சுமப்பதும் சுகமே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2025
பார்வையிட்டோர்: 176 
 
 

அது ஒரு மலைப் பிரதேசம். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று டீ தோட்டம். கோடைக்காலத்தில் மிக இதமாக இருக்கும். இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்து விடுதிகளில் தங்கி இன்புற்றுச் செல்வது வழக்கம்.

அன்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அங்கு வசித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றுத் தெரியாமலேயே அன்றைய இரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 2 மணிக்குப் பெய்த கன மழையால் பெரிய காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அதனால் மிகப்பெரிய நிலச்சரிவும் ஏற்பட்டது. மழை நீர் வெள்ளமாகக் கரைபுரண்டு ஓடியது.

அங்கிருந்த வீடுகள் கடைகள் ஓட்டல்கள் உள்ளிட்ட பெரிய பெரிய கட்டடங்கள் அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்து, மண்ணுக்குள் புதைய ஆரம்பித்தது. அங்கிருந்த மக்கள் செய்வதறியாது அபயக் குரல் எழுப்பினர். கையில் கிடைத்த பொருட்களையும் பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு இடர்பாடுகளிலிருந்து எப்படியோ மீண்டு கரை சேர ஆரம்பித்தனர்.

குமாரும் சேகரும் அப்போதுதான் இரவு பணி முடித்து அந்த வழியாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் கண் முன் நடைபெற்ற நிலச்சரிவும் இயற்கை சீற்றமும் அவர்களை நிலைகுலையச் செய்தது. தாங்கள் ஓட்டி வந்த வண்டியை மேடான ஒரு பகுதியில் ஓரமாக நிறுத்திவிட்டு தைரியத்துடனும் துணிச்சலுடனும் இடர்பாடுகளில் சிக்கித் தவித்த மக்களைக் காப்பாற்ற முழு மூச்சுடன் ஈடுபட்டனர்.

ஏதே ஒரு தைரியத்தில் அந்த பெருமழையையும் பொருட்படுத்தாமல் வயதானவர்கள, தாய்மார்கள், பிள்ளைகள் என சுமார் 30க்கும் மேற்பட்டோரைப் பத்திரமாகக் காப்பாற்றி கரை சேர்த்தனர். மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. அதில் பல கால்நடைகளும் செல்லப் பிராணிகளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தன.

திடீரென “காப்பாத்துங்க காப்பாற்றுங்க” என்ற பெண்ணின் அபய குரல் கேட்டது. திரும்பிப் பார்த்த குமார் ஒரு தாய் தன்னுடைய கையில் ஒரு பச்சிளம் குழந்தையை இறுகப் பற்றிக் கொண்டு வெள்ளத்தால் அடித்துச் செல்லும் காட்சியைப் பார்க்க முடிந்தது. உடனே குமார் தனது நண்பன் சேகரிடம், டேய் நான் அந்த அம்மாவைக் காப்பாற்றப் போகிறேன் என்று கூறிக்கொண்டே அங்கு ஓட ஆரம்பித்தான்.

அதைப் பார்த்த சேகர் டேய் டேய் குமார் அது மிகவும் ஆபத்தான இடம்டா அங்கு போகாதே போகாதே என்று கத்த ஆரம்பித்தான். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத குமார் எப்படியோ கைக் குழந்தையை அரவணைத்துக் கொண்டிருந்து அபத்தில் தள்ளாடிக் கொண்டிருந்த அந்தத் தாயின் அருகில் சென்று அவரைத் தன் முதுகில் சுமந்து கொண்டு பாதுகாப்பாகக் காப்பாற்றி பக்கத்திலிருந்த பாறையின் மீது அமரச் செய்தான்.

பிறகு அங்கிருந்து வெள்ளத்தில் சிக்கித் தவித்த மேலும் ஒரு முதியவரைக் காப்பாற்ற தன் உயிரைப் பணயம் வைத்து முயன்றான். இப்போதும் சேகர் அவனைப் பார்த்து, “டேய், டேய், போகாதேடா, வா வெள்ளம் கரை புரண்டோடுது, நாம வீட்டிற்குப் போய்விடுவோம்;” என்று கத்த ஆரம்பித்தான். ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத குமார் தன் முழு மூச்சுடன் முயன்று அந்தப் பெரியவரைக் காப்பாற்ற காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு அவரை நோக்கிப் போகத் தொடங்கினான்.

திடீரென அப்போது வந்த மிகப் பெரிய வெள்ளத்தின் வேகத்தை எதிர்க்க முடியாமல் வெள்ளத்திலே அடித்துச் செல்லப்பட்டான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சேகர் ஐயோ போய் விட்டாயே குமார் என்று கூச்சலிட்டது அந்த இருட்டிலும் எதிரொலித்தது.

தன் உயிரைப் பணயம் வைத்துப் பலரைக் காப்பாற்றிய குமார் வெள்ளத்தில் அமிழ்ந்து போனான். ஆனால் அடுத்த நாள் வெளி வந்த தினசரி நாளிதழில் அவனது சிரித்த முகம் அனைவரது அனுதாபத்தையும் பெற்றது. அதுமட்டுமல்லாமல் குமார் அனைவரது உள்ளங்களிலும் தெய்வமாகத் திகழ ஆரம்பித்தான்.

வாழ்வது ஒருமுறை தான். வாழ்த்தட்டும் தலைமுறை என்று அன்றைய தினம் பல தியாக உள்ளங்கள் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி பேரிடர் பாடுகளில் சிக்கித் தவித்த மக்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தனர். தாயை இழந்தப் பச்சிளங் குழந்தைகளை ஜாதி மதம் பார்க்காமல் தன் மார்போடணைத்துப் பால் புகட்டினர்.

பெரு வெள்ளத்திற்கு அக்கரையில் தத்தளித்த மக்களை, அக்கரையோடு பார்த்து கயிற்றின் மூலம் அக்கரைக்குச் சென்ற செவிலியர் அவர்களுக்கு மருத்துவம் பார்த்தனர். இப்படி பலர் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து பல உயிர்களைக் காப்பாற்றினர். தன்னலம்; மறந்து பிறர் நலத்தோடு பிருக்கு உதவக் காரணம் அவர்களிடமிருந்த அன்பு, பண்பு, பாசம், நேசம், ஈகைக் குணம் எனும் மனிதப் பண்புகளால்தான்.

நாம் வாழும் சமூகத்தின் விழுமியச் சரிவுகளை செப்பனிட்டு சீர்தூக்கி நிமிர்த்த விரும்பவோர்; எத்திக்கிலிருந்தும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த எதிர்ப்புகளை ஏற்று காயப்பட்ட கனிந்த இதயத்தோடு சவால்களைச் சமாளித்து மனிதமாபிமானத்தில்; திளைத்து நிற்பது இக்காலக்கட்டத்தில் மிக மிக அவசியம்.

கடவுளின் கிருபையால் நாம் நிரப்பப்படும் போதுதான் நம்மாலும் மற்றவரை அன்பாக நடத்தவும் பிறரின் சுமைகளைத் தாங்கி அவர்களுக்கு ஆறுதலாக ஆதரவாக இருக்க முடியும் என்பதை அறியலாம்..

நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *