ஊரே கற்றது!
கதையாசிரியர்: வி.லாவண்யா
தின/வார இதழ்: அம்புலிமாமா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 148
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிங்காரம் வடிகட்டின கஞ்சன். ஒருநாள் அவன் வேறொரு ஊருக்குப் போய்விட்டுத் தன் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு மரத்தடியே ஒரு கிழவன் படுத்து முக்கி முனகிக் கொண்டிருப்பதை அவன் கண்டான். அவன் சிங்காரத்தைப் பார்த்து “அப்பனே! எனக்கு ஒரே தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் கொடுத்து என்னைக் காப்பாற்று” என வேண்டினான்.
சிங்காரமும் அவனருகே போய் “இதோ பார். நான் வடிகட்டின கஞ்சன் என்று பெயர் பெற்றவன். அந்தப் பெயரை நான் காப்பாற்றி வருகிறேன். நான் எந்த வேலையையும் சும்மா செய்ய மாட்டேன். நான் உனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றால் அதற்கு பதிலாக நீ எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும். உன்னிடம் ஏதாவது பணம் இருந்தால் கொடு. நான் தண்ணீர் கொடுக்கிறேன்!” என்றான்.
கிழவனும் தன் இடுப்பிலிருந்து ஒரு வெள்ளி நாணயத்தை எடுத் துக் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு சிங்காரம் அக்கிழவனுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான். கிழவனும் அதைக் குடித்த பிறகு “நீ செய்த இந்த உதவியை நான் மறக்க மாட்டேன். நான் உன்னோடு உன் ஊருக்கு வந்து உனக்கு ஒரு உதவியைச் செய்கிறேன்” என்றான்.
அதற்கு சிங்காரம் “உன்னைப் பார்த்தால் பரம ஏழை என்று தெரிகிறது. மேலும் ரொம்ப புத்திசாலி அல்ல என்பதும் எனக்குப் புரிகிறது. அப்படி இல்லாவிட்டால் நீ குடித்த தண்ணீருக்கு ஒரு வெள் ஒரு ரூபாய் தானமாகப் பெற்றான் என்றால் அக்கிழவனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும் என்று அவ்வூரார் நினைத்தார்கள். அதனால் அந்த ஊர்க்காரர்கள் எல்லோரும் அக்கிழவனைத் தேடிப் போய் ஒரு ரூபாய் தானம் கொடுத்து அவனது ஆசிகளைப் பெறலானார்கள். இப்படி முதல்நாளிலேயே அக்கிழவனிடம் பத்தாயிரம் ரூபாய் சேர்ந்து விட்டது. அவன் அதிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு சிங்காரத்தின் வீட்டிற்கு போய் “இதோ ஆயிரம் ரூபாய். நாளையும் எனக்கு ஒரு ரூபாய் தானம் கொடு. மறந்து விடாதே” என்று கூறிவிட்டு சென்றான். மறு நாள் கொடுக்க ஒரு ரூபாயைக் கொடுத்து விட்டும் சென்றான்.

இப்படியே இரண்டு வாரங்கள் கழிந்தன. சிங்காரத்திற்கு தினமும் ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்தது போக மீதம் லட்சம் ரூபாய் அந்தக் கிழவனிடம் சேர்ந்து விட்டது. அவன் அந்தப் பணத்தைக் கொண்டு நல்ல வீட்டை வாங்கிக் கொண்டு சமையல்காரன், வேலைக்காரன் என்று ஆட்களையும் நியமித்துக் கொண்டான். பணம் வட்டிக்குக் கொடுத்தும் லேவா தேவி செய்து வந்தான். அப்போதும் சிங்காரத்திடம் தானம் பெறுவதை அவன் விட்டுவிடவில்லை.
அவ்வூரார் இதனை கவனித்தார்கள். அவர்கள் ஒரு மனிதனிடம் “நீ அந்தக் கிழவன் செய்வதை எல்லாம் வேவு பார்த்து வா” என்றார்கள். அவனும் இரண்டு நாட்கள் பார்த்து விட்டு கிழவன் பணம் கொடுத்து விட்டு மறுநாள் ஒரு ரூபாய் தானம் வாங்கிப் போகும் விவரத்தைக் கூறினான். அதைக் கேட்ட ஊரார் கோபம் கொண்டு கிழவனும் சிங்காரமும் சேர்ந்து தங்களை எல்லாம் ஏமாற்றி வருவதாக வழக்குத் தொடுத்தார்கள்.
நீதிபதியும் சிங்காரத்தையும் கிழவனையும் தம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஆணை பிறப்பித்தார். யாவர் முன்னிலையில் விசாரணை நடந்தது. கிழவன் தன் வாக்கு மூலமாக “இதில் சிங்காரம் எந்த மோசடியையும் செய்யவில்லை. அவன் என்னை நம்பி தானம் செய்தான். எனக்கு தானம் அளித்த மற்றவர்களுக்கு நான் எவ்வித வாக்குறுதியையும் அளிக்கவில்லை. அவர்கள் தாமாக இஷ்டப்பட்டே எனக்குப் பணம் கொடுத்தார்கள். இந்தப் பதினைந்து நாட்களில் எந்த ஒரு குடும்பமும் பதினைந்து ரூபாய்களுக்கு மேல் அளிக்க வில்லை. அதுவும் அவர்கள் தாமே வந்து என்னைக் கண்டு கொடுத்து விட்டுப் போனார்கள். எனவே நான் யாரையும் ஏமாற்றிப் பணம் சேர்க்கவில்லை. சிங்காரம் எனக்கு தானம் கொடுத்ததால் எனக்கு நிறையப் பணம் கிடைத்தது. அதிலிருந்து தினமும் ஆயிரம் ரூபாயை நான் கொடுத்து வந்தேன். இதில் என் குற்றமோ சிங்காரத்தின் குற்றமோ எதுவும் இல்லை” என்றான்.

ஊரார் சார்பில் “இது கட்டுக் கதை இவர்களை தண்டிக்க வேண்டும்” என வற்புறுத்தப்பட்டது. அப்போது அக்கிழவன் நீதிபதியிடம் “ஐயா! எனக்கு இந்த யோசனை இருபத்தைந்து வருடங் களுக்கு முன்பு தோன்றியது. இதற்காக நான் வடிக்கட்டின கஞ்சனை இவ்வளவு காலமாகத் தேடி அலைந்தேன். உலகில் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எளிதில் யாருக்கும் வருவதில்லை. ஆனால் சிங்காரத்தை நான் பயன்படுத்தி இவ்வூரில் பதினைந்தாயிரம பேர்களை அவ்விதம் நினைக்க வைத்தேன். எனக்குத் தெரிந்து இம் மாதிரி மாறுதலடைந்த ஊரை எங்குமே நான் பார்க்கவில்லை” என்றான்.
அதுகேட்டு ஊரார் தம் அறியாமை குறித்து நினைத்துத் தலை குனிந்து கொண்டார்கள்.
– ஜனவரி 1991.