பேச்சாளர்
கதையாசிரியர்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 73
(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று காலை, வருமானவரி ஆய்வாளர் கிரில் இவாநோவிச் வாவிலோநோவின் இறுதிச் சடங்கு கள் நடக்க இருந்தன. நம் நாட்டில் பரவலாகக் காணப்படும் இரண்டு நோய்களால் அவர் இறந் துவிட்டார் . ஒன்று குடிப்பழக்கம். மற்றொன்று,சண் டைபிடிக்கும் மனைவி.
தேவாலயத்திலிருந்து கல்லறையை நோக்கி இறுதி ஊர்வலம் புறப்படத் தயாராகிக் கொண் டிருந்தது. இறந்தவருடன் பணியாற்றிய ஊழியர் களில் ஒருவனான பாப்லாவ்ஸ்கி, கோச்வண்டி யொன்றில் ஏறித் தன் நண்பன் கிரிகோரி பெட்ரோ விட்ச் சாப்போய்க்கின் என்பவனை அழைத்து வர விரைந்தான். இளம் வயது என்றாலும் சாப்போய்க் கின் ஊரில் பிரபலமாகியிருந்தான்.
அவனது அபூர்வமான ஆற்றலைப் பற்றி பெரும்பான்மையான வாசகர்கள் அறிந்திருப்பீர் கள். திருமணம், பிறந்த நாள், இறந்த நாள், இறுதிச் சடங்குகள் என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் உடன டியாக அற்புதமான சொற்பொழிவை ஆற்றுவதில் தனித்திறமை படைத்தவன். எப்பொழுது தேவை என்றாலும் பேசக்கூடியவன். பாதி தூக்கத்தில் இருந்தாலும் வெறும் வயிற்றில் இருந்தாலும், மூச் சுமுட்டக் குடித்திருந்தாலும், காய்ச்சலில் இருந்தா லும்கூட எதைப்பற்றியும் கவலை இல்லை. அவன் பேச்சு சீராக, சரளமாக மடைதிறந்த வெள்ள மாகக் கணக்கின்றிக் கொட்டிக் கொண்டேயிருக் கும். விடுதியில் இருக்கும் கரப்பான்பூச்சிகளை விட அவன் பேச்சில் இருக்கும் சோக வார்த்தைகள் அதிகம். அவன் எப்பொழுதும் நீட்டி முழக்கி அலங்காரமாக பேசுவான். சில நேரங்களில் அள வுக்கு அதிகமாகப் பேசிவிடுவான். எந்த அளவுக் குத் தெரியுமா ! வர்த்தகர் ஒருவர் வீட்டுத் திரு மணத்தில் அவன் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போக, அவன் பேச்சை நிறுத்த காவலர் உதவியை நாட வேண்டியதாகிவிட்டது.
சாப்போய்க்கின்னை அவனது வீட்டில் போய் பார்த்த பாப்லாவ்ஸ்கி, ”உன்னைத்தான் பார்க்க வந்தேன். உடனே கோட்டைப் போட்டுக் கொண்டு புறப்படு! நம் அதிகாரி ஒருவர் இறந்து விட்டார். உடனடியாக அடுத்த உலகத்துக்கு அவரை அனுப்பவேண்டும். அதற்கான ஏற்பாடுக ளைச் செய்து கொண்டிருக்கிறோம். அவரை வழி யனுப்பிப் பேச ஆள் வேண்டும்… உன்னைத்தான் நம்பி இருக்கிறோம். கீழ்மட்டத்தில் யாராவது இறந் திருந்தால் நாங்கள் இவ்வளவு சிரத்தை எடுத்தி ருக்கமாட்டோம். இறந்திருப்பது எங்கள் காரியத ரிசி. ஒரு வகையில் பார்த்தால் எங்கள் அலுவல கத்தில் அவர் ஒரு தூண் போன்றவர். நல்லதொரு சொற்பொழிவு இல்லாமல் அவரை வழியனுப்புவது முறையாக இருக்காது” என்றான்.
“ஓ ! உங்கள் காரியதரிசியா! யார்? அந்தக் குடி காரன்தானே?”
கொட்டாவி விட்டபடி சாப்போய்க்கின் கேட்டான்.
”ஆமாம். அவரேதான். ஆனால், உனக்குச் சாப் பிட கேக், குடிக்க ஏதாவது கொடுப்போம். நீ வந்து போக கோச் வண்டிக் கட்டணத் தொகையும் உண்டு. என்ன சொல்கிறாய்? நீ அவரது கல்லறையின் அருகில் நின்று வழக்கமான பல்லவியில் ஏதா வது நல்லதாக அவரைப்பற்றி பேசு. உனக்கு நாங் கள் என்றென்றும் கடன்பட்டிருப்போம்.’
சாப்போய்க்கின் சந்தோஷமாக ஒப்புக்கொண் டான். தலைமுடியை சரி செய்து கொண்டு, முகத் தில் சோகத்தை வரவழைத்துக்கொண்டு பாப் லாஸ்கியுடன் புறப்பட்டான்.
கோச்வண்டியில் ஏறும்போது, “உன் காரியதரி சியை எனக்கு நன்றாகத் தெரியும்” என்றான் சாப் போய்க்கின்.
”அவன் ஒரு பொறுக்கி; அயோக்கியன், இப்படியும் சில பேர் இருக்கிறார்கள் நல்ல வேளையாக கடவுள் அவனுக்கு ஓய்வளித்துவிட்டார்” என்றான்.
“போகட்டும், இப்போது இறந்தவரைப் பற்றித் தவறாகப் பேசாதே?”
”பேசமாட்டேன், இறந்தவரைப் பற்றி நல்லதா கப் பேசவேண்டும் அல்லது பேசாமல் இருக்க வேண்டும். ஆனால், அதற்காக அவன் அயோக்கியன் என்னும் உண்மை மாறிவிடப்போவதில்லை”.
இரு நண்பர்களும் போய் சவ ஊர்வலத்துடன் சேர்ந்து கொண்டார்கள், ஊர்வலம் மிகவும் மெது வாக சென்றதால், அவர்கள் கல்லறைக்கு செல் லும் வழியில் மூன்று முறை, இறந்தவரின் நினை வாக, மதுக்கூடத்துக்குள் நுழைந்து நுழைந்து திரும்பினார்கள்.
சவ ஊர்வலம் கல்லறையை அடைந்ததும் இறுதிச் சடங்குகள் ஆரம்பித்தன. இறந்தவரின் மாமியார், மனைவி, மைத்துனர் ஆகியோர் சம்பிரதாயப்படி அழுது கொண்டிருந்தனர். சவப் பெட் டியை குழியில் இறக்கிய போது அவர் மனைவி, ”என்னை விடுங்கள் நானும் அவரோடு சென்று விடுகிறேன்” என்று கதறினாள். அனேகமாக, அவளுக்கு வரவிருக்கும் ஓய்வூதிய அனுகூலங்களை எண்ணிப் பார்த்திருக்கவேண்டும். அதனால், அவ்வாறு செய்யவில்லை. அனைத்துச் சடங்குகளும் முடிந்து எல்லாரும் அமைதியான பின் சாப்போய்க்கின் முன்னால் வந்தான். சுற்றியிருந்தவர்களை ஒருமுறை பார்த்துவிட்டுத் தன் இரங்கல் உரையைத் தொடங்கினான்.
”என் கண்களையும் காதுகளையும் என்னா லேயே நம்ப முடியவில்லை. இந்த சவப்பெட்டி, கண்ணீர் தோய்ந்த முகங்கள், அழுகுரல்கள்… இவையெல்லாம் ஒரு கனவாக இருந்து விடக்கூ டாதா? ஐயோ, இது கனவல்ல ; நம் கண்கள் நம்மை ஏமாற்றவில்லை. நேற்று வரை, நம் கண் முன்னே சுறுசுறுப்புடனும், துடிப்புடனும், சளைக் காமல் ஒரு தேனீயைப் போல நாட்டின் வளத் துக்காக அயராது உழைத்தவர். இன்றோ அவர் மண்ணுக்குள் மறைந்து, கானல் நீராய் காட்சிய ளிக்கிறார். கொடிய மரணம் தன் இரும்புக் கரங்க ளால் அவரை பிணைத்து விட்டது. வயது முதிர்ந்த நிலையிலும் அபரிமிதமான ஆற்றலுடனும், நம்பிக் கையுடனும் வாழ்ந்துவந்தார். இது ஈடு செய்ய முடி யாத பேரிழப்பு! அவருடைய இடத்தை யாரால் நிரப்ப முடியும்?
நம்மிடையே நல்ல உயரதிகாரிகள் பலர் உண் டு.ஆனால், ப்ரொகோபி ஓசிபிச் அவர்களுக்கெல் லாம் அப்பாற்ப்பட்டவர். எவ்வித பயமுமின்றி, யாருக்கும் எந்த சலுகையும் காட்டாமல் தன்னுடைய கடமையை, அல்லும் பகலும் ஓய்வில்லா மல் நேர்மையாகச் செய்துவந்தவர். அவருடைய நேர்மைக்கு விலையாக, பலர் அவரை இணங்கச் செய்யலாமென, கொடுக்க முன்வந்த பொருள்க ளையெல்லாம் சிறிதும் சட்டை செய்யாதவர். தன் னுடைய சொற்ப வருமானத்தின் பெரும் பகுதியை ஏழை எளியவர்களுக்கு, ப்ரொகோபி ஓசிபிச் உத வியதை நாமே நம் கண்களால் பார்த்திருக்கி றோம். இங்கு, இப்பொழுது நம் எதிரே அழுது புலம் பும் இந்த விதவைகளும், அனாதைகளும் அவரு டைய கருணையினால் வாழ்வு பெற்றவர்கள்தான்.
அவர் கடமையில் கண்ணியத்தை கடைபி டித்ததோடு மட்டுமல்லாமல், உலக இன்பங்களில் சிறிதும் நாட்டம் இல்லாதவர். இறுதிவரை, இல்லற வாழ்வில் ஈடுபடாமல் பிரம்மசாரியாகவே வாழ்ந் தவர். ஒரு நண்பனாய் அவர் இடத்தை யாரால் பூர்த்தி செய்ய முடியும்? இப்பொழுது கூட, அவரு டைய மழிக்கப்பட்ட, புன்னகை தவழும் அழகான முகத்தைப் பார்க்க முடிகிறது. அவருடைய மென் மையான, அன்பு தவழும் குரல் என் காதுகளில் ஒலிப்பதைப் உணருகிறேன். ப்ரொகோபி ஓசிபிச் ! உமது ஆன்மா அமைதியடையட்டும். ஒர் உன்னத மான, நேர்மையான உழைப்பாளியாகிய நீ நிரந்திர ஓய்வு அடைந்துவிட்டாய்”
சாப்போய்க்கின் தன் உரையை தொடர்ந்து கொண்டிருந்தான். ஆனால் கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். அனைவரும் அவன் இரங்கல் உரையை ரசித்தனர். சிலரது கண்களில் கண்ணீரைக்கூட அப்பேச்சு வரவழைத்தது. எனினும், அவன் குறிப்பிட்ட சில விஷயங்கள், அவர்களுக்கு விசித்திரமாக தோன்றின. முதலாவதாக, அவன் ஏன் இறந்தவரை ப்ரொ கோபி ஓசிபிச் என்று விளித்தான், அவருடைய பெயர் கிரில் இவாநோவிச்தானே ! இரண்டாவது, இறந்தவர் தன் மனைவியுடன் எலியும் பூனை யும் போல இறுவதிவரை சண்டையிட்டு கொண்டி ருந்தது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க அவரைத் திருமணமாகாதவர் என்று சொல்வது அபத்தமானது. மூன்றாவதாக, அவர் அடர்த்தியான சிவப்பு தாடி வைத்திருந்தார். வாழ்நாளில் ஒருபோ தும் அவர் மழித்ததே இல்லை. ஆனால் இந்தப் பேச்சாளர் அழகான மழித்த முகம் என்று ஏன் குறிப்பிடவேண்டும்? அவர்கள் குழப்பத்தோடு ஒரு வரையொருவர் பார்த்துக்கொண்டு தங்கள் தோள் களைக் குலுக்கிக் கொண்டனர்.
கல்லறையைப் பார்த்த வண்ணம் சாப்போய்க்கின் தன் உரையை உணர்ச்சிப்பூர்வமாக தொடர்ந்தான்.
“ப்ரொகோபி ஓசிபிச், உங்கள் முகம் வசீகரமில் லாமல், அழகற்றதாக இருந்திருக்கலாம். நீங்கள் கண்டிப்பான ஒழுக்கமும், கடுகடுப்பான குணமும் கொண்டவர். ஆனால், இந்த மாயதோற்றத்துக்குள், நேர்மையான, மென்மையான இதயம் ஒன்று துடித்து கொண்டிருந்தது” என்பது நம் எல்லோருக்கும் தெரியும்”.
இப்பொழுது, அங்கு கூடியிருந்தவர்கள் சாப் போய்க்கின் பேச்சில் சில மாறுதல்கள் ஏற்படு வதை கவனித்தார்கள். அவன் பார்வை ஓரிடத் தைக் கூர்ந்து நோக்கியது. குழப்பத்துடன் தன் தோள்களை குலுக்கியபடி தன் உரையை நிறுத்தி விட்டு பாப்லாப்ஸ்கியின் பக்கமாக திரும்பி, கண்களில் பயத்துடன்,
”இங்கே கவனி, அவன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான்”, என்றான்.
“யாரைச் சொல்கிறாய்?”
”ப்ரொகோபி ஓசிபிச் தான்! அதோ அந்தக் கல்லறைக்குப் பக்கத்தில்தான் நின்று கொண்டிருக்கிறான்”
”ஆனால், இறந்தவர் இவரல்ல, அவர் பெயர் கிரில் இவாநோவிச்.”
“உன் மேலதிகாரி தானே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாய்!”
“ஆமாம் ! கிரில் இவாநோவிச் தான் என் மேலதி காரி. நீ முட்டாள் போலத் தவறாகப் புரிந்து கொண் டாய். ப்ரொகோபி ஓசிபிச் என் மேலதிகாரியாக இருந்துள்ளார்.ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்பே இரண்டாவது பிரிவுக்கு அவர் தலைவராக மாற்றலாகிப் போய்விட்டார்.
”எனக்கு எப்படித் தெரியும்?”
”சரி! நீ பேசிக்கொண்டே இரு, இப் பொழுது நிறுத்தினால் தர்ம சங்கடமாகப் போய்விடும்”
சாப்போய்க்கின் கல்லறையின் பக்க மாகத் திரும்பி, விட்ட இடத்திலிருந்து, தன் சாதுர் யமான பேச்சைத் தொய்வின்றித் தொடர்ந்தான். கல்லறையின் பக்கத்தில் நன்கு மழித்த முகத்து டன், வயதான ப்ரொகோபி ஓசிபிச் நின்று கொண்டு கோபமாக சாப்போய்கின்னையே முறைத்துக் கொண்டிருந்தார்.
“என்ன ஒரு திறமைசாலி ! உயிரோடு இருக்கின்றவனைப் புதைத்துவிட்டானே!” என்று ஆச்சரியமடைந்து, அங்கிருந்தவர்கள் கல்லறையி லிருந்து வீடுதிரும்பினர்.
ப்ரொகோபி ஓசிபிச் சாப்போய்க்கின்னிடம் வந்து கோபமாக பொரிந்துதள்ளினான்.
”தம்பி! நீ செய்தது சரியில்ல. உன் பேச்சு இறந் தவருக்கு வேண்டுமானால் பெருமை சேர்ப்பதாக இருக்கலாம். ஆனால் என் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதால் என்னைக் கேலி செய்வதாகவே இருந்தது. யாருக்கும் எந்த சலுகையும் செய்ய மாட்டேன், லஞ்சம் வாங்க மாட்டேன் என்றெல்லாம் உயிரோடு உள்ள ஒரு மனிதரைப் பற்றிச் சொல்வது கேலிப் பேச்சாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும். அதிலும், என் முகத்தைப் பற்றி அவ்வளவு விரிவாக யாரும் உன்னைக் கேட்கவில்லை. வசீகரமில்லாத, அழகில்லாத – சரி அது எப்படியோ இருக்கட்டும், அதனோடு என் குணாதிசயத்தை அத்தனைப்பேர் எதிரில் யார் உன்னை வெளிச்சத்தை போட்டுக் காட்டச் சொன்னது. எனக்கு அது மிகவும் அவமானமாகி விட்டது ”.
– இக்கதை முதன்முதலில் 1886 ஆம் ஆண்டு வெளிவந்தது.
– ஆன்டன் செக்காவ் ஆகச்சிறந்த கதைகள், தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், முதற் பதிப்பு: 2019, தடாகம் பதிப்பகம், சென்னை.