சக்கை





(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எலும்பும் தோலுமாய்க் கிழட்டுப் பசு ஒதுக்குப் புறத்தில் கவனிப்பாரற்றுப் படுத்திருந்ததை வெள்ளாடு கவலையோடு நோக்கியது.
பசுவைப் பார்த்து, ‘முன்பெல்லாம் உன்னை வீட்டுக் காரன் நாள் தவறாமல் குளிப்பாட்டுவானே புல்லும் வைக்கோலும் போட்டுத் தடவிக் கொடுப்பானே – இப் போது திரும்பிக் கூடப் பார்ப்பதில்லையே ஏன்?’ என்று கேட்டது ஆடு.
பசு பெருமூச்சு விட்டது.
‘பயனில்லை – அதனால் பார்ப்பதில்லை’ என்றது பசு.
சுருக்கமாக அது சொன்னது:-
‘மடியில் பாலும் இல்லை
மதிக்க ஆளும் இல்லை’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.