சாக்கடை மேடையில் ஒரு மாநாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2025
பார்வையிட்டோர்: 1,049 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த மாநகரத்தின் அகலமான கார்பட் வீதியின் இரு மருங்குகளிலும் ஓடுகின்ற கால்வாய்கள் போன்ற கான்கள் இரண்டும் சந்திக்கின்ற பெரிய சாக்கடையின் இறுதி முனையில், கொங்க்ரீட் மேடையின் அடியில், அந்த மாநாடு ஏற்பாடாகி யிருந்தது. மாநாட்டு ஏற்பாடுகள் இன்னும் முடியவில்லை யாதலால், நேரகாலத்துடன் வந்து அரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர் நுளம்புகள் “ம்ஹூம்..’ என்று முனகிக் கொண்டன. ஆம். அது சர்வதேச நுளம்புகளின் மாநாடு. நேரம் செல்ல, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளாக வருகை தந்திருந்த நுளம்புகள் யாவும் தத்தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் வந்து அமரத் தொடங்கின. கொங்க்ரீட் மூடியின் நடுவில் காணப்பட்ட துளையொன்றின் வழியே அந்த மாநாட்டு நிகழ்ச்சிகள் வெளியில் சூழ்ந்து நிற்கும் பெண் நுளம்பு களுக்கும், குழந்தை நுளம்புகளுக்கும் கேட்க வேண்டுமென்ப தற்காக இரு பெரிய ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. பருத்த உடம்பைக் கொண்ட அந்தி நேர நுளம்பு பெருஞ்சிரமத்துடன் “one, two, three” என்று கூறியபடி மைக் டெஸ்ட் செய்து கொண்டிருந்தது. மாநாட்டு மண்டபத்திலிருந்து வீதியின் தொடக்கத்திலிருக்கும் சாக்கடை முனைவரை நுளம்புகளின் கருங்கொடி எங்கும் பறந்து கொண்டிருந்தது. இருள் சூழ்ந்து வரும் முன்னிரவு நேரத்தில் குதூகலத்துடன் தனது அறிவிப்பைத் தொடங்கிற்று இந்தியக் கொசு. 

“இதோ…நீங்க எல்லாரும் ஆவலா எதிர்பார்த்துக் கிட்டிருக்கிற சர்வதேச நுளம்புகளின் மாநாடு ஆரம்பமாகிறது. எல்லோருக்கும் வணக்கம். உங்க எல்லாரையும் வரவேற்கிற துல நம் பாரத நாடு சார்பா பெருமிதம் கலந்த மகிழ்ச்சி யடைகிறேன். வெளியே நிற்கின்ற தோழர்களே, தயவு செய்த உங்கள் ஆசனத்தில் வந்து அமருங்கள். வாங்க. வந்து உகாருங்க. எல்லோருக்கும் மீண்டும் எனது நமஸ்காரம்…” 

பிடிகளுக்குள் கூட அவர்கள் கசங்கி மாண்டார்கள். பின்னர், சத்தமின்றி பறக்கின்ற நமது தோழர்கள் பிறந்தார்கள். பட்டி தொட்டி யெங்கும் தமது சேவையைத் தொடர்ந்தார்கள். மனித இனத்தைப் பார்த்துப் பார்த்து சம்ஹாரம் செய்தார்கள். எனினும், டி.டி.டி. மலத்தியன் போன்ற நாசகார சக்திகளால் அவர்களும் பெருமளவில் அழிந்து போனார்கள். இன்று களை கட்டியிருக்கும் இந்த மாநாடு உண்மையில் அவர்களது உயிர்த் தியாகத்தின் பேராலேயே உதயமானது. அவர்களது இரத்தங்களை அஸ்திவாரமாகக் கொண்டே உருவானது. இப்போது நாம் “ஙொய்” என்ற சத்தத்தையும் குறைத்து, மனிதனையும், விலங்குகளையும் எச்சரிக்கும் படியான சொறிச்சலையும் தவிர்த்து மிக மென்மையாகவும், மும்முரமாகவும் எமது கடமைகளைச் செய்ய முடிகின்ற தென்றால், தமது இன்னுயிர்களைத் தத்தம் செய்த எமது குலக்கொழுந்துகளின் தியாகத்தின் காரணமாகவே தவிர வேறல்ல. அவர்களது பரம்பரை ஜீன்கள் கூர்ப் படைந்த தனாலேயே நாம் வீர்யம்மிக்க மற்றொரு இனமாக தலைநிமிர்ந்து நிற்கின்றோம். சதிகார மனித இனத்துக்கு மிகப்பெரும் சவாலான டெங்கு ஆட்கொல்லி நோயையும் தோற்றுவித்து வருகின்றோம். இந்த வெற்றியைக் கொண்டாட முன்னர், எமக்கு வாழ்வு தந்த தியாகி நுளம்புகளை மரியாதை செய்யுமுகமாக ஒரு நிமிட மௌனாஞ்சலி செய்வோமாக…” என்று கூறிமுடித்து தலைவர் தொண்டையை செருமிக் கொண்டார். கூட்டத்தில் ஒரு சின்ன சலசலப்பும், தொடர்ந்து ஊசி விழுந்தால் கேட்கும்படியான நிசப்தமும் நிலவின. ஆம்; ஒரு நிமிட மௌனாஞ்சலி நிறைவேற்றப்பட்டது. அஞ்சலி முடித்து தமது ஆசனத்தில் அமரும்போது சில பெண்நுளம்புகள் தமது இனிய சந்ததிகளை.. பாதியிலேயே தொலைத்துவிட்ட மக்கள் கூட்டத்தை… எண்ணிக் கண்ணீர் சிந்திய கண்களைத் துடைத்து, மூக்கை உறிஞ்சிக் கொண்டன.” 

“நல்லது தோழர்களே, தலைவரது உருக்கமான உரையைக் கேட்டோம். நாம செஞ்சி முடிச்சிட்ட சாதனையை விட இன்னும் செய்யப் போறது அநேகம். பொறுத்திருந்து பாருங்க. ஆனானப்பட்ட மனுஷனுக்கே இனி நாங்க தண்ணி காட்டப்போற விதத்தை … இதோ இப்ப உங்க முன்னால எங்க விசேஷ அதிதி பேசப்போறார். எங்கே உங்க கரகோஷம்… வருக வருக என வரவேற்கிறோம் மிஸ்டர் சிக்கன் குன்யார்…”

அந்தி நேரத்து பெருநுளம்பு மைக் டெஸ்ட் பூரணமாகிவிட் திருப்தியில் மேடையில் ஒரு மூலையில் போட்டிருந்த கதிரையில் தனது உடம்பைத் திணித்துக் கொண்டது. ‘கடவுளே, மாநாடு நடந்து முடியிறவரைக்கும் மைக் ட்ரபள் பண்ணிடக்கூடாது..யப்பா..என்ன பாடாயிருக்கு இப்பல்லாம். ஓர வேலகூட செய்ய முடியிறதில்ல’ என்று தனக்குள் முனகிக் கொண்டது அது. விளக்கேற்றும் சம்பிர தாயங்கள் அந்த விழாவின் வெற்றிக்கு இடையூறாக இருக்கும் என்று கருதப்பட்டதால், கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சிகளைத் தொடங்குவதற்கு ஏற்பாட்டுக்குழு தீர்மானித் திருந்தது. அதன் படி கடவுள் வாழ்த்துக்குப் பின்னர் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. 

“தோழர்களே, மிக எளிமையான முறையில இந்த கூட்டத்த நடத்தி முடிக்கிறதுதான் எங்கட நோக்கம். அதனால் உடனடியா நிகழ்ச்சிகளுக்கு வருவோம். இப்ப தலைவர் உங்க முன்னால உரையாற்றுவார்” என்ற அறிவிப்புக்குப் பிறகு தலைவராக வீற்றிருந்த டெங்கு நுளம்பார் தனது தொடக்க வுரையை ஆற்றினார். 

“அன்பார்ந்த தோழர்களே… சகோதர சகோதரிகளே… உங்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த நல்வாழ்த்து களும், மாலை வணக்கமும் உரித்தாகுக. மண்டபம் நிறைந்து வழியும்படியாகவும், வெளியே கூட்டங் கூட்டமாகவும் குழுமி நிற்கின்ற உங்களது திருமுகங் களைக்காண நான் பேருவகை கொள்கிறேன். எவ்வளவு பெரிய வெற்றி! எனது இனம் பல்கிப் பெருகி ஊழி முடிவுவரை அழிவின்றி நிலைத்திருக்கும் என்பதற்கு இந்த மாநாடே ஒரு சாட்சியாக இருக்கின்றது…” 

கூட்டத்திலிருந்து பலத்த கரகோஷம் கிளம்பிற்று. “நொய்..” என்ற சப்தத்துடன் இளைஞர் நுளம்புகள் எழுந்து நர்த்தனமாடத் தொடங்கின. சிறிது நேரம் அந்த உற்சாகத்தைக் கரைபுரள விட்டபின் கம்பீரமாக மீண்டும் தொடர்ந்தார் தலைவர். 

“என் மக்களே…இந்த வெற்றி இலகுவில் கிடைத்த தல்ல.. பல போராட்டங்களக்கு மத்தியில் நமது எத்தனையோ இனிய தோழர்களைப் பலிகொடுத்து நாம் பெற்ற வெற்றியே இது. ஆரம்பத்தில் “நொய் … ஙொய்” என்று சத்தமிட்டு இயங்கிய நமது மூதாதையர்கள் அந்த சத்தத்தின் காரணமாகவே இனங்காணப்பட்டு எதிரிகளால் அழிக்கப் பட்டார்கள். எமது எதிரி வேறு யார்? இந்தப் படுபாவி மனிதன் தான். சின்னஞ்சிறு மனிதக் குட்டிகளின் 

மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த ‘சிக்கன் குன்யா’ நுளம்பார் தனது சால்வையை தோளிலிருந்து இழுத்து விட்டபடி அடுத்து பேசுவதற் காக எழுந்து நின்றார். பலத்த கரகோஷம் சாக்கடையையே அதிரச் செய்தது. மங்கைப் பருவத்து நுளம்பினங்கள் மிக இளமையாகத் தோற்ற மளிக்கும் பிரதம அதிதிமீது உடனே மையல் கொண்டு தமது கருவிழிகளால் அவரைப் பருகிக் கொண்டிருந்தன. அவர் புன்சிரிப்புடன் தனது பேருரைய ஆரம்பித்தார். 

“மதிப்புக்குரிய நுளம்பினப் பெருமக்களே வாழ்க, வளர்க, உங்கள் அனைவருக்கும் மிக இளையவனாகிய நான் எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் தனது தொடக்கவுரையில் கூறிய கருத்துகள் மிக முக்கியமானவை. நமது மூதாதையர்கள் செய்த பெரும் சேவைகளாலும், தியாகங்களாலுமே நாம் இன்று உலக வாழ் உயிரினங்களில் குறிப்பிடத்தக்க பூச்சியினமாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளோம். எமது பிரதான எதிரி மனிதன்தான். அவனை அழித்தொழிப்பதே எமது லட்சியம். அவனை அழிப்பதற்கான அல்லது அவனது வலிமையைக் குறைப்பதற் கான சகலவிதமான ஏற்பாடு களையும் நாம் எப்போதும் தயாராகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது பணிவான அபிப்ராயம். எமது எதிரியாகிய மனிதன், தன்னினத்தைத் தானே அழிப்பதற்கு அணுகுண்டுகளைக் கண்டுபிடித்தான். அடுத்த வீட்டிலிருக்கும் தனது அயல் மனிதனைக்கூட கவிழ்ப்பதற்கு மிகமோசமான குழிபறிப்பு வேலை களைச் செய்தான். நாமோ அவனை ஒரேயடியாக அழிப்பதற் கான உயிரியல் ரசாயனப் பதார்த்தங் களை மிக வெற்றிகரமாக உருவாக்கி வருகின்றோம். மலேரியா என்றும், டெங்கு நோய் என்றும் மனிதன் துவண்டு நிற்கின்ற இந்த வேளையில் சிக்கன் குன்யா எனும் நமது புதிய ஏவுகணை பரீட்சார்த்தமாக அனுப்பப்பட்டாலும், நம்பிக்கையூட்டிய வெற்றியை அளித் துள்ளது. இந்த ஏவுகணையிலிருந்து மனிதன் தப்பவே முடியாது. அவனையும்,அவனது முழு இனத்தையும் பலவீனமாக்கும்வரை நாம் ஓயவே கூடாது. அறிவும், தொழினுட்பமும், விஞ்ஞானமும் வளரவளர, மனிதன் கண்ட தெல்லாம் மாபெரும் தோல்வி தான். அவனது மனத்துக்குள்ளே சுயநலம் விஸ்வரூபம் எடுக்கும் போது, அவன் எப்போதும் சூழல் மீதான அக்கறையைத் தலைமேல் கொள்ளாதபோது, தன்னைத் தவிர பிறரை ஏறெடுத்தும் பார்க்காத மானுட நலன்’ மிகுந்து அவனை ஆட் கொண்டிருக்கின்றபோது… இந்த வேளையில், இந்த நிமிஷத்தில் நாம் நமது இலக்குகளை நோக்கி முன்னேறுவது மிக மிக சுலபம். இந்த வாய்ப்பை நாம் தவற விடக் கூடாது. மனிதனின் வலிமையைக் குறைத்து, அவனை நோயில் வீழ்த்தி, அல்லது மரணப் படுக்கையில் போட்டு, உலகின் மிக வலிமை மிக்க இனமாக எமது இனத்தை மாற்றிக் காட்டவேண்டும். இதுவே எம் அனைவரினதும் இறுதி இலட்சியமாக இருக்கட்டும். இந்த இலட்சியத்தை அடையும் முயற்சிகளில் எமக்கு வெற்றி கிட்டட்டும்… அல்லது வீரமரணம் கிடைக்கட்டும்.” 

மிக நிதானமாகவும், ஆர்ப்பாட்டமின்றியும் உரை யாற்றிய போதும், சிற்சில இடங்களில் உணர்ச்சி கொப்பளிக்க மேஜையில் தட்டிப் பேசினார் சிக்கன் குன்யார். அந்த உரைமீது அழ்ந்த சிந்தனையைச் செலுத்தியிருந்த அறிவிப்பாளர் சில நிமிட நேரம் சிந்தனையில் ஆழ்ந்தி ருந்தார். பிறகு தொண்டையைச் செருமிக்கொண்டு. “அடுத்த தாக பிரித்தானியா விலிருந்து வந்த பிரதிநிதியார் நுளம்பினம் எதிர்நோக்கியுள்ள பாரிய ஆபத்துகள் எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பிப்பார்” என்று கூறினார். 

பிரித்தானிய நுளம்பார் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

அதில், ஏற்கனவே பாவிக்கப்பட்ட டி.டி.டி, மலத்தியன் போன்ற திரவங்களைவிட மிக அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நுளம்பு வலை பற்றி பிரதானமாகக் குறிப்பிட்டிருந்தார். “நுளம்புச் சுருள்களும், மின்சாரத்தில் இயங்கும் கொசு வர்த்திகளும், மனித உடம்பில் பூசிக்கொள்ளப் படுகின்ற தைலங்களும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இல்லை. என்றபோதும், நுளம்பு வலை மிகப் பிரதானமான எதிரியின் ஆயுதமாகும். எனினும், மனிதன் தனது சுயநலம் மிக்க செய்கைகளினால் இந்த ஆயுதத்தை இன்னும். சரிவர கைக்கொள்ளும் புத்தியை பெற்றுக் கொள்ளவில்லை என்பது ஒரு ஆறுதல் தரும் செய்தி….. 

“இந்தச் செய்தியை நான் உங்கள் முன்னிலையில் சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் மனிதன் தனது இனத்தைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் குறுக்கு வழிகளினால் பின்னடைந்து நிற்கிறான் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் நாம் கூறியாக வேண்டும். உதாரணமாக, இன்று மனிதன் வெண்கட்டி போன்ற ஒரு பொருளை தன் நண்பர்களுக்கிடையில் கூடிய விலைக்கு விற்பனை செய்து, இதைப் பாவித்து ஒரு கோடு வரைந்தால்கூடப் போதும், இரண்டு வருடங்களுக்கு உங்கள் வீட்டுப் பக்கம் கொசுவே வராது என்று பொய் கூறுகிறான். ஏமாந்த சோனகிரிகள் பலரும் அந்த வார்த்தை ஜாலங்களை நம்பி காசை இறைக்கிறார்கள். இந்த வியாபாரத்தை நம்பி பலரும் சோடை போய் விட்டார்கள். இந்த வியாபாரம் நீடிக்கும்வரை நமது வெற்றியும் நிச்சயமானது. அது முடிந்தாலுமென்ன? இன்னொரு வியாபாரி வரவே வரப் போகிறான். அது தவிர, shopping bag, lunch sheet முதலிய பாவனைப் பொருட் களை மனிதன் கைக்கொள்ளும் வரையிலும் எமது இனத்திற்கு பேரழிவு ஏற்படும் அபாயம் அருகில் இல்லை என்றே கூறவேண்டும். சட்டம் ஏதோ ஒரு நாடு இருக்கிறதாம். அந்த நாட்டில் ஒரு இருக்கிறதாம். அங்கு ஒரு ஆண்மகன் மணமுடிப்பதானால் ஐம்பது நுளம்புகளை அடித்து சாகடித்து, ரெஜிஸ்ட்ராரிடம் காட்ட வேண்டுமாம். இந்தச் சட்டம் அமுல்படுத்தப் படுமானால் அந்த நாட்டில் நமது இனம் பூண்டோடு அழிந்து போகலாம். எனினும், இதிலும் ஒரு நப்பாசை. பாவி மனிதன் எதைத்தான் சரியாகச் செய்தான்? இந்த இடத்திலும் மோசடியும், ஊழலும் புரிவான். ரெஜிஸ்ட்ராருக்கு வழங்கி கையெழுத்து வாங்கிக் கொள்வான். அல்லது ஒருவன் கொன்ற நுளம்புகளை இன்னொருவன் கடனாகப் பெற்று ரெஜிஸ்ட்ராரிடம் கணக்குக் காட்டுவான். இந்த நிலை இருந்தால், அங்கும் எமக்கு அதிக ஆபத்தில்லை.” 

இவ்வாறு கூறிமுடித்தவுடன் ஒரு ஆயாசத்துடன் அவர் தனது கதிரையில் அமர்ந்து கொண்டார். இவ்வாய்வுரை, கூட்டத்தில் இருந்த பலரையும் சிந்திக்க வைத்துவிட்டது. தலைவரும் மோவாயில் கையூன்றி யோசனையில் ஆழ்ந் திருந்தார் சிறிது நேரம். அதை அவதானித்த அறிவிப்பாள ராகிய தென்னிந்தியக் கொசுவார், ”நண்பர்களே…. இந்த அய்வுக் கட்டுரை சார்பாக உங்கள் கருத்துகளை எதிர் பார்க்கிறோம். வெற்றிக்கு வழிகோலும் வலிமைமிக்க தந்திரங்கள் உங்கள் வசம் இருக்கலாம். அவற்றை எங்கள் முன்னிலையில் சமர்ப்பியுங்கள். இது குறித்து நாமனைவரும் ஒரு திறந்த மட்ட விவாதத்தை இப்போது மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து, “ஙொய்..” என்ற இரைச்சல். ஒவ்வொருவரும் தத்தமது கருத்துகளை பக்கத்தி லிருந்தவரிடம் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினர். 

கூட்டத்தின் மத்தியிலிருந்து எழுந்து நின்ற ஒரு பெரியவர் கூறினார். 

“வஞ்சக உள்ளம் கொண்ட மனிதன் பூகோள மயமாக்கல், கம்ப்யூட்டர் புரட்சி இவற்றுக்குள் நுழைந்து மேலே செல்லச்செல்ல, அவன் தனது அடிப்படை நலங்களைக்கூட கவனிக்காது விட்டுவிடுவான். நீர், நிலம், வளி… எது மாசடைந்தாலும் எனக்கென்ன என்றிருப்பான். எனவே, அவன் போகிற போக்கிலேயே விட்டுவிடுவோம். நமக்கு வெற்றி தானே சித்திக்கும்….” என்றார் அவர். 

தொடர்ந்து பேசிய இன்னொருவர், “மலேரியாவை ஏற்படுத்தும் அனோபிலிஸ் சகோதரிகளைப் போன்று, அனோபிலிஸ் சகோதரர்களும் தாவரச் சாற்றை உறிஞ்சு வதைக் குறைத்துக்கொண்டு, காலை மாலை தேநீர் வேளை களின் போதாவது மனித இரத்தத்தை உறிஞ்சும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதுவே ஆபத்தை எதிர் கொள்ளக்கூடிய சிறந்த வழி” என்று கருத்துத் தெரிவித்தார். அடுத்து மிக இளமையான பெண்நுளம்பு ஒன்று எழுந்தது. தனது குட்டைக் கொம்புகளை ஒருதரம் சிலுப்பிக்கொண்டு உணர்ச்சியுடன் பேசிற்று. 

“இந்த கியூலெக்ஸ் சகோதரர்கள் என்ன செய் கிறார்கள்? இவர்களது எந்த சேவையும் இதுவரை சரியாக நடைபெற வில்லை. யானைக்கால் நோயை பரப்புவதில் அவர்கள் காட்டும் சோம்பேறித்தனத்தை நான் மிகவும் கண்டிக்கிறேன். குறைந்த பட்சம் ஆண்டுக்கு நூறு எதிரி களாவது மாள வேண்டும். இப்போதைய புள்ளிவிபரங்களின்படி மிகக் குறைவான தொகையினரே இந்நோயால் இறக்கிறார்கள். இந்நோய் கட்டுப் பாட்டுக்குள் வந்துவிட்டதாக அவர்களது சுகாதார நிறுவனங்கள் அறிவித்த வண்ணமிருக் கின்றன. இது குறித்து கியூலெக்ஸ் சகோதரர்கள் தமது கருத்தைக் கூற வேண்டும்” என்று கொதித்தது அது. 

மீண்டும் கசமுசா என்ற இரைச்சல். கியூலெக்ஸ் கூட்டம் “ஙொய்.” என்ற இரைச்சலுடன் அந்த இளம் பெண்ணைத் தாக்குவதற்காகப் பறந்துசெல்ல, அவளது கூட்டம் அவளைச் சூழ்ந்துகொள்ள, ஒரே ரகளை பரபரப்பு. உடன் அறிவிப்பாளர் எழுந்து நின்றார். 

“அமைதி. அமைதி. எங்களது குழப்பம் எமது எதிரியின் வெற்றியாகிவிடும். சகோதரர்களே, உங்களை எச்சரிக்கிறேன். தயவுசெய்து உங்கள் ஆசனங்களில் அமருங்கள். ஒவ்வொருவரும் இங்கு உரிமையுடையவர்கள். ஆனால் தமது கருத்துக்களைக் கூறத்தான். தாக்குதலுக்கு அல்ல. தயவுசெய்து பொலிசாரையோ, இராணுவத்தின ரையோ கூப்பிடும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள். ப்ளீஸ்…”என்று கேட்டுக்கொண்டது. அந்த உருக்கமான அறிவிப்பைத் தொடர்ந்து தலைவர் எழுந்து நின்றார். யாவரும் அமைதியடைந்த நிலையில் அவரை உற்று நோக்கினர். 

”நாம் யாரையும் குறைகூற வேண்டாம். எல்லோரும் அவரவர்க்கு இயலுமான அளவு முயற்சிப்போம். மாநாட்டின் தலைவர் என்ற கோதாவில் உங்களுக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன். டெங்கு நோயினால் அதிர்ந்து போயிருக்கும் மனித இனத்தை… எனது முழு முதல் எதிரியை….மேலும் அழிப்பதற்கு நான் இரவு பகல் பாராது பாடுபடுவேன். எமது எதிரியின் இனத்தைச் சேர்ந்த வைத்தியர்களை நாம் பலியெடுத்தது பெரிய விடயமல்ல. இனிமேல் அரசியல் ஜூரத்தினால் தளர்ந்து போயிருக்கின்ற மக்கள் தலைவர்களையும், மக்களது பிரதிநிதிகளையும்கூட நான் பலியெடுப்பேன். காலை மாலை மட்டுமல்ல, இரவிலும் பகலிலும்கூட நான் பறந்து திரிந்து கருமமாற்றுவேன். மனிதன் குடிக்கும் ஒரு சொட்டு தண்ணீரின் மூலமாவது ஒரு கிருமியை அவனுடம்பில் செலுத்துவேன். இது சத்தியம்” என்று தனது நெஞ்சில் கைவைத்து சிறிதுநேரம் சிலையாக நின்றார் தலைவர். அதைத் தொடர்ந்து ஆக்ரோஷமாகப் பேசியவர்கள்கூட மௌனித்து தமது நெஞ்சில் கைவைத்து தமது உறுதிமொழிகளைத் தமக்குத்தாமே கூறிக் கொண்டனர். இதுவரை நடந்த நிகழ்ச்சி களைக் குறிப் பெடுத்துக் கொண்டிருந்த வங்காள தேசத்துக் கொசுவாரும் அவ்வாறே செய்துகொண்டார். 

மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக, அமெரிக்காவிலிருந்து வந்து கலந்துகொண்ட மலேரியா நுளம்பாருக்கு பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கப் பட்டது. அந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து அறிவிப்பாளர் பின்வருமாறு சாற்றினார். 

“அன்பர்களே, எமது மூதாதையருள் ஒருவரான மிஸ்டர் மலேரியா இன்னும் மனிதர்களுக்குத் தண்ணி காட்டி வருகிறார். அவர் நமக்கெல்லாம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர். ஆனாலும் தமது பணியைச் சளைக்காது தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த, எமது எதிரி இனத்தைச் சேர்ந்த மூளைசாலி ஒருவன் மலேரியா சகோதரர்களை தனது ஆய்வு கூடத்தில் வளர்த்து, அவற்றை அழிப்பதற்கான மருந்து களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டானாம். ஆனால், அங்கு நிலவும் மிக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காரணமாக அவனால் மைனர் மலேரியா ஒன்றைக்கூட வளர்க்க முடியாது போய்விட்டதாம். இப்படியாக பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு தமது கடமையைச் செவ்வனே செய்கின்ற நமது பெரியவர்களை வாயார வாழ்த்தி மகிழ்வோம். எங்கே உங்கள் கரகோஷம்…. ஹ்ஹாஹா… இத்துடன் இம்மாநாடு இனிதே நிறைவு பெறுகின்றது. வணக்கம்! வாழி நுளம்பினம்! வாழி பற்பல நூற்றாண்டு” 

கூட்டம் இரைச்சலுடன் முடிவுற்றது. கூடியிருந்த லட்சக்கணக்கான நுளம்புகள் மிக்க ஆரவாரத்துடன் “நொய்..” என்று கூச்சலிட்டபடி கலைந்து சென்றன. நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளும் நேரமாச்சே! அவை சாக்கடைக்கு வெளியே விரைந்து பறந்து சென்றன. 

எங்கே? அதோ அந்த வீதியோரத்தில் உறங்குகின்ற பிச்சைக்காரர்களின் இரத்தத்தைச் சுவைத்துப் பருகத்தான். 

– ஜீவநதி சிறுகதைச் சிறப்புமலர், தை-மாசி 2009.

– முடிவில் தொடங்கும் கதைகள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2012, நூலாசிரியர் வெளியீடு, கெகிறாவ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *