தர்கள் மல்லிகைக்கூடாகவே நன்கறியப்பட்டனர். அவர்களின் எழுத்துக்களை அறிவதற்கு மல்லிகை பயன்படும். இன்னும், கருத்துநிலை ரீதியில் மாறுபட்ட எழுத்தாளர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் முதலியோரின் எழுத்துக்களையும் மல்லிகையில் காணலாம். பிற்காலத்தில் வரலாற்றில் நன்கறியப்படும் பலரும் மல்லிகையூடாகவே அறிமுகம் பெற்றனர். மல்லிகையின் பெரும்பாலான இதழ்களின் அட்டைப்படங்கள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், விமர்சகர்கள் முதலியோரில் ஒருவரின் ஒளிப்படத்தைத் தாங்கியிருந்ததுடன், அவர் பற்றிய அறிமுகம் கட்டுரையாகவும் இதழினுள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், இலக்கியச் சர்ச்சைகள், நூல் அறிமுகங்கள், வாசகர் கடிதங்கள் முதலிய பலவும் மல்லிகையில் வெளியாகின. மேலைநாட்டு இலக்கிய மேதைகளின் படைப்புகள் பலவும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மல்லிகையில் வெளியாகின. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள எழுத்தாளர்களில் பெரும்பாலானோரின் படைப்புகள் மல்லிகையில் வெளியாகின. மல்லிகையில் வெளிவந்த இவர்களது படைப்புகள் பலவும் பின்னர் மல்லிகைப் பந்தல் வெளீயீடாக வெளிவந்தன. ஒவ்வொரு வருடமும் தைமாத இதழ் ஆண்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது.

தமிழ் இலக்கியம் என்ற பெருவெளியில், இலங்கைத் தமிழ் இலக்கியம் என்ற அடையாளத்தைத் தக்கவைத்ததிலும், விரிவாக்கி வளர்த்ததிலும், நவீன இலக்கியத்தைச் சனநாயக மயப்படுத்தியதிலும், பிரதேச இலக்கியத்தளத்திற்கு முதன்மையளித்ததிலும் தமிழ் உலகில் மிக நீண்டகாலம் வெளிவந்து பணியாற்றிய ஒரே இதழ் என்றவகையிலும் மல்லிகைக்கு முக்கிய பங்குண்டு. 04.07.2001 இல், இலங்கைப் பாராளுமன்றத்தின் ஹன்சாட்டில், பாராட்டுடன் கூடிய பதிவைப் பெற்றது.

185 கதைகள் கிடைத்துள்ளன.

மரநிழல் மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 7,917

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அக்கா சற்று சந்தோஷமான மனநிலையில் இருப்பதுபோலத்...

நண்பனே.. எனது உயிர் நண்பனே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 8,075

 எனக்கு நீண்டகால நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு நிமிஷம் இருங்கள்! ‘இருந்தான்’ என்றா சொன்னேன்? அப்படிச் கூறினால் அவன் இப்போது...

பாம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 8,686

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உங்களைப் பயமுறுத்துவதற்காக இந்தக் கதையை எழுதவில்லை....

மீட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 8,431

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விடியாத காலையைப்போல பொழுது மப்பும் மந்தாரமுமாக...

தெரியாத பக்கங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 10,327

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த வீட்டின் வாசலுக்கு வந்து சைக்கிளை...

ஒரு பிடி சோறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2014
பார்வையிட்டோர்: 17,448

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் ஒரு விசித்திரமான பெண் என்று...

முயல்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 9,011

 (1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையில் வழக்கம்போலக் கத்திரிச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சத்...

உயிர்க்காற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 8,943

 கதை ஒன்று.களம் : இலங்கை படார்’ என்றொரு சத்தம். நான் விழித்துக் கொண்டேன். இரவுப்பொழுதாகையால் அந்தச் சத்தம் பெரிதாகக் கேட்டது....

இட்ட அடி நோக…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 17,256

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யூனிவர்சிட்டிக்குக் காலடி எடுத்துவைத்த முதல்நாளே அப்படியொரு...

முட்கிரீடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 21,632

 வெள்ளவத்தையிலுள்ள அந்த கல்யாண சந்தைக்கு சாரு வருவது இது முதற் தடவையல்ல ஏற்கனவெ பல எல்லைகள் கடந்த ஒரு யுகமாக...