மெலிந்தவனும் பருத்தவனும்
கதையாசிரியர்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 150
(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்).

நிக்கோலயேஸ்கி புகைவண்டி நிலையத்தில் இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டனர். ஒரு வன் மெலிந்து இருந்தான். அடுத்தவன் பருத்து இருந்தான். பருத்திருந்த ஆள், சற்று முன்தான் அந்தப் புகை வண்டி நிலையத்தின் உணவு விடுதி யில் சாப்பிட்டு முடித்திருந்தான். சாப்பிட்ட ஈரம் கூட காயாமல், அவனது உதடுகள் பார்க்க முதிர்ந்த செர்ரி பழங்களைப் போல் மினுமினுத்தன. அவனிடம் ஆரஞ்சு மணம் வீசியது. ஒல்லியான நபர், சற்று முன்தான் ரயிலிலிருந்து இறங்கியிருந்தான். அவனிடம் கைப்பெட்டிகள், பொதிகள், அட்டைப்பெட் டிகள் என நிறையப் பொருட்கள் இருந்தன. அவ னிடம் இருந்து காப்பிக்கொட்டையும் பன்றிக்கறி யும் கலந்து வாசனை வந்தது. நீண்ட முகவாயுடன் மெலிந்து காணப்பட்ட குட்டையான பெண் அவ னுக்குப் பின்னாலிருந்து எட்டிப்பார்த்தாள். அவள் தான் அவனுடைய மனைவி. பாதியளவு மூடிய கண்களுடன், உயரமாக இருந்த பள்ளி மாணவன் தான் அவளுடைய மகன்.
அந்த ஒல்லியான ஆளைப் பார்த்தவுடன், ஆச் சரியத்தில், “போர்ஃபிரி” என்று பருத்த நபர் கத்தி னான். “அட, நீயா? என் இனிய நண்பனே! நாம் கடைசியாகக் சந்தித்து வெகு நாட்கள் ஆகிவிட் டன,” என்றான்.
அப்படியே ஸ்தம்பித்துப்போன ஒல்லியானவன்,
“எல்லாம் கடவுள் செயல். மிஷா! நீ என்னுடன் பள்ளியில் படித்த பழைய நண்பன். உன்னை இங்குச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
நண்பர்கள் இருவரும் மூன்று முறை மாறி மாறி அணைத்துக்கொண்டனர். கண்களில் கண்ணீர் மல்க, ஒருவரையொருவர் உற்றுப் பார்த்தபடியே இருந்தனர். இருவருக்குமே இச்சந்திப்பு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
பிறகு இருவரும் உணர்ச்சிகளை தங்கள் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஒல்லியான நபர் ஆரம்பித்தான். “என் இனிய நண்பனே. இப்படி நடக்கும் என்று யார் எதிர்பார்த் திருக்க முடியும்? என்ன ஒரு ஆச்சரியம்! இப்படித் திரும்பு. உன்னை நன்றாக பார்க்கிறேன்! அட அதே அழகு, எடுப்பு. நீ எப்பொழுதுமே மிடுக்காகத்தான் இருப்பாய் மயக்கும் மன்மதனாய், என்ன அப்ப டித்தானே! அட, நான் எதிர்பார்க்கவே இல்லை! சரி சொல். நீ எப்படி இருக்கிறாய்? பணக்காரனாகி விட்டாயா? திருமணமாகிவிட்டதா? எனக்கு… அது தான் பார்க்கிறாயே. எனக்குத் திருமணமாகிவிட் டது. இவள் தான் என் மனைவி லூயீஸ். திருமணத் துக்கு முன் இவள் பெயர் வான்ஸென்பாக், லூத் தரன் பிரிவினர். இவன் என் மகன் நத்தானியேல். பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான்… நத்தன், “இவன் யார் தெரியுமா? மிஷா. என் சிறு வயது நண் பன் ! நாங்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாக படித் தவர்கள்,” என அறிமுகம் செய்து வைத்தான்.
சிறிது நேரம் ஏதோ யோசனை செய்த நத்தானி யேல், தன் தொப்பியைக் கழட்டி மரியாதை செய்தான்.
ஒல்லியான ஆள் தொடர்ந்தான்:
“ஆமாம். நாம் இருவரும் பள்ளியில் ஒன்றா கப் படித்தோம். உனக்கு நினைவிருக்கிறதா? ஒரு முறை, நீ பாடப்புத்தகத்தை சிகரெட்டால் எரித் துவிட்டாய். அதனால், எல்லோரும் உன்னை “ஹிரோஸ்டிரேடஸ்” என்று கேலி செய்தோமே. நான் மற்றவர்களைப் பற்றி கதைக்கட்டி விடுவேன். எனவே, என்னை “எஃபியால்டெஸ்” என்று கேலி செய்வார்கள். நாம் என்ன மாதிரியான பையன்க ளாக இருந்திருக்கிறோம் பார்த்தாயா? வெட்கப்ப டாதே நத்தா! இன்னும் கொஞ்சம் அருகில் வா! அது தான் சொன்னேனே. என் மனைவி, இதற்கு முன் இவள் பெயர் வான்ஸென்பாக் அதாவது லூத் தரன் பிரிவினர்,”
நத்தானியேல் சிறிது நேரம் யோசித்துவிட்டு தன் அப்பாவின் பின்னால் போய் மறைந்து கொண் டான்.
“சரி.. சரி.. அப்புறம் உன் வாழ்க்கை எப்படிப் போகிறது? அதைச் சொல்.” என நண்பனைப் பார்த்த பரவசத்துடன் கேட்டான் குண்டான ஆள். “இப்பொழுது வேலையில் இருக்கிறாயா? ஓய்வு பெற்றுவிட்டாயா?” என விசாரித்தான்.
“வேலையில்தான் இருக்கிறேன். 8ஆம் நிலை கிடைத்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. செயின் ஸ்டானிஸ்லாஸ் விருதும் கிடைத்துவிட் டது. சம்பளம் குறைவு தான். அதனால் என்ன? என் மனைவியின் இசை வகுப்புக்கள் மூலம் கொஞ்ச பணம் கிடைக்கிறது. நானும் என் பங்குக்கு, மரத் தாலான சிகரெட் பெட்டிகள் தயாரித்து விற்கிறேன். எல்லாம் முதல் தரமான சிகரெட் பெட்டிகள். ஒரு பெட்டி ஒரு ரூபளுக்கு விற்கிறேன். பத்து பெட் டிகளுக்கு மேல் வாங்கினால், நிச்சயம் தள்ளு படி உண்டு. எப்படியோ சமாளிக்கிறோம். உனக்கு தெரியுமா, நான் அரசின் நிர்வாகத்துறை ஒன்றில் வேலை செய்து வந்தேன். நிர்வாகம்தான் என்னை இங்கு மாற்றிவிட்டது. சரி, உன் விஷயம் எப்படி? நீ இந்நேரம் ஸ்டேட் கவுன்சிலராகி இருப்பாய் என நினைக்கிறேன். அப்படித்தானே?” என ஆவலுடன் கேட்டான்.
“இன்னும் கொஞ்சம் உயர்வாக நினைத்துப் பார்!” என்றான் குண்டான ஆள். “ஆம், நான் பிரிவி கவுன்சிலராகி வெகு நாளாகிறது. எனக்கு ஏற்கெ னவே இரண்டு விருதுகள் கிடைத்துவிட்டன” என் றான்.
இதைக் கேட்ட ஒல்லியான நபரின் முகம் திடீ ரென வெளிறிப் போனது. பிறகு கல்லாய் இறு கியது. அப்படியே இருந்த இடத்தில் அசையா மல் நின்றிருந்தான். பல் தெரிய சிரித்ததில் முகம் அஷ்ட கோணலானது. கூனிக்குறுகி வளைந்ததில், அவன் கையில் இருந்த பெட்டிகளும் கூட குறுகிச் சுருங்க ஆரம்பித்தன.
அவனுடைய மனைவியின் நீண்ட முகவாய் மேலும் நீண்டது. நத்தானியேல் விறைத்தபடி நேராக நின்று எல்லா பொத்தான்களையும் போட ஆரம்பித்தான்.
“நான் தங்களைச் சந்தித்து எனக்கு எவ் வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா ? என் இளமைக்கால நண்பன் ஒருவன் திடுதிப்பென்று இவ்வளவு பெரிய ஆளாக மாறி இருக்கிறான் என்று சொன்னால்… ஹி ! ஹி !.” என வளைந்தான் ஒல் லியான நபர்.
“போதும். போதுமப்பா!” ஏன் இப்படியெல் லாம் பேசுகிறாய்? நீயும் நானும் சிறிய வயதிலி ருந்தே பழகும் பழைய நண்பர்கள். நமக்குள் பத விக்கு எந்த இடமும் கிடையாது.” எனக் குண்டான நபர் கோபமகச் சொன்னான்.
“ஆனால் சார், உண்மையிலேயே…” என அசட்டுத்தனமாக சிரித்த ஒல்லியான நபர் மேலும் சுருங்கியது போல் ஆனான்.
தொடர்ந்தவன், ”தங்கள் மேலான கவனத்துக்கு… இவன் என் மகன் நத்தானியேல். இவள் என் மனைவி லுயீஸ். ஒரு வகையில் பார்த்தால், லூத்தரன் பிரிவினர்…” என மீண்டும் ஒரு முறை அறிமுகம் செய்து வைத்தான்.
குண்டான நபர் எதையோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் அந்த ஒல்லியான நப ரின் முகத்தினை ஆக்கிரமித்திருந்த அளவுக்கதிக மான பணிவும், குழைவும் பிரிவி கவுன்சிலருக்குக் குமட்டலை ஏற்படுத்தவே, எதையும் சொல்லாமல் தவிர்த்தான். நண்பனிடமிருந்து சற்று பின் வாங்கி, விடைபெறும் விதமாக குண்டான நபர் கையை நீட் டினான். அந்த கையிலிருந்து மூன்று விரல்களை மட்டும் பற்றிய ஒல்லியானவன், தன் மொத்த உடம் பையும் வளைத்து வணக்கம் தெரிவித்து அசட்டுத் தனமாகச் சிரித்தான்.
அவனுடைய மனைவியும் சிரித்தாள். நத்தானியேல் தன் கால்களைத் தேய்த்துவிட்டு தொப்பியைக் கழட்டினான். மூவருக்கும் அச்சம்பவம் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
– இக்கதை “ஒஸ்கோல்கி” என்னும் இதழில் 1883இல் வெளிவந்தது. 1886இல் செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் வெளியான ”மாட்லி கதைகள்” என் னும் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றிருந்தது.
– ஆன்டன் செக்காவ் ஆகச்சிறந்த கதைகள், தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், முதற் பதிப்பு: 2019, தடாகம் பதிப்பகம், சென்னை.