யாருக்கு மாப்பிள்ளை யாரோ…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
இணைய வெளியீடு: November 7, 2026
முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 160 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

என்னடி சொல்ற.. லவ் பண்றாளா.. கேட்டுட்டு ஜடம் மாதிரி அப்படியே நின்னுட்டிருந்தியா ஓங்கி ஒரு அறை விடாம..  மனைவி காயத்திரியிடம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார் செல்வந்தரும், தொழிலதிபரும், நாணயஸ்தரருமான ராமலிங்கம்..  உனக்கு தெரியாதா, அவ பொறக்கும் போதே என்னோட பால்ய நண்பன் சுந்தரேசனோட பையனுக்குத்தான் அவளை பேசி வெச்சிருக்கோம்னு..

மறந்துட்டியா.  இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே  அதை கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் அவர்களது மகள் ரம்யா..

அப்பா.. நீங்க போட்ட பழைய பைத்தியக்கார சத்தியத்தை நிறைவேத்தரதுக்காக எல்லாம் எவனையாது கல்யாணம் பண்ணிக்க முடியாது. எந்த காலத்துல இருக்கீங்க என்று சொல்லும்போதே, பளார் பளார் என கன்னத்தில் அறைந்தார் ராமலிங்கம். 

என்னங்க விடுங்க.. விடுங்க.. என்று மீண்டும் கையை ஓங்கிக் கொண்டு வந்தவரை தடுத்தாள் காயத்ரி.. நான் பேசறேன் விடுங்க, பேசிப்பாக்கறேன். போங்க தூர.. ப்ளீஸ்..

அம்மா.. இதோ பாரு பைனலா சொல்லிட்டேன்.. யார் சொன்னாலும் கேக்க மாட்டேன். என் மேரேஜ் அவன்கூடத்தான்.. என்ன பண்ணுவாரு, மிஞ்சி மிஞ்சி போனா, சொத்துல சல்லிக்காசு கிடையாதும்பாரு. ஜ டோன்ட் கேர்.. 

ஹோ.. ஹோ.. அப்படியா சங்கதி.. உனக்கெல்லாம் ஷாக் ட்ரீட்மென்ட் தான் இனிமேல்.  உள்ளே போக ரெடியா இரு. காயு.. ஒரு ஒயிட் ஷீட் எடுத்துட்டு வா என்று  கூறிவிட்டு உள்ளே சென்றார் ராமலிங்கம்..

அண்ணா நகர் காவல் நிலைய வளாகம்.. அய்யோ..அய்யோ.. அய்யா.. அய்யா. வலிக்குதுயா, தாங்க முடியலயா. உள்ளே இருக்கும் கைதிகள் மூவரை வழக்கம்போல வெளுத்து வாங்கிவிட்டு உடைந்த லத்தியை மேசையில் வைத்தவாறு கான்ஸ்டபிளிடம்.. 302.. யாருப்பா வெளியில ஒரு பெரியவரும் ஒரு அம்மாவும்.. ஒரு பொண்ணு வேற உட்க்கார்ந்துட்டிருக்கு தனியா..

அய்யா..அவர் பேரு ராமலிங்கம். மேலிடத்திலிருந்து ஒரு கால் வேற வந்துடுச்சி அவர் புகார விசாரிக்கச் சொல்லி. குடும்பத் தகறாரு போலத் தெரியுது என்று கூறினார்.. 

சார்.. உள்ளே கூப்பிடறாரு இன்ஸ்பெக்டர் போங்க. 

எக்ஸ்கியூஸ் மீ என்று உள்ளே வந்தவரை.. மிஸ்டர் ராமலிங்கம் உள்ள வாங்க. டேக் யுவர் சீட். நீங்களும் தாம்மா.. இருவரும் அமர்ந்தனர். 

அப்பறம்.. சொல்லுங்க. என்ன ப்ராப்ளம்.. வெளியே இருக்கிறது உங்க பொண்ணா..

சார்.. உங்களுக்கு என்னோட கேஸ் வேடிக்கையா கூட தோணலாம். இப்படி எல்லாம் கூட பெத்தவரு இருப்பாரான்னு. ஆனால் இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி ட்ரீட்மென்ட் அவசியம்.. என் பொண்ணு.. சாரி.. அந்த பொண்ணு எங்களை ச்சீட்டிங் பண்ணிருக்கா. 27 லட்சம் ரூபாய் எங்களுக்கு செட்டில் பண்ணிட்டா.. அவங்களை நாங்க ஒண்ணும் கேட்க மாட்டோம்.  

என்ன சொல்ரீங்க பெத்த பொண்ணு ச்சீட்டிங்கா.. விவரமா சொல்லுங்க சார்..

லவ் பண்ணிருக்கா சார்.. 

அதுல என்ன தப்பு. அவங்க மேஜர் தானே..

Of course.. இவ்வளோ நாளா பெத்து, வளர்த்து, படிக்க வெச்ச எங்களுக்கு கல்யாணம் மட்டும் பண்ணித்தரத் தெரியாதா. அது மட்டும் அவங்க ச்சாய்ஸா.  அதான்  பிறந்ததுலே இருந்து, இந்த 20 வருஷம் அவளுக்காக நாங்க செலவு செஞ்ச பணம் 27 லட்சம்.. இந்தாங்க லிஸ்ட்.. இதை செட்டில் பண்ணிட்டு அவ யார் கூட வேணும்னாலும் போகட்டும் என்று மனைவிக்குத் தெரியாமல் இன்ஸ்பெக்டரிடம்  கண் ஜாடை காட்டி.. அவங்களை விசாரிச்சி  வாங்கிக் தந்துடுங்க என்றார்.. 

ரம்யா மேடம் உள்ள வாங்க. உங்க அப்பா சொல்றது எல்லாம் உண்மையா.. அவர் தந்த 27 லட்சம் லிஸ்ட்டில் எதாவது பிழை இருக்கா.. 

அமைதியாக இருந்தாள். மேலும் கூறினாள்.. பெத்த பொண்ணு கிட்ட அவளுக்காக இவ்வளவு செலவு பண்ணிருக்கேன்.. எடுத்துவைன்னு சொல்லி நீங்க கேள்வி பட்டிருக்கீங்களா. அநியாயமா இல்ல. இது அவங்க கடமை.

ஓஹோ.. அப்படின்னா கல்யாணம் செஞ்சி வைப்பதும் அவங்க கடமைதானே..

No..no.. அது என்னோட உரிமை. I am major. 

அப்படி என்றால் அவர் உங்களுக்காக, உங்கள் வளர்ச்சிக்காக செலவு பண்ண பணத்தை திரும்ப கேட்பதில் தப்பு இருக்கிறதா எனக்குத் தெரியல மேடம். நீங்களும் அந்த லிஸ்ட்டை dispute பண்ணல. அவங்க ஏமாந்துட்டதா ஃபீல் பண்றாங்க,  நியாயம் தானே.. உங்களுக்கு விருப்பப் பட்டவங்களை அவங்களுக்கு தெரியாம, அவங்களுக்குச் சொல்லாம நீங்க லவ் பண்ணுவீங்க.. அது உரிமைம்பீங்க. ஆனா அவங்க செலவு செஞ்சது மட்டும் எப்படி கடமை ஆகும்  மேடம். வேடிக்கையா இருக்கு. அந்த பணத்தை நீங்க செட்டில்மென்ட் பண்ணலேன்னா உங்க மேல cheating case புக் பண்ண வேண்டி வரும். தொகை பெருசா இருக்கிறதுனால, நான் வேண்டுமானால் பேசி கொஞ்சம் டைம் வாங்கித் தரேன். That’s all I can do. யோசிச்சிக்கோங்க.

உண்மையிலேயே இப்போது தான் கொஞ்சம் நடுங்கினாள்.

சார.. எங்கப்பா கிட்ட இல்லாத பணமா. இந்த 27 லட்சம் வந்தா பெருசா ஆயிடப்போது அவருக்கு. என்கிட்ட இவ்வளோ பணம் கேட்டா நான் எங்கே போவேன். நீங்க விசாரிக்கிற விதமே சரியில்லை இன்ஸ்பெக்டர். 

மேடம்.. தேவையில்லாத பேசாதீங்க. F.I.R போட்டுவிட்டால் கோர்ட் கேஸ்னு அலைவீங்க. பறவாயில்லையா. அது சரி.. நீங்க லவ் பண்ற நபர் யாரு? அவருக்கு தெரியுமா இதெல்லாம். 

அவன் வெளியூர் போயிருக்கான். சிக்னல் கிடைக்காதுன்னு சொல்லிட்டிருந்தான். இன்னிக்குத்தான் வந்திருப்பான். வெயிட்.. பேசிட்டு வரேன் இன்ஸ்பெக்டர். அவங்கிட்ட பேசினாலும் இவர் கேட்கிற பணத்தை எப்படி தர முடியும் நாங்க. 

உங்க தெய்வீகக் காதல் கல்யாணத்துல முடியணும்னா நீங்க பேசித்தான் ஆகணும். 

டேய் இன்பா.. எப்படா வந்த. இங்கே ஒரே பிரச்சனை. நான் இப்போ போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கேன். 

என்னது? போலீசா.. நம்ம லவ்வ பத்தி என்ன பத்தி எல்லாம் சொல்லிட்டியா.

பதறாத. அதெல்லாம் சொல்லல. நடந்ததை கூறினாள். 

ஏன்டி லூசு.. எப்படி அந்த மாதிரி உங்க சொத்துல  சல்லிக்காசு கூட வேணாம்னு சொல்லுவ என்ன கேட்காம. எவ்வளவு நாளைக்கி ஒருத்தன் கிட்ட அடிமையா வேலை செய்யறது. நம்ம கல்யாணம் நடந்துச்சுன்னா அங்கிள் பிஸுனசை பாத்துட்டு, பொறுப்பா, ஜாலியா இருக்கலாம்னு எல்லாம் பேசிருக்கோமே, தெரியாதாடி. கெடுத்துட்டியே எல்லாத்தையும். 

டேய் அதெல்லாம் சரி. இப்போ அவர் முரண்டு பிடிக்கிறாரே.. என்ன பண்றது. என்னை நீ நெசமா லவ் பண்றியா இல்லையா.. இப்போ அவ்ளோ பணத்துக்கு நான் எங்க போவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மறுமுனையில் கால் கட் ஆனது..

திரும்ப கால் செய்தாள். கட் செய்தான். திரும்பத் திரும்ப கால் செய்தாள். No response. வாட்ஸப்பில் attend my call.. Please call me.. Dont angry with me da..என்று மெசேஜ் அனுப்பினாள். No response. ஒரு கட்டத்தில் அவனது வாட்ஸப் profile picture empty யாக இருப்பதைக் கண்டு தன்னை பிளாக் செய்திருப்பதை உணர்ந்தாள். திரும்பவும் கால் செய்தாள். The number you have dialled does not exist என்று மறுமுனையில் கூற.. விபரீதமாக உணர்ந்தாள். கலக்கத்துடன் இன்ஸ்பெக்டர் அறையில் நுழைய.. 

மேடம்.. என்ன சொல்றாரு உங்க இன்பவாணன்.. வித்தியாசமான பேர் இல்ல. இந்தாங்க இதுதானே அவர் போட்டோ. என்ன நடந்திருக்கும்னு உங்க முகத்தை பார்த்தாலே தெரியுது.

திகைத்தாள். சார் உங்களுக்கு எப்படி. 

உங்க ப்ரென்ட்ஷிப் இன்ஸ்டா மூலமா, ஃபேஸ்புக்கா? இல்ல இரண்டுமா? He is habitual offender. சில மாசங்களுக்கு முன்னால் இதே மாதிரி வேற ஒரு பொண்ணை ஏமாற்றி எங்க ஸ்டேஷன்ல தான் அவனை warning பண்ணி அனுப்பினோம்  எதிர்காலம் வீணாயிடுமேன்னு FIR போடாமல். இப்போ.. இதோ.. உங்க கிட்ட. தூக்கிட்டு வர டீம் அனுப்பியாச்சி. ஒரு கம்ப்ளைன்ட் தருவீங்களா.. 

Sure Inspector. ஆவேசமாக எழுதினாள் பேப்பர் நனைய நனைய. சார் எனக்கு ஒரு டவுட்டு.. 

ராமலிங்கம் சார்.. ப்ளீஸ் சஸ்பென்ஸ் வேணாமே. ரொம்ப பயந்து போயிருக்கா. சொல்லிடவா..

ராமலிங்கம் தலை அசைக்க.. மேடம் உங்கப்பா ஒரு பிஸினஸ்மேன். தன் பொண்ணு யாரு கூட எங்க சுத்தறான்னு கூட தெரிஞ்சிக்காமவா இருப்பாரு. அவர் தந்த போட்டோதான் இது. அந்த போட்டோவை பார்த்த பிறகு தான்.. இவன் ஏற்கனவே இங்கு விசாரிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பிய விவரமெல்லாம் எங்களுக்கு தெரிய வந்தது. 

ஓடிச்சென்று அப்பாவை கட்டி அணைத்தாள். சாரிப்பா.. சாரிப்பா என்று மறுபடியும் மறுபடியும கூறிக் கொண்டிருந்தவளிடம், இதோ பார் ரம்யா.. இவன் கெட்டவன். பொறுக்கின்னு அப்பா அம்மா சொல்லி இருந்தா உன் மண்டையில ஏறி இருக்குமா.

கண்டிப்பா ஏறி இருக்காதுப்பா. 

அதோட ஒரு Financial pressure உம் சேர்த்து தரும்போது தானே இதோட சீரியஸ்னெஸ் புரிஞ்சது உனக்கு. 

Yes pa. இது உண்மையிலேயே ஷாக் ட்ரீட்மென்ட் தான் எனக்கு. சாரி.. சாரி என்ன மாதிரி பொண்ணுங்களுக்கு.

ஒக்கே இன்ஸ்பெக்டர், கெளம்பறோம். ரொம்ப நன்றி என்று மூவரும் கிளம்பி காரில் ஏறும் சமயம்.. போலீஸ் ஜீப்பில்.. இன்ப வாணன்.. 

ஓடிச்சென்று ஓங்கி அறைந்தாள் கை ஓயும் வரை. 

அவன் கையில் விலங்கு. இவள் கழுத்தில் தாலி தந்தையின் ஆசைப்படி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *