ரகசியம் அம்பலமாகும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 149 
 
 

(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெயரிடப்படாதக் கடிதம் ஒன்று வரவே, யாருக்கும் தெரியாமல் பீட்டர் பொசுதீன், அந்த ‘நா’ என்று தொடங்கும் சிறிய நகரத்தை நோக்கி மூன்று உள்ளூர்க் குதிரைகளை வைத்துப் பூட்டிய வண்டி யில் மாற்றுச்சாலை வழியாக விரைந்துக்கொண்டிருந்தான். 

முகத்தைத் தன் கோட்டின் காலரில் மறைத்துக்கொண்டு, “நான் பதுங்கியிருக்கிறேன் யாருக்கும் தெரியாமல் புகையினைப் போல் மறைந்துவிட்டேன்” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டான். 

மோசமான திட்டங்களைத் தீட்டிவிட்டு அவற்றின் சுவடு தெரியாமல் புத்திசாலித்தனமாக மறைத்துவிட்டோம் என அந்த கீழ்த்தரமானவர் கள் தங்களுக்குள் இந்நேரம் மெச்சிக் கொண் டிருப்பார்கள். ஹா, ஹா, ஹா! தங்கள் வெற் றியின் உச்சத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் போது, போய் ”லியாப்கின், தியாங்கின் “எல்லோ ரையும் கொண்டுவா” என்ற குரல் கேட்டவுடன் அவர்களுக்கு எத்தகைய திகிலும் ஆச்சரியமும் உண்டாகும் என்பதை ஊகிக்கமுடிகிறது. அந்த நேரம் என்ன ஒரு களேபரம் ஏற்படும் தெரியுமா ஹா! ஹா ! 

இப்படிப் பலவாறாகத் தனக்குள் நினைத் துச் சோர்ந்துபோன பொசுதீன், வண்டியோட்டியி டம் பேச்சு கொடுத்தான். பேரும் புகழும் அடைய வேண்டும் என்னும் தாகமுடைய அவன், தன் னைப் பற்றி முதலில் விசாரித்தான். 

“பொசுதீன் யார் என்று உனக்குத் தெரியுமா?”  

“எப்படி எனக்கு தெரியாமல் போகும்? அவன் யார் என்று எங்களுக்கு தெரியும்” என்று சிரித்தபடி வண்டியோட்டி சொன்னான். 

“ஏன் சிரிக்கிறாய்?” 

“எனக்குச்சிரிப்பாய் வருகிறது. சாதாரண மாக் இங்கிருக்கும் கடைநிலை ஊழியனுக்குக் கூட தெரியும்போது, பொசுதீனைத் தெரியாமல் இருக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். எல்லோருக்கும் தெரிவதற்குத் தானே அவன் இங்கு இருக்கிறான். 

“நல்லது. அவனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? அவன் நல்லவனா?” 

கொட்டாவி விட்டபடியே, ”நல்லவன் தான். நல்ல மனிதன். வேலையில் சிறந்தவன். இங்கு வந்து இரண்டு ஆண்டுகள் கூட முடியவில்லை. அதற்குள் பல வேலைகளை முடித்திருக்கிறான்”. 

“அப்படி என்ன தான் செய்திருக்கிறான்?” 

“எவ்வளவோ நல்லது செய்திருக்கிறான். அவன் நன்றாக இருக்க வேண்டும். ரயில்பா தையை இங்கே கொண்டு வந்திருக்கிறான். கொக் ரின்கோவை இந்த நாட்டைவிட்டே வெளியே துரத்தியனுப்பினான். கொக்ரின்கோ மிகவும் மோசமானவன். அவன் ஒரு ராஸ்கல் நரி. இவ னுக்கு முன் இருந்தவர்கள் எல்லோரும் அவன் வலையில் விழுந்து சிக்கிவிட்டார்கள். ஆனால் பொசுதீன் வந்த பின் கொக்ரின்கோ இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டான். ஆமாம், சார். பொசுதீனுக்கு யாரும் லஞ்சம் தர முடியாது. முடியவே முடியாது. நூறு, ஆயிரம் என எவ்வளவு ரூபிள்கள் கொடுத்தாலும் மனதறிய எந்த பாவத் தையும் அவனைச் செய்ய வைக்க முடியாது. நடக் கவே நடக்காது.” 

“நல்லவேளை, ஏதோ இந்த வகையிலா வது நம்மைப் புரிந்து வைத்திருக்கிறானே” என பொசுதீன் உற்சாகமடைந்தான். ”அற்புதம்” என்றான். 

“அவன் நல்ல பண்பாடுள்ள மனிதன். ஒரு முறை நம் ஆட்கள் சிலர் ஏதோ குறைகளுடன் அவனைப் பார்க்கப் போயிருக்கிறார்கள். பெரிய மனிதர்களை நடத்துவதைப் போல், அவர்களை அவன் வரவேற்றிருக்கிறான். அவர்களிடம் சகஜ மாக கைகுலுக்கி, “உட்காருங்கள்” என்று சொல் லியிருக்கிறான். அவன் எல்லாவற்றிலும் வேகம். அமைதியாக நடக்கத் தெரியாது. எப்போதும் தாட் பூட். சாதாரணமாக நடப்பது என்பதெல் லாம் கிடையவே கிடையாது. எப்போதும் ஓடிக் கொண்டே இருப்பான். “என் வண்டி எங்கே?” என்று அவன் கூப்பிட்ட அடுத்த நொடியே எங்கள் ஆட்கள் ஓடி வர வேண்டும். அவர்கள் பதிலுக்கு குரல் கொடுக்கக் கூட நேரமிருக்காது. அதற்குள் இங்கு வந்து விடுவான். அவன் வந்தது தான் தெரி யும், எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து விட்டான்”. 

வண்டியோட்டி மேலும் தொடர்ந்தான் : ”இதற்கு முன் இருந்தவனைவிட, அவன் ஆயி ரம் மடங்கு நல்லவன். அந்த ஆளும் பார்க்கப் போனால், நல்லவன் தான், இருந்தாலும்… பழைய ஆள் பார்க்க அருமையாக, முக்கியமானவனாகத் தெரிவான். இந்த ஊரிலேயே அவனை விட சத்த மாக யாராலும் கத்த முடியாது. வண்டியில் பயணம் செய்யும் போது அவன் பேசுவது பத்து மைல் தூரத் துக்கு கேட்கும். ஆனால், வேலை என்று வந்துவிட் டால், இப்போது உள்ளவன் ஆயிரம் மடங்கு புத்தி கூர்மையானவன். பழைய ஆளைவிட இருப்பவனி டம் உள்ள மூளை நூறு மடங்கு பெரிது. எல்லா வகையிலும் இவன் அருமையானவன். ஆனால் இவனிடம் ஒரே ஒரு குறை தான். இவன் ஒரு குடி காரன்”. 

“பாழாய் போனவன் !” என்று மன துக்குள் முணுமுணுத்துக்கொண்டான் பொசுதீன். “உனக்கு எப்படித் தெரியும், நான்…இல்லை அவன் குடிகாரன் என்று எப்படித் தெரியும் ?” என்று கேட்டான். 

“ஓ, அதுவா? அவன் குடித்ததை நான் என் கண்ணால் பார்த்ததில்லை என்பது உண் மைதான். ஆனால், உண்மையில்லாத எதை யும் நான் சொல்ல மாட்டேன். மக்கள் என்னி டம் சொல்லி இருக்கிறார்கள். அவர்களும் அவன் குடித்ததைப் பார்த்ததில்லை தான். ஆனால், அப் படித்தான் பேசிக் கொள்கிறார்கள். பொது இடத் திலோ, யாரையாவது சந்திக்கப்போகும் போதோ, பெரிய கொண்டாட்டங்களில் கலந்து கொள் ளும் போதோ குடிக்க மாட்டான். வீட்டில்தான் வெளுத்து வாங்குவான். காலையில் எழுந்திருப் பான். கண்களைக் கசக்கிக் கொண்டதும், அவ னுக்கு வரும் முதல் நினைவு வோட்கா தான். அவ னுடைய பணியாள் ஒரு கிளாஸ் கொண்டு வந்து கொடுப்பான். உடனடியாக இன்னும் ஒரு கிளாஸ் கேட்பான். இப்படியே நாள் முழுவதும் ஊத்திக் குடித்துக் கொண்டே இருப்பான். மேலும் ஒரு வேடிக்கையான விஷயத்தை சொல்லட்டுமா, எவ் வளவு குடித்தாலும் தள்ளாட மாட்டான். தன்னை எப்படிக் கவனித்துக் கொள்வது என்று அவனுக் குத் தெரியும். ஆனால் இதற்கு முன்பிருந்த இருந்த எங்கள் கொக்ரிகன்கோவ் குடித்தான் என்றால் மக்கள் மட்டுமல்ல, நாய்கள் கூட ஊளையிடும். ஆனால் பொசுதீன் அப்படி இல்லை. அவனது மூக் குக்கூட சிவக்காது. தன் அலுவலக அறையைச் சாத்திக்கொண்டு தூங்கிப்போவான். அவனுடைய மேசையில் டியூபுடன் கூடிய பெட்டி ஒன்றை ஏற் பாடு செய்துள்ளான். எதற்காக வைத்துள்ளான் என யாருக்கும் தெரியாது. அப்பெட்டி முழுவதும் வோட்காவைக் கொண்டு நிரப்பியிருப்பான். கீழே குனிந்து அந்த டியூபிலிருந்து உறிஞ்ச வேண்டிய துதான். போதையேறிவிடும். வெளியே வண்டியில் போகும் போது, கையில் வைத்திருக்கும் சிறிய பெட்டியில் கூட வைத்திருப்பான்”. 

”இது எப்படி அவர்களுக்கு தெரிகிறது ?” என நினைத்த பொசுதீன் ஆச்சரியத்தில் திணறிப் போனான். ”அடக்கடவுளே, இது கூட தெரிந்திருக் கிறது. என்ன கொடுமை!” என நினைத்தான். 

“பெண்கள் விஷயத்திலும் அவன் மோசமானவன், எனச் சிரித்தபடியே வண்டியோட்டி தலையை ஒருவிதமாக அசைத்தான். “அநியாயம்! ஆமாம். அவன் பத்து பெண்களை வைத்திருக்கி றான். இரண்டு பேர் அவன் வீட்டிலேயே வசிக்கின் றனர். ஒருத்தி பெயர் நஸ்தாசியா இவாநோவ்னா. வீட்டைப் பராமரிப்பது மாதிரியான வேலைகளுக்கு அவளை வைத்திருக்கிறான். அடுத்தவள்… சனி யன் பிடித்த அவள் பெயர் என்ன? ஆங்! ஆமாம், லியுத்மிலா செமியோநேவ்னா. பெயரளவில், அவ னுடைய தனிச்செயலாளர். இவர்களுக்கெல்லாம் தலைமையானவள் நஸ்தாசியாதான். அவளுக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. பொசுதீனை விட அவளிடம் தான் மக்கள் அதிகமாகப் பயப்படுவார் கள். ஹா! ஹா! மூன்றாவது மூதேவி, கச்சால்னா வீதியில் வசிக்கிறாள், இது உண்மையிலேயே வெட்கக்கேடானது” 

“அவர்களுடையப் பெயர்கள் கூட இவ னுக்குத் தெரிந்திருக்கிறது” என நினைத்த பெசுதீ னின் முகம் வெளுத்துப் போனது. 

“இந்த விஷயம் யாருக்குத் தெரிந்திருக்கி றது என்பதை பார்க்கும் போது மிகவும் கேவல மாக இருக்கிறது. ஆமாம், நகரத்துக்கே இது வரை போகாத குடியானவன் ஒருவனுக்கு இந்த விஷயம் தெரியும். எவ்வளவு வெட்கக்கேடாகவும் அருவறுப் பாகவும் இருக்கிறது!” 

“இதை எல்லாம் எப்படிக் கண்டுபிடித் தாய்?” என எரிச்சலுடன் கேட்டான் பொசுதீன். 

“மக்கள் என்னிடம் சொல்லி இருக்கிறார் கள். எதையும் என் கண்ணால் பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவர்கள் மூலம் தெரிந்து கொண் டேன், அதை கண்டுபிடிப்பது என்ன அவ்வ ளவு கடினமா? பணியாள் அல்லது வண்டியோட்டி வாயை யாராலும் மூட முடியாது. நஸ்தாசியாவே கூட தனக்கு வாய்த்திருக்கும் அதிர்ஷ்டத்தைப் பற்றி எல்லா இடத்திலேயும் போய் தம்பட்டமடித் துக் கொண்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மனி தக் கண்களிலிருந்து யாரும் தப்பி விடமுடியாது. மேலும் ஒரு விஷயம், இந்த பொசுதீன் இப்பொழு தெல்லாம் ஆய்வு செய்யப் போகும் போது, தனக் கென ஒரு பாணி வைத்திருக்கிறான். முன்பெல் லாம், எங்காவது போவது என அவன் முடிவெ டுத்தால், ஒரு மாதத்திற்கு முன்பாகவே அவனது பயணத்தை தெரிவிக்கும் பழக்கம் இருந்தது. அப் படிச் சொல்லிவிட்டு அங்கு போகும் போது, அந்த இடமே அதிரும்; குலுங்கும்; நடுங்கும். கடவுள் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்! அவனுக்கு முன்னே சிலரும், பின்னால் சிலரும், இரண்டு பக் கமும் சிலரும் குதிரைகளில் அணிவகுத்துச் செல் வார்கள். இடம் வந்தடைந்தவுடன், எல்லோறையும் போல் அவனுக்கும் ஒரு குட்டித் தூக்கம் தேவைப் படும். பிறகு நன்றாகச் சாப்பிடுவான்; குடிப்பான். அதன் பிறகு வந்த அலுவலைக் கவனிக்கத் தொடங்குவான். தாட்பூட் எனக் கத்திவிட்டு மீண் டும் ஒரு குட்டி தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவான். பிறகு வந்த வழியே வந்தது போலவே திரும்பி போய் விடுவான். ஆனால், இப்பொழுதெல்லாம் ஏதா வது அவனுடைய காதுக்கு எட்டினால், மின்னல் போல் அங்கு ரகசியமாக போய் இறங்க வேண் டும் என நினைக்கிறான். அப்படி போனால் தான் யாருக்கும் தெரியாது; யாரும் பார்க்க மாட்டார் கள் என்பது அவன் எண்ணம். வேடிக்கை தான்! வீட்டில் இருந்து அதிகாரிகள் யாரு பார்க்காதபடி வண்ணம் ரகசியமாக வெளியேறி ரயிலேறி விடு வான். அவர் போய்ச் சேர வேண்டிய புகைவண்டி நிலையத்தை அடைந்ததும், வாடகைக் குதிரை அல்லது உயர் வகுப்பு வாகனம் என எதை யும் பயன்படுத்தாமல் யாராவது விவசாயி ஒரு வனை வண்டி ஓட்ட அமர்த்திக் கொள்வான். பெண் போல் உடை அணிந்து கொண்டு யாரும் தன் குரலை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக கிழநாய் போல் வழியெங்கும் உருமிக்கொண்டுடே போவான். இதைப்பற்றி மக்கள் சொல்லும் போது கேட்க வேண்டும். சிரித்துச் சிரித்து வயிறு புண் ணாகி விடும். அந்த கழுதை அப்படி பயணம் செய் யும் போது யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொள்ளும். அறிவு உள்ள எவருக்கும் அவனை அடையாளம் தெரியும்”. 

“எப்படி அவனை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்?” 

“அது மிகவும் சுலபம். அந்தக் காலத்தில் நம் கொக்ரின்கோவ் பயணம் செய்யும் போது, அவனது பலமான கைகளை வைத்துக் கண்டிபி டிப்போம். வண்டி ஓட்டும் உங்களை வாயில் அடித் தால், அவன் கொக்ரின்கோவ். ஆனால் முதன் முத லாகப் பார்த்த மாத்திரத்திலேயே பொசுதீன்தான் என்று சொல்லிவிடலாம். சாதாரணமாக பயணம் செய்யும் ஒருவர் அடக்கமாக நடந்து கொள்வார். ஆனால் பொசுதீனுக்கு அடக்கம் என்றால் என் னவென்றே தெரியாது. அலுவல் இல்லத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டான் என வைத்துக்கொள் வோம். அவ்வளவு தான். உடனடியாக ஆரம்பித் துவிடுவான். கடும் வெயிலோ, குளிரோ எப்படி இருந்தாலும் சரி, வெடக்கோழிகள், பழங்கள், ஜாம் வகைகள் என எல்லாவற்றையும் வாங்கி வர ஆள் அனுப்புவான். இப்படித்தான் அவன் அலுவல் இல் லத்தில் இருப்பது தெரிந்து போகும். நல்ல குளிர் காலத்தில், யாராவது வெடக் கோழிகனையும், பழங்கனையும், கேட்டு வந்தால், அது பொசுதீன் என்று தெரிந்துக்கொள்ளலாம். யாராவது மிகவும் கவனமாக, “தம்பி” என அழைத்து, பிறகு முட்டாள் தனமாக எல்லாம் காரியங்களுக்கும் உங்களை விரட்டினால், அது நிச்சயம் பொசுதீன்தான் என நம்பலாம். மேலும், அவனிடம் மற்றவர்கள் போன்ற வாடை வராது. அடுத்ததாக, படுத்து உறங்குவதிலும் அவனுக்கு என ஒரு தனி பாணியைக் கடை பிடிப்பான். அலுவல் இல்லத்தில் தங்கி இருக்கும் போது, சோபாவில் படுத்துக்கொள்வான். தன் மீது வாசனை திரவியத்தை தெளித்துக் கொள்வான். தலையணையின் அருகில் மூன்று மெழுகுவத்தி களை வைக்கும்படி உத்தரவிடுவான். பிறகு படுத் தபடியே செய்தித்தாள்களை வாசித்துக் கொண்டி ருப்பான். மனிதனை விடுங்கள், பூனையை கேட்டால் அந்த ஆள் யார் என்று சொல்லிவிடும்”. 

“அது சரி தான்” என்று நினைத்த பொசு தீன், “ஏன் இது எனக்கு முன்பே தெரியவில்லை?” என யோசித்தான். 

வண்டியோட்டி தொடர்ந்தான்: 

“தேவையானால், பழம், கோழி இவை எது வும் இல்லாமலேயேக் கூட அவனை அடையா ளம் காண முடியும். எல்லாமே டெலிகிராப் மூலம் தெரிந்துபோகும். அவனுடைய முகத்தை மூடிக் கொண்டு தன் விருப்பப்படி எப்படி வேண்டுமா னாலும் மறைந்து கொள்ளலாம். ஆனால், அவன் இங்கு வருகிறான் என்பது அவர்களுக்கு தெரியும். அவன் வருவான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

வீட்டிலிருந்து பொசுதீன் கிளம்புவதற்கு வெகு நேரத்துக்கு முன்னதாகவே இங்கு அனைத் தும் அவனுக்குத் தயாராக இருக்க வேண்டும். இங்கு யாரையோ கையும் களவுமாக பிடித்து கைது செய்ய வருகிறானாம். அல்லது யாரையோ விடு தலை செய்ய வருகிறானாம். ஆனால், இங்கு எல் லோரும் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண் டிருக்கிறார்கள். ஆமாம் சார்! நீங்கள் என்னதான் யாரும் எதிர்பாராத விதமாக வந்தாலும், பார்த்தீர் களா, எல்லாம் ஒழுங்காக இருக்கின்றனர் எனப் பேசிக்கொள்கிறார்கள். இங்குமங்கும் சுற்றிப் பார்த் துவிட்டு கடைசியில் வந்த வழியே திரும்பிப் போய் விடுவான். ஆமாம், எல்லோரையும் புகழ்ந்துவிட்டு, சுற்றி வந்து எல்லோருடனும் கைகுலுக்கி, எங் களை தொந்தரவு செய்ததற்காக வருத்தம் தெரி விப்பான். அத்தனையும் உண்மை. உங்களுக்கு தெரியாதா சார்? ஹா! ஹா! இங்கிருக்கும் நாங் கள் எல்லோரும் மிகவும் புத்திகூர்மையானவர் கள். ஒருவர் விடாமல் எல்லோரும் விபரமானவர் கள். எத்தகைய எமகாதகர்கள் நாங்கள் என்பதை பார்ப்பதே உற்சாகமாக இருக்கும். 

உதாரணமாக, இன்றைக்கு நடந்ததையே எடுத்துக்கொள்ளுங்கள். யாருமில்லாத வாகனத் துடன் இன்று காலை நான் வந்து கொண்டிருந்த போது, அந்த உணவு விடுதியின் காப்பாளரான யூதர், என்னை நோக்கி வேகமாக வந்தார். யூத முதலாளி எங்கே போகிறீர்கள்?” என கேட்டேன். 

கொஞ்சம் மதுவும் நொறுக்குத்தீனியும் ‘நா’ என்று தொடங்கும் அந்த நகருக்கு கொண்டு செல்கிறேன் என பதிலளித்தார். அங்கு பொசு தீன் வருவான் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சாமார்த்தியம் தானே? பொசுதீன் பாவம், இப்பொ ழுது தான் புறப்படத் தயாராகிக் கொண்டிருப்பான் ஒரு வேளை, யாரும் அடையாளம் காண முடி யாதபடி முகத்தை மறைத்துக் கொண்டிருக்கும் வேலையில் மும்முரமாயிருப்பான். அல்லது, தான் வருவது யாருக்கும் தெரியாது என நினைத்தவாறு பாதி வழியில் வந்து கொண்டிருப்பான். எனினும், மது, மீன், வெண்ணெய் என அவனுக்காக எல் லாம் தயாராக இருக்கின்றன. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதோ, பிள்ளைகளே, இப்பொழுது உங்களை பிடிக்கப் போகிறேன்” என நினைத்துக்கொண்டு அவன் வாகனத்தில் வரு வான். ஆனால், அந்த பிள்ளைகளோ அவனைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. வெகு நேரத் துக்கு முன்பே அவர்கள் எல்லாவற்றையும் மறைத் துவிட்டார்கள். 

“வண்டியை திருப்பு” என பொசுதீன் கோபமாக கத்தினான். முண்டமே! பேசாமல் வண்டியை திருப்பி புறப்பட்ட இடத்துக்கே ஓட்டு! என மீண்டும் கூச்சல் போட்டான். 

ஒன்றும் புரியாமல் விழித்தவன் வண்டியை திருப்பி வந்த வழியே ஓட்டத் தொடங்கினான். 

– இக்கதை முதன்முதலில் ஃபிராக்மென்ட்சம் என்னும் பத்திரிக்கையில் டிசம்பர் 1885 இல் வெளியானது. 

– ஆன்டன் செக்காவ் ஆகச்சிறந்த கதைகள், தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், முதற் பதிப்பு: 2019, தடாகம் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *