கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி தமிழ் முரசு (ம.பொ.சி)
கதைப்பதிவு: August 10, 2026
பார்வையிட்டோர்: 39 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அமைதி கொலுவீற்றிருந்த அந்தப் பெருங்கானகத்தில் ஒலியே இருக்கவில்லை என்று சொல்ல முடியாது. பலவேறு பறவைகளின் ஒலிகள் கேட்டுக்கொண்டுதா னிருந்தன. ஆயினும் அவ்வொலிகள் அடவியின் அமைதியைக் குலைக்க வில்லை; அடவியின் அமைதியை அதிகமாக்கி அழகு தந்து கொண்டிருந்தன. அந்தக் குரல்கள் அங்கே இல்லையென்றால் மயானத்தில் நள்ளிரவில் நிலவும் அமைதிதான் ஆட்சி செலுத்தி யிருக்கும். சுடுகாட்டிலும் கூட எரிகின்ற நெருப்பி லிருந்து எழும் ஒரு நுண்ணிய ஒலி உண்டல்லவா? அந்த ஒலிதான் ‘உருத்திர பூமி’ என்ற பெயரை நினைவுறுத்தும். எனவே, மயானத்தின் அமைதி என்று சொல்ல முடியாது. மயானத்தின் அமைதியைத் தீயின் நுண்ணொலி பயங்கரனதாக மாற்றுகிறது. அப்படியே, பறவைகளின் ஒலி, சில் வண்டின் கீச்சுக் குரல் இவை அந்தக் கானகத்தின் அமைதியைப் பெருக்கி அழகை ஊட்டின.

பேரரசன் வருகையைக் கண்டால் மன்னவையில் உள்ளோ ரெல்லாம் அசையாமல் ஆடாமல்—உதட்டைக்கூட அசைக்காமல் – மரியாதையோடு நிற்பார்கள். அவர்களுடைய ஆடைகள்கூட அசைவற்று உடலோடு உடலாய் ஒட்டிக் கொண்டுவிடும். அவர்களுடைய மூச்சுக்கூட நின்று விட்டதோ என்று எண்ணும்படியாக அத்துணை மென்மை யாக வெளிவரும். இத்தனை ‘ஆரவார அமைதி எதனால் ஏற்பட்டது?’ மன்னன் வருகிறான் என்ற உணர்ச்சியினால்.

அந்தக் கானகத கத்தின் அமைதி – அது எவர் வருகையைக் கருத்தியதோ தெரியவில்லை. ஏதோ ஒரு பெரிய தெய்வத்தின் வருகையைத்தான் அந்தக்கானகத்து மரங்கள் முதல் விலங்குகள் ஈறாக இருந்த யாவும் எதிர்பார்த் திருக்க வேண்டும். அங்கே உலவிய காற்றுக்கூடத் தேவன் வருகையை எல்லோருக்கும் காதுக்குள் சொல்லிச் செல்வதைப் போல அவ்வளவு மெல்ல இயங்கியது. ஆரவாரத்தோடு சட்டச் சடாரென்று பாறைகளை உருட்டிப் பாய்ந்து வந்த அருவி, அந்த அடவியின் அருகில் வந்தவுடனே அமைதியை மேற்கொண்டு விட்டது. ஆற்றுக்கு யார்தான் அந்தச் செய்தியை அறிவித்தார்களோ, தெரியவில்லை.

அமைதி! ஒரே அமைதி! அமைதியின் ஒலக்கம்!
அதற்கும் ஒரு முறிவு !
அமைதியைக் குலைத்தது ஒரு குரல்.
அமைதி பறந்தது.
ஒலி பரவிற்று.

கணீரென்ற குரல்; தெளிவான உச்சரிப்போடு கானகத்தின் எல்லையையே அளந்துவிட முயல்வதுபோன்ற குரல்.

கணீரென்ற அந்தக் குரலுக்கு எதிராக – பதிலாக – மற்றொரு குரல்.

இனிமையைப் பிழிந்தெடுத்த இசைக்குரல், கீச்சென்ற குரல். தெளிவோடு தேன் இனிமையும் கொண்ட தீங்குரல்.

எப்படி இந்த இரண்டு குரல்கள் பிறந்தன? எவ்வாறு அடவியின் அமைதி குலைந்தது?

அதோ, மீண்டும் அந்தத் திண்மையான ஒலி! எங்கே – யார் அது …?

அந்த உருவத்தை நோக்கி மற்றோர் உருவம் வருகிறது. ஒகோ, அதன் குரல்தான் இனிய இசைக் குரல், சரிதான்.

இரண்டு உருவங்களும் ஒன்றே யொன்று வியப்புடன் பார்க்கின்றன. விழுங்கி விடும் ஆர்வம் இரு உருவங்களிலும் பொங்கி வழிகிறது.

எப்படி ஒலி பிறந்தது? அது அந்த இருவருக்கும் தெரியவில்லை. தெரியவில்லை என்று சொல்ல முடியாது. விளக்க முடியவில்லை. விளக்க முயற்சி இருக்கிறது. ஆனால் முடியவில்லை. என்றாலும் தளர்ச்சி இல்லை. புதுமை ஒன்றைக் கண்டுவிட்ட வெற்றி எக்களிப்பு; அந்த எக்களிப்புக் காரணமாக ஒரு புது நம்பிக்கை. ஆம், எப்படி யாவது ஒலியின் பிறப்பை விளக்கி விடலாம் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது.

அந்த நம்பிக்கைதான் மனிதப் பேச்சின் வித்து; அந்த நம்பிக்கை தான் மொழிகளின் வேர்; அந்த நம்பிக்கைதான் கலைச் செல்வங்களாகிய ஒளி மணிகளின் படடை தீட்டப் பெறாத மாணிக்கம்.

ஆம், அந்த உருவத்தில் ஒன்று அவன்; மற்றொன்று அவள்.

முதல் நம்பி அவன் ; முதல் நங்கை அவள்.

பறவைகள் இசைத்தன. விலங்குகள் உறுமின. காற்று ஒலித்தது. கடல் முழங்கிற்று. அருவி பாடிற்று.

மனிதன் குரல் எடுத்தான். பல ஒலிகளும் அவன் மனத்தில் போராடின. கடைசியில்…

மனிதன் பேசிவிட்டான்.

– 01 ஜனவரி 1947, தமிழ் முரசு (ம.பொ.சி).

ம.ரா.போ. குருசாமி முனைவர் ம.ரா.போ.குருசாமி தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; சொற்பொழிவாளர். இவர் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அருகில் உள்ள மகமது சாகிப்புரம் என்னும் மம்சாபுரத்தில் 1922ஆம் ஆண்டில் பிறந்தவர். 2012 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6 ஆம் தேதியன்று கோவையில் காலமானார். சிறுகதைகள் இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை. உழைப்பில்லாச் சுகம்; தமிழ்முரசு (ஐந்தாவது புத்தகம்), 1946 செப்டம்பர், பக்கம் 25 -36.சில்லறையும் மொத்தமும்; தமிழ்முரசு (ஏழாவது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *