சொரணை





(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களை யல்லாம் தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது.
‘மனிதர்களின் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உண்டாக்குகிறாயே பார்… பார்… அவர்கள் என்றோ ஒருநாள் வேரோடு உன்னைப் பிடுங்கி எங்காவது பயிர் களுக்கு எருவாய்ப் புதைத்துவிடப் போகிறார்கள்’ என்றது அருகம்புல்.
நெருஞ்சி சூடானது.
‘என்னைக் காலால் மிதித்து வதைக்கிறவர்களையெல்லாம் நான் தாங்கிக்கொள்ள வேண்டுமாக்கும்…’
நெருஞ்சிப்புல் சொன்னது:-
‘வதைபடுவதை விட
புதைபடுவது மேல்’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.