நீ.பி.அருளானந்தம்

நீ.பி.அருளானந்தம்

நீ. பி. அருளானந்தம் இலங்கையின் இலக்கியத் தளத்தில் நாவல், சிறுகதை, கவிதை எனப் பல்துறைகளிலும் பங்களிப்பு வழங்கி வரும் ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளர் ஆவார்.

பிறப்பும் பின்னணியும்

இவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி இலங்கையின் வவுனியாவில் உள்ள சூசைப்பிள்ளையார்குளம் என்ற இடத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த ஹென்றி தம்பித்துரை தம்பிமுத்து மற்றும் சில்லாலையைச் சேர்ந்த லூர்தம்மா தம்பதியினரின் மகனாவார். வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார்.

இலக்கியப் பணிகள் & நூல்கள்

புனைகதை இலக்கியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவர், சோழப் பேரரசின் வரலாற்றுக் காலத்தைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்றுப் புதினங்களையும் சமூக நாவல்களையும் எழுதியுள்ளார்.

இவரது குறிப்பிடத்தக்க சில படைப்புகள்:

  • இந்த வனத்துக்குள் (நாவல்)
  • மௌனமான இரவில்
  • சொர்க்கத்தில் முடிவான பந்தங்கள்
  • ஆப்பிள் பழவாசமும் நெருஞ்சி முட்களின் உறுத்தல்களும்
  • பதினாறாம் நாள் சந்திரன்
  • துயரம் சுமப்பவர்கள்

கதைகள்

நீ.பி.அருளானந்தம்

தன்னுடைய சிறந்த எழுத்துப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவரைப் பற்றிய விரிவான ஆவணங்களை தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலகம் நிறுவனம் பக்கங்களில் காணலாம்.

ஆசிரியரின் நூல்கள் 

சிறுகதைத் தொகுதிகள் 

மாற்றங்கள் மறுப்பதற்கில்லை 
கபளீகரம் 
ஆமைக்குணம் 
கறுப்பு ஞாயிறு (அரசின் சாகித்திய விருது பெற்றது) 
அகதி 
ஒரு பெண்ணென்று எழுது 
வெளிச்சம் 

நாவல் 

வாழ்க்கையின் நிறங்கள் (அரசின் சாகித்திய விருது பெற்றது வடமாகாண சாகித்திய விருதும் பெற்றது ) 
துயரம் சுமப்பவர்கள் 

கவிதை 

வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து (2008ம் ஆண்டு அரச இலக்கிய விருதுக்காக கருத்திற் கொள்ளப்பட்ட கவிதைத் துறையிலான நூல்களில், இறுதிச் சுற்றுக்காக விதந்துரைக்கப்பட்ட இந் நூலுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

ஆசிரியர் எழுதிய சிறுகதைக்குக் கிடைக்கப் பெற்ற பரிசு 

அன்பு பாலம் இதழ் நடத்திய வல்லிக்கண்ணன் சர்வதேச சிறுகதைப் போட்டியில் இவரது சிறு கதை “இரத்தம் கிளர்த்தும் முள்முடி” முதல் பரிசு பெற்றது. (போட்டிக்காக அனுப்பப்பட்ட 900 கதைகளுக்குள் இருந்து முதல் பரிசுக்குத் தெரிவான சிறு கதை இது) இதற்கான பரிசை, பாலம் மாத இதழின் சிறப்பாசிரியரான ஞான பீட விருது பெற்ற த.ஜெய காந்தன் அவர்கள் இவருக்கு வழங்கி கௌரவித்தார். 

நூலாசிரியரைப் பற்றியதும் அவரது குடும்பத்தைப் பற்றியதுமான விபரங்கள். 

பெயர் : நீ.பி.அருளானந்தம் (நீக்கிலாப்பிள்ளை பிலிப்பையா அருளானந்தம்) 

பிறந்த இடம் : வவுனியா சூசைப்பிள்ளையார்குளம். 

காலம் : 12-11-1947 

கல்வி : இறம்பைக்குளம் அர்ச். அந்தோனியார் பாடசாலையில் ஆரம்பக்கல்வி -அதன் பின்பு, வவுனியா மகாவித்தியாலயத்தில் S.S.C. வகுப்பு வரை. 

தொழில் : கடை வியாபாரம். 

தந்தையாரின் பெயர் : நீக்கிலாப்பிள்ளை பிலிப்பையா (அச்சுவேலி) (Varithamby Aratchair – Kathirgamar – Varithamby Murugar Thillaiambalam Vidan – Mariam Pillai – Nicholapillai – Philippaiah) (Maniyampathy Santhathi Murai) 

தாயாரின் பெயர் : லூர்தம்மா (சில்லாலை) (லூர்தம்மாவின் தகப்பன் – சுவாம்பிள்ளை-தாயாரின் பெயர்- றோசமுத்து ) துனைவியார் பெயர் : பெற்றோனிலா சொர்ணம்தம்பிமுத்து. 

இவரது தகப்பனாரின் பெயர் : கென்றி தம்பித்துரை தம்பிமுத்து (அச்சுவேலி (Varithamby Aratchiar – Kathirgamar – Varithamby Murugar – Thillaiyambalam Vidan – Santhiyagupillai – Tambimuttu Pillai – Henry Thambimuttu) (Maniyampathy Santhathi Murai) 

தாயாரின் பெயர் : கிறிஸ்டீனா. (ஏழாலை) (கிரிஸ்டீனாவினது
தகப்பனின் பெயர் : சங்கரப்பிள்ளை – தாயாரினது பெயர்- அன்னம்மா 

பிள்ளைகள் : 

சுரேஸ் ஜோக்கிம் (இற்றைவரையில் 63- கின்னஸ் உலக சாதனைகளைப் புரிந்து ஆகக்கூடிய கின்னஸ் உலக சாதனைகளைப் புரிந்தவர் என்ற தரத்தில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளதான ஒரு தகுதியையும் இவர் பெற்றுள்ளார்). 

ரமேஸ் பிலிப் (கடை வியாபாரம்) 

சத்தியசீலன் (கணினி தொழில்நுட்ப மென்பொறியியலாளர்) 

மேரி சுமித்திரா 

திருமகள் 

மருமகன்: 

நவரட்ணசிங்கம் தேவரஞ்சன் (சுமித்திராவின் கணவர்) (கணினி வலையமைப்பு தொழில்நுட்ப பொறியியலாளர்-அவுஸ்ரேலியா) 

காட்சன் சவரிமுத்து (திருமகளின் கணவர்) (சட்டத்தரணி-லண்டன்) 

மருமகள்: 

கிறிஸ்தா (சுரேஸ் ஜோக்கிமின் மனைவி) 

விஜிதா கத்தரின் (சத்தியசீலனின் மனைவி) 

பேரப் பிள்ளைகள்: 

யோசுவா 
ஜேக்கப் 
தபித்தா 
யூலியானா 
தமிரா