முகவரி





(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மழை.
‘வழங்கும் வானமே நீ வாழ்க’ என்று நான்கு திசைகளும் வானத்தை வாழ்த்தின.
காற்றுக்குச் சினம் பொங்கியது.
‘என்ன கொடுமை! வானமா வழங்கியது?’
பூமிக்காகக் காற்று பொருமியது:-
‘நீர் கொடுப்பதோ பூமி
பேர் எடுப்பதோ வானம்’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.