கனடா மாப்பிள்ளை





கண்ணா (எ) அன்பு, M.E., MBA (Finance) பொறியியல் பட்டதாரி. வேலை General Manager in leading corporate company.
கண்ணா (என்பது அம்மாவின் செல்ல பெயர் அன்பு என்பது தான் அவன் பெயர்) இன்று ஒரு அரை நாள் லீவு போடுப்பா. உனக்கு பெண் பார்க்க 4.00 மணிக்கு கிளம்ப வேண்டும், அப்போது தான் அவர்கள் வீட்டிற்கு 6.00 மணிக்காவது போக முடியும். நீ ஆபீஸ் போனால் வீடு வந்து சேர 8.00 மணி ஆகி விடும், என்ன சொல்கிறாய் என்று அம்மா வெகுளியாய் கேட்க, வெளியில் பேப்பர் படித்துக் கொண்டே இவர்களை கவனித்து கொண்டிருந்தார் அன்புவின் அப்பா., மீனாட்சி இங்கே வா என்று வெளியில் வர சொல்லி அழைத்தார் என்ன சொல்கிறாய்? அரை நாளா? அவன் ஆபீஸ் சென்று லேப் டாப் திறந்து வேலை செய்ய ஆரம்பித்தால் நேரம் போவதே அவனுக்கு தெரியாது !? தவிர கார்ப்பரேட் கம்பெனியில் எந்த நேரத்திலும் மீட்டிங் வைப்பார்கள், எப்போது முடிப்பார்கள் என்றே தெரியாது!
இவனாவது அரை நாள் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வரதாவது நடக்காத காரியம். ஒரு நாள் போட சொல்லு, நான் சொன்ன கேட்க மாட்டான் . நீயே சொல்லு என்றார்.
மீண்டும் பிள்ளையிடம் சென்ற அம்மா என்னப்பா நான் கேட்டதற்கு பதிலே காணோம் என்றாள்.
அம்மா… உங்கள் செளகரியத்திற்கெல்லாம் லீவு போட முடியாது என்றான் அன்பு.
இது நம் குடும்ப தலைவரின் உத்திரவா? நான் என்ன நம்ம குடும்ப தலைவரைப் போல் கிராமத்து பள்ளி ஆசிரியரா? நினைத்த நேரத்தில் லீவு போட, எனக்கு இன்று ஒரு அவசியமான மீட்டிங் உள்ளது. இன்னொரு நாள் பார்ப்போம் என்றான்.
(ஏதோ கோபத்தில் ஒரு நாள், நான் இந்த குடும்பத்தின் தலைவர் நான் சொல்வதை தான் நீங்கள் கேட்டு ஆக வேண்டும் என்று மீனாட்சி சுந்தரம் கூறியதில் இருந்து இன்று வரை அப்பா என்று அழைக்காமல் அப்பாவை கிண்டலாக குடும்ப தலைவர் என்று தான் பேசுவான் அன்பு.)
அவரை ஏன்டா வம்புக்கு இழுக்குறே என்று இன்றைக்காவது மீனாட்சி கூறுவாள் என்று எதிர்பாத்த மீனாட்சி சுந்தரம் வழக்கம் போல இன்றும் ஏமாற்றம் தான் அடைந்தார்.
தாய்க்கு மகன் மேல் தான் பாசம் அதிகம். கணவனுக்கு பரிந்து பேசினால் மகன் கோபம் கொள்வானோ என்ற பயம்
தன் மகனை இந்த நிலைக்கு உயர்த்தியது இந்த கிராமத்து ஆசிரியர் தான் என அவளுக்கும், தான் உயர்ந்த நிலையில் இருப்பது தன் தந்தையினால் தான் என்று அவனுக்கும் தெரியும். நான் சொல்வது அவர்களின் நல்லதுக்கு தான் என தெரிந்திருந்தாலும் இருவருமே என்னை ஒரு எதிரியை போல்தான் நினைப்பார்கள்.
“ஒரு நல்ல விவசாயி விதை விதைத்து, நாள்தோறும் தண்ணீர் ஊற்றி, உரமிட்டு, இரவு, பகல் என நேரம் பாராது கவனித்து மரம் வளர பாதுகாப்பு செய்து, அந்த மரம் பூ பூத்து, காய் காய்த்து அதை பழமாக்கி விற்பனைக்கு அனுப்பும் வரையில் பட்ட கஷ்டம் அந்த விவசாயிக்கு மட்டுமே தான் தெரியும்”.
“அது போலத்தான் குடும்பமும் . ஒரு பிள்ளையை பெற்றெடுத்து வளர்த்து அந்த பிள்ளை பள்ளிக்கு செல்லும் வரையில் தான் தாயின் கஷ்டங்கள் “.
“ஆனால் அந்த பிள்ளை ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களது படிக்க தரம் உயர்ந்த பள்ளியில் சேர்க்க ஆரம்பித்து பின்னர் பிள்ளைகள் விரும்பும் படிப்பை படிக்க தரமான கல்லூரியில் சேர்த்து அவர்களை நல்ல வேலைக்கு அனுப்பும் வரை அவர்களை உயர்த்த வேண்டிய கடமை, பொறுப்பு, பொறுமை ஒரு தாயை விட தந்தைக்கு தான் அதிகம்”
“ஒரு சில குடும்பங்களில் வேண்டுமானால் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு தாயின் பங்கு அதிகம் இருக்கலாம். ஆனால் பல குடும்பங்களில் தந்தை தான் முக்கிய காரணமாக இருப்பார்கள்”.
“இது இன்றளவில் பல குடும்பங்களில் தெரிவதில்லை. பிள்ளைகள் அம்மாவின் அன்பையும் அவர்களது சாப்பாட்டையும் மட்டுமே பெரிதாக எண்ணுகின்றனர்”
ஆனால் இன்றைய 21st century- ல் பல குடும்பங்களில் இந்த நிலையில் தான் உள்ளது.
நாம் நம் கதைக்கு வருவோம்….
வெளியில் இருந்தபடியே அம்மாவை வெளியே வருவதற்காக அப்பா வெறுமனே லொக், லொக் என்று இருமியபடி அம்மாவுக்கு சிக்னல் தந்து கொண்டே இருக்கிறார்….
அம்மா மகனிடம் என்னப்பா? எப்ப கேட்டாலும் இந்த ரெடிமேடு பதிலையே ஒரு வருஷமா கூறுகிறாய் என்று முகத்தை சிரித்தபடியே வைத்து கொண்டு சற்று கோபமாக வெளியே உள்ள அவன் அப்பாவிற்கு கேட்பது போல் வெளியே எட்டிப் பார்த்தபடி கேட்டாள்.
அம்மா, என் செல்ல அம்மா இன்றைக்கு நான் சொல்லறதை நீ கேட்பியாம், அடுத்த வாரம் நீ சொல்லறதை நான் கேட்பேனாம்.
மீனாட்சி இங்கே வா, என்று அதட்டலுடன் என்று கூப்பிடுகிறார் மீனாட்சி சுந்தரம், மீனாட்சி வந்தவுடன் மெல்லிய குரலில் அவனை நம்பாதே போன தடவையும் இதே டயலாக் தான் சொன்னான் என்றார் அப்பா.
என்னம்மா குடும்ப தலைவர் என்ன சொல்கிறார்? என்றான் கண்ணன் (எ) அன்பு.
திருச்சியில் உள்ள பெண் வீட்டில் அதே போன்று பெண்ணிடம் கெஞ்சல். பெண் பெயர் கீது. இவள் அப்பா கண்ணப்பன். ஓய்வு பெற்ற வங்கி பொது மேலாளர். அப்பாவை எப்போதும் என் கண் அப்பா என்று பெயர் சொல்லி தான் செல்லமாக அழைப்பாள். அம்மா அபிராமி. கீது அப்பாவின் செல்ல பெண். அப்பா சொல்லை தட்ட மாட்டாள். அவள் அம்மாவை வார்டன் என்று தான் அழைப்பாள். மற்றும் அப்பாவிடம் அடிக்கடி என் கண் அப்பா இந்த வார்டனை கொஞ்சம் அடக்கி வைப்பா ரொம்ப கண்டிக்கிறாள் என்று கூறுவாள். காரணம் அவள் கேட்ட B.E. EEE Course, Chennai – ல் உள்ள கல்லூரியில் தான் கிடைத்தது. Hostel லில் தங்கி B.E. படித்து முடித்தாள். மிகவும் கண்டிப்பு நிறைந்த கல்லூரியுடன் இணைந்த ஆஸ்டல் அது. ஆஸ்டல் வார்டனின் அந்த கண்டிப்பு அம்மாவிடமும் இருப்பதால், எப்போதும் அவள் அம்மாவை அலோ வார்டன் என்று தான் அழைப்பாள்.
தற்போது அவள் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் நிர்வாக பொறியாளராக பணி புரிகிறாள்.
அவளை பெண் பார்க்க வருவதாக நேற்றைய தினமே அம்மா அவளிடம் கூறியிருந்தார். அப்போது அவள் எதுவும் கூறவில்லை. ஆனால் இன்று வழக்கம் போல அலுவலகம் செல்ல தன்னை தயார் செய்து கொண்டிருந்தாள். கீது என்ன ஆபீஸ் கிளம்புகிறாய்,? நேற்று நான் சொன்னது நினைவில்லையா ? என அம்மா கேட்க அவளோ என்ன வார்டன் சொன்னீங்க கவனம் இல்லையே என கிண்டலாக என அம்மாவை கேட்க அவளது அப்பா என்ன கீது உன்னை பெண் பார்க்க வருவதாக அம்மா கூறினாலே என்று சொல்ல, அவளோ அப்பா…நான் இன்று leave apply செய்ய முடியாதுப்பா, இன்று எனக்கு ஒரு முக்கியமான இன்ஸ்பெக்க்ஷன் உள்ளது
என்றாள். ஏன் இதை நேற்று நான் கூறிய போதே சொல்லியிருக்கலாமே நான் மாப்பிள்ளை வீட்டாரிடம் இன்று வர வேண்டாம் என்று கூறியிருப்பேனே., இன்று கூறினால் அவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் !? என்று அம்மா சத்தம் போட
என கண் அப்பா நான் போன வாரமே உங்களிடம் சொன்னது மறந்து போச்சா? இந்த வாரம் புதன் கிழமை ஒரு முக்கியமான இன்ஸ்பெக்க்ஷன் இருக்குதுன்னு சொன்னேனப்பா.. என்று கூற, அப்பா அப்படியா? !! என மகளை கழுத்தை திருப்பி சந்தேகமாக பார்க்க, மகள் உடனே அப்பா பக்கம் திரும்பி கண்ணடிக்க, உடனே அப்பா ஆமா, ஆமா சொன்னே…… சொன்னே…என்று மகளுக்கு ஆதரவாக ஜால்ரா போட அம்மாவிற்கு வந்ததே ஒரு கோபம்.
என்ன அப்பாவும் பொண்ணும் விளையாடுறீங்களா?
நீங்கள் இரண்டு பேரும் என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது, கீது சாயங்காலம் 4.00 மணிக்கு வீட்டில் இருக்கணும். அவ்வளவுதான் என்று high voice ல் கத்தி விட்டு கிச்சனுக்குள் சென்று விட்டாள். அப்பாவும் பொண்ணும் ஒருவரை ஒருவர் பார்க்க, சரிடா செல்லம். இந்த ஒரு முறை அம்மா பேச்சை கேளுடா அவ high BP patient டா, லீவு போட வேண்டாம் ஆனால் 1 hour permission போட்டு விட்டு சரியா 4.00 மணிக்கு வீட்டுக்கு வந்துற்டா என் தங்கம், என அப்பா மகளிடம் கெஞ்ச,
சரிப்பா, உங்களுக்காக 5.00 மணிக்கு வந்துடறேன் என்றாள் கீது.
இங்கே அன்பு வீட்டில்;
கண்ணா ஆபீஸ்ல மீட்டிங் எப்போப்பா முடியும் என அம்மா கேட்க,
அப்பா கிண்டலாக, ராத்திரி 11 மணிக்கெல்லாம் முடிஞ்சுடும் என கூற,
அன்பு அப்பாவை பார்த்து முறைக்க.
நீ சொல்லுடா கண்ணா அவர் கிடக்கறாரு.
நேரம் எல்லாம் கரைக்டா சொல்ல முடியாதும்மா என கூறினான் அன்பு
நான் வேண்டுமானால் உன் மேனேஜரிடம் பேசி லீவு கேட்கவா என்று அம்மா வெகுளியாய் கேட்க.
அம்மா…, ஆபீஸ் மேனேஜரே நான் தாம்மா என்று அவன் கூற,
அப்பா உள்ளுக்குள் சிரிக்கிறார். மகன் என்ற ஒன்று மட்டுமே தெரிந்தவள். பாவம் அப்பாவி. அவன் படிப்பு , வேலை, சம்பளம் எதுவும் தெரியாதவள்.
அம்மா உடனடியாக தான் ஒரு idea கூறுவதாக கூறி, கண்ணா ஒன்னு செய் one day Medical leave வேண்டும் என கூறி ஒரு e-mail உன் M.D. க்குஅனுப்பி விடு யாராயிருந்தாலும் உடல்நலம் சரியில்லை என்றால் லீவு கொடுத்து விடுவார்கள் என்றாள்.
அட பாருடா என மனைவி மீனாட்சியின் சாதுர்யமான புத்திசாலித்தனத்தை வியந்து பார்த்தார் மீனாட்சி சுந்தரம்.
அம்மாவின் இந்த புத்திசாலித்தனமான, அன்பான வேண்டுகோளை அன்புவால் மறுக்க முடியவில்லை.
சரிம்மா உனக்காக நான் இதை செய்கிறேன் என கூறி 1-day medical leave letter ஐ e -mail மூலம் அனுப்பினான். அம்மாவிற்கு ஆனந்தம். கண்ணா வாப்பா நாம டிபன் சாப்பிட்டு கொண்டே பேசலாம் என்று கூறி அன்புவை கை பிடித்து அழைத்து சென்றாள்.
மீனாட்சி சுந்தரம் மனதிற்குள் இது எத்தனை நாளைக்கு? மருமகள் என்பவள் வரும் வரை தானே ?!!
இங்கே பெண் வீட்டில்,
4.00 மணியிலிருந்து வாசலுக்கும் வீட்டிற்கும் நடையாய் நடந்து கொண்டிருந்தாள் மீனாட்சி. மாலை சரியாக 5.00 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்தாள் கீது. ஒரு முறைப்புடன் மகளை பார்த்தாள் பின் வீட்டில் உள்ள கடியாரத்தை பார்த்தாள் மீனாட்சி அதற்கு அர்த்தம் இப்போது மணி என்ன? என்பது தான்.
கண்ணப்பன் மனைவியின் பின் பக்கமாக வந்து மகளை பார்த்து கையை அசைத்து, அசைத்து உள்ளே போய் விடு என்றார். கீது சிரித்துக்கொண்டே தன் அறைக்குள் சென்றாள்.
சரியாக மாலை 6.00 மணிக்கு மீனாட்சி சுந்தரம் தரகருடன் தன் குடும்ப சகிதமாக கீது வீட்டிற்கு காரில் வந்து இறங்கினார்.
கண்ணப்பனும் அபிராமியும் வாசலுக்கு வந்து அவர்களை வரவேற்றனர்.
தரகர் மீனாட்சி சுந்தரத்தின் குடும்பத்தினரை கீதுவின் தாய் தந்தைக்கு அறிமுகப்படுத்தினார்.
உட்கார்ந்த படியே கீதுவின் வீட்டை ஒரு நோட்டம் விட்டாள் மீனாட்சி. உடனே அபிராமி அதை புரிந்து கொண்டு சொந்த வீடு, ஒரு கிரவுண்டில் கட்டியுள்ளோம் என்றாள். வீடு நேர்த்தியாகவும் மிகவும் அழகான தாகவும் இருப்பதாக மீனாட்சி கூற அபிராமி மிகவும் சந்தோஷம் அடைந்தாள். வீட்டில் உள்ள Designs, Wall pictures, paintings, screens pooja room என அனைத்தும் அவள் கேட்டுகொண்டதால் அவளின் விருப்பத்திற்கு விட்டு விட்டோம், என அபிராமி மகளை பற்றி மறைமுகமாக புகழ்ந்தாள். பாருப்பா , என் வார்டனா இவர் !!!! , இந்த வேலை எதுவுமே செய்யாத என்னை பற்றி புகழ்ந்து பேசுவது என நமட்டு சிரிப்புடன் உள்ளிருந்தபடியே கேட்டு ரசித்து கொண்டிருந்தாள் கீது.
உங்க பெண்ணை கூப்பிடுங்களேன் பார்க்கலாம் என்றாள் மீனாட்சி
கண்ணு கீது இங்க வாம்மா என்று அழைத்தாள் அபிராமி.
எங்க வீட்டில் செல்ல பெயரில் கண்ணா என்கிற அன்பு இங்கே கண்ணு என்கிற செல்ல பெயரில் கீது சரியான பொருத்தம் தான் என்று மெல்லிய குரலில் மனைவியிடம் கிசு கிசுக்கிறார் மீனாட்சி சுந்தரம் தன் புருவத்தை உயர்த்தி தலையை ஆட்டியபடியே இவர் என்ன கூறுகிறார் என்று அபிராமி மீனாட்சியிடம் கேட்க,
அது ஒன்றும் இல்லை.. என மழுப்புகிறாள் மீனாட்சி, கணவனை சற்று முறைத்து சிரித்தபடி,
கீது ஒரு அழகான டிரேயில் சிறிய அளவிலான கண்ணாடி கிளாஸில் அதன் முக்கால் பாகத்திற்கு திராட்சை ஜுஸ் கொண்டு வருகிறாள்.
மீனாட்சி சுந்தரம் பெண்ணையும் அவள் கொண்டு வரும் கண்ணாடி கிளாஸையும் அதில் உள்ள ஜுஸின் அளவையும் மாறி மாறி பார்க்கிறார்.
கீது எல்லோருக்கும் ஜுஸ் குடும்மா என்று கண்ணப்பன் கூற கீது அன்புவின் அப்பாவை தாண்டி சென்று முதலில் அன்புவின் அம்மாவிற்கும் பின்னர் அன்புக்கும், தரகருக்கும் தருகிறார். அன்புவின் அப்பா எனக்கு இல்லையா என்று கீதுவை பார்த்து கேட்க uncle நீங்கள் diabetes patient அதனால் தான் தரவில்லை என்று கீது கூற,
நான் diabetes patient என்று உனக்கு எப்படி தெரியும் என மீனாட்சி சுந்தரம் கேட்க, போன வருடம் என் தந்தையுடன் diabetes testing labக்கு வந்திருந்தேன். அங்கே உங்களை பார்த்துள்ளேன் . Receptionist உங்கள் பெயரை கூறியதும் நீங்கள் வெகு வேகமாக சென்று ரிப்போர்ட்டை வாங்கி அவசர அவசரமாக பிரித்து படித்து பார்த்ததை நான் பார்த்துள்ளேன் என்று கீது கூற அங்கிருந்த அனைவரும் சிரித்தவாறே மீனாட்சி சுந்தரத்தை பரிதாபமாக பார்த்தனர்.
தன்னையும் மறந்து சிரித்தபடியே கீதுவின் நினைவு திறனை பாராட்டினார் மீனாட்சி சுந்தரம்.
அன்புக்கும் அவன் அம்மாவுக்கும் கீதுவை மிகவும் பிடித்துவிட்டது. அன்புவின் அப்பாவும் பெண்ணை பாராட்டிவிட்டார். தரகருக்கும் ஒரு சந்தோஷம். தரகர் இரு வீட்டார்களிடமும் அவரவர் குடும்பங்களைப் பற்றி ஏற்கனவே கூறியிருந்தார். எனவே அவர்களின் மகிழ்ச்சியை பார்த்த தரகர் என்ன சார் இதை விட ஒரு நல்ல பெண் கிடைப்பாளா வேறு என்ன வேண்டும் என்று தரகர் கூற, எங்களுக்கு பூரண சம்மதம் என்று மீனாட்சி சுந்தரம் மகனையும் , மீனாட்சியும் பார்க்க அவர்களும் ஆமாம் என்றனர்
கீதுவின் அப்பா கீதுவின் சம்மதத்தை கேட்க , அப்பா நான் இவரிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறினாள். கீதுவின் அம்மா அவளை முறைக்க, கீது அப்பாவை பார்த்தாள், அதற்குள் மீனாட்சி சுந்தரம் அதனால் என்ன?! பையன் தான் பெண்ணிடம் பேச ஆசைபடுவான், ஆனால் இங்கு பெண் தைரியமாக கேட்கிறாள்! யார் கேட்டால் என்ன? இதில் ஒன்றும் தவறில்லையே !! தாராளமாக பேசட்டுமே என்று கூறினார். கண்ணப்பனும் தன் கண்ணாலேயே தலையை ஆட்டி பெண்ணுக்கு அனுமதி கொடுத்தார்.
கீது முன்னே மாடிப்படி ஏறி செல்ல அன்பு அவள் பின்னால் சென்றான். இருவரும் இருவருடைய குணங்கள் , குடும்பம், உடன் பிறந்தவர்கள் , நண்பர்கள் , உறவுகள் பிறந்த ஊர் , வேலை செய்யும் இடம் , வேலையின் தன்மை , சம்பளம், வங்கி கணக்கில் உள்ள பணம் , அம்மா, அப்பாவின் குண நலன்கள் என விரிவாக சந்தோஷமாக சுமார் இரண்டு மணி நேரமாக பேசி கொண்டே இருந்தார்கள். அன்புவின் அம்மாவும் அப்பாவும் அவர்களுடைய உறவினர்களை பற்றி இவர்களிடம் பேசி கொண்டிருந்தனர். ஆனால் கீதுவின் தாய் அபிராமிக்கோ இருப்பு கொள்ளவில்லை. எழுந்து சென்று படிக்கட்டின் முதல் படியில் நின்று மேலே பார்த்து குரல் கொடுத்தார். கீது கீழே வாம்மா என கண்ணில் கோபத்துடன், ஆனால் அன்புடன் அழைப்பது போல் அழைத்தார்.
இருவரும் சிரித்தபடியே சேர்ந்தே இறங்கி வந்தனர்.
என்னம்மா உங்கள் இருவரின் சிரிப்பையும் சேர்ந்து வருவதை பார்த்தால் உனக்கு சம்மதம் போல, என்றார் கண்ணப்பன்.
ஆமாம் என்று தலையாட்டினாள் கீது.
அனைவருக்கும் சந்தோஷம். அபிராமியின் கோபம் அந்த நிமிடமே பறந்து விட்டது. அப்ப சரி மற்ற விஷயங்கள் பேசலாமா என்று தரகர் அன்புவின் அம்மா, அப்பாவை பார்த்து கேட்க என்ன பேச வேண்டும்? என்று மனைவியையும் மகனையும் மீனாட்சி சுந்தரம் பார்க்க இருவரும் ஒரே நேரத்தில் எதுவும் பேச வேண்டாம் என்று தலையாட்டினர்.
கண்ணப்பனுக்கும் அபிரமிக்கும் ஒன்றும் புரியவில்லை. தரகரும் யோசனை செய்ய ஆரம்பித்தார். கீது மட்டும் பேசாமல் இருந்தாள்.
மீனாட்சி சுந்தரம் பேச ஆரம்பித்தார். அதாவது சம்மந்தி, சம்மந்தி என்றவுடன் கண்ணப்பன் ஆச்சரியத்துடன் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது போல சொல்லுங்க சம்மந்தி என்றார்.
நாங்கள் மூவரும் சேர்ந்து பேசி முடிவெடுத்து ஒரு கொள்கையோடு வந்துள்ளோம். அதாவது பெண்ணை நமக்கு பிடித்து, பிறகு பெண்ணுக்கும், பெண் வீட்டாருக்கும் நம்மை பிடித்து விட்டால், எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பெண் வீட்டாரின் விருப்ப படி திருமணம் செய்து கொடுக்கட்டும். வரதட்சணை என்ற பெயரில் ஒரு ரூபாய் கூட வாங்க கூடாது என்ற கொள்கையோடு.
எங்களுக்கு இருப்பது ஒரே ஒரு மகன், நாங்கள் இப்போது இருப்பது சொந்த வீடு 2 கிரவுண்டில் நல்ல ஏரியாவில் உள்ளது. தவிர இன்றைய மதிப்பில் மற்ற சொத்துக்கள் சுமார் பத்து கோடிக்கு மேல் இருக்கும் .என் மனைவியிடம் நகைகளும் 300 சவரனுக்கு குறையாமல் உள்ளது. வங்கி டிபாசிட் வகையில் 2 கோடி உள்ளது. 2 விலை உயர்ந்த கார் உள்ளது. வேறு என்ன வேண்டும் எங்களுக்கு. ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வாருங்கள். வந்து பாருங்கள். இவை எல்லாம் என் மகனுக்கு தானே. எங்களுக்கு தங்களிடம் எதையும் கேட்க வேண்டிய அவசியமேயில்லை.
தவிர என் மகனுக்கு எந்த விதமான தவறான நண்பர்களோ , பழக்க வழக்கங்கங்களோ எதுவும் கிடையாது . அவன் அம்மாவின் செல்ல பிள்ளை.
உங்கள் தகுதிக்கும் , உங்கள் சொந்தங்களின் மதிப்புக்கும் எப்படி செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ திருமணத்தை அப்படியே செய்யுங்கள். எங்களுக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை என்று முச்சு விடாமல் பேசி முடித்தார் மீனாட்சி சுந்தரம் .
அன்பும் அவனது அம்மாவும் அவர் கூறுவது சரி என்றனர்.
தாங்கள் தங்களைப் பற்றி இவ்வளவு விரிவாக கூறியதால் நானும் எங்களைப்பற்றி கூறுகிறேன் என்றார் கண்ணப்பன்.
தரகருக்கு எங்களைப்பற்றி நன்கு தெரியும் . ஏனெனில் அவர் ஒரு வகையில் என் மனைவியின் உறவினர். ஒரு சில பிள்ளை வீட்டார் பெண் வீட்டில் வசதி அதிகம் என தெரிந்தால் அதிக அளவில் வரதட்சணை எதிர்பார்ப்பார்கள் என்ற கோணத்தில் தங்களிடம் எங்களைப்பற்றி அதிகம் கூறியிருக்க மாட்டார் , அதனால் நானே கூறுவது தான் சரி என்றார் கண்ணப்பன்.
அய்யா, நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்! என் மகளும் படிப்பில், குணத்தில் நம்பர்1. நான் அவளைப்பற்றி அதிகமாக கூறுவதாக எண்ண வேண்டாம்.
என்ன அவள் என்னுடைய செல்ல பெண். எனக்கு தெரியாமல் என்னிடம் அனுமதி வாங்கி தான் தன் dress யே முதற் கொண்டு செலக்ட் செய்வாள் . வீணாக எதையும் வாங்க மாட்டாள், செலவழிக்கவும் மாட்டாள். அவள் அம்மாவிடம் எதையும் கேட்க மாட்டாள் . அதனால் அவள் அம்மாவுக்கு கீது மேல் கொஞ்சம் வருத்தம்.
அவளது மாத சம்பளம் பிடித்தம் போக 1.25 இலட்சம் அவளது வங்கியின் கணக்கிற்கு வந்து விடும். அதை சேர்த்து வைத்து வருடத்திற்கு ஒரு முறை அவள் பெயரில் டிபாசிட் செய்து விடுவேன். இந்த 9 வருடத்தில் வட்டி தொகைக்கு வருமான வரி போக சுமார் 1.50 கோடி உள்ளது. அவளுக்காக நான் வாங்கி வைத்திருக்கும் நகை மட்டும் சுமார் 120 சவரன் உள்ளது. அவள் அம்மாவின் நகையும் 150 சவரன் தேறும். தவிர எனக்கு சொந்தமாக இந்த வீடும் என் சொந்த ஊர் வேலூரில் 2.00 கோடி மதிப்புள்ள வீடும் உள்ளது. அதிலிருந்து மாத வாடகையாக 30,000/- வருகிறது. நான் வங்கி பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவன் . பென்ஷன் மாதம் 60,000/- ம் வருகிறது. மற்றும் என்னுடைய PF, gratuity தொகை ரூ. 50 இலட்சம் பிக்சட் டிபாசிட் செய்து உள்ளேன் அதிலிருந்து மாதந்தோறும் வட்டியாக ரூ.30,000/- என் அக்கவுண்ட்டில் சேர்கிறது. ஆக எனக்கு மாதந்தோறும் ரூ.1.20 இலட்சம் வருமானம் உள்ளது.
எனக்கு மாத செலவுக்கு ரூ.30,000/- போக. மீதம் என் கீதுவுக்கு என தனியாக recurring deposit செய்து வருகிறேன். அதில் சுமார் ரூ. 80 இலட்சம் வரை வைத்திருக்கிறேன்.
இவ்வளவு தான் என் கணக்கு. இவை எல்லாம் என் மகளுக்கு தான்.
எனவே திருமண செலவிற்கு கஞ்சத்தனம் இல்லாமல் தாராளமாக செலவு செய்வேன்.
தாங்கள் எந்த மண்டபத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை.
Honey Moonக்கு என் செலவிலேயே எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் அனுப்பி வைக்கிறேன் என்று பேசி கொண்டே சென்றார் கண்ணப்பன்.
அய்யா போதுமய்யா உங்களின் புள்ளி விவரங்கள், நான் தான் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேனே உங்களால் என்ன முடியுமோ, உங்கள் விருப்பம் எதுவோ அதுவே எங்கள் விருப்பம் என்று எதற்கு இந்த தகவல் எல்லாம். நான் எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்பதற்காக எங்களைப் பற்றி கூறினேன் . தாங்கள் தவறாக எடுத்துக் கொண்டீர்கள் போல் உள்ளது. நம் குழந்தைகள் நலமும் அவர்களது விருப்பத்தை நிறைவேற்று தான் முக்கியம் , நம் கடமையும் கூட என்று முற்றுப்புள்ளி வைத்தார் மீனாட்சி சுந்தரம்.
சரி நிச்சயதார்த்தம் எப்போது வைத்து கொள்ளலாம் , திருமணத்தை எப்போது வைத்து கொள்ளலாம் என்று நல்ல நாள் நீங்களே பாருங்கள். விரைவில் வைத்து கொள்வது நல்லது. இந்த மாதம் ஏப்ரல். அடுத்த மாதம் மே, ஒரு மாதத்தில் மண்டபம் கிடைக்காது. எனவே ஜுன், ஜூலை, மாதத்தில் நிச்சயதார்த்தமும் , ஆகஸ்ட், செப்டம்பரில் திருமணத்திற்கும் நல்ல நாள் பாருங்கள்.
இந்த வருடம் டிசம்பரில் என் மகனுக்கு கனடாவில் வேலையில் சேர வேண்டும் என்று விசா கிடைத்துள்ளது. தங்கள் மகளுக்கும் விசா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார் மீனாட்சி சுந்தரம்.
அப்போ நீங்கள் இருவரும் என கண்ணப்பன் கேட்க மகனை விட்டு இவள் இருக்க மாட்டாள், எனவே நாங்களும் அவனுடன் கனடாவிற்கு சென்று விடுவோம் என்று கூறினார்.
கண்ணப்பன் சற்று அதிர்ச்சி அடைந்தார். சட்டென அவரின் கண்களில் நீர் வழிந்தது. இதை கவனித்த கீது என்னப்பா இப்படி என்று ஓடி வந்து அவர் அருகில் நின்றாள். அவள் கண்ணிலும் நீர் முட்டிக்கொண்டு வந்தது. அபிராமிக்கு ஒன்றும் புரியவில்லை.
அய்யா இதைப்பற்றி தாங்கள் முதலில் கூறியிருக்கலாமே,
எல்லாம் பேசி முடித்து நிச்சயதார்த்ததிற்கும், திருமணத்திற்கும் நல்ல நாள் பார்க்கும் நிலையில் இப்படி சொன்னால் எப்படி? என்றார் கண்ணப்பன்.
இதில் என்ன தவறு என்றார் மீனாட்சி சுந்தரம்.
நீங்கள் எப்படி உங்கள் மனைவி அவர் மகனை விட்டு இருக்க மாட்டார்களோ அது போலத்தான், என் மகளும் என்னை விட்டு பிரிந்து இருக்க மாட்டாள், என்னாலும் இருக்க முடியாது . இதே ஊரில் இருந்தாலோ அல்லது வேறு ஊரில் இருந்தாலோ வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை நாங்கள் வந்து பார்த்து செல்வோம் . அதுவே எனக்கும் என் மகளுக்கு கஷ்டம் தான். என்ன செய்வது பெண் என்பவள் அடுத்தவர் வீட்டிற்கு மருமகளாக சென்று தான் ஆக வேண்டும். அதில் எனக்கு எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை.
ஆனால் என் மகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பது என்பதில் எனக்கு விருப்பமில்லை. மன்னிக்கவும் என்றார் கண்ணப்பன். இவர் கூறுவதை கேட்ட அபிராமிக்கும் கண் கலங்கியது.
நல்ல வேளை இப்போதாவது கூறினீர்களே மிக்க நன்றி 🙏 என்று நா தழுக்க கண்ணில் நீர் ததும்ப கூறினார் கண்ணப்பன்.
மீனாட்சிக்கும் அவரது கணவருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை.
அன்பு அம்மாவை பார்த்தான்.
கீது அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்.
தனக்கு மகனின் மீதுள்ள பாசத்தை போல் தானே அவர் மகளுக்கும், அவர்க்கும் இருக்கும் என பெரிய மனதுடன் கூறினாள் மீனாட்சி.
தன் மகனின் நீண்ட நாள் விருப்பம் கனடாவில் பணிபுரிய வேண்டும் என்று அதை நான் நிறைவேற்றாவிட்டால் அவன் மனம் வருந்துவான். நான் என்ன செய்வது
நாங்கள் என் மகனின் விருப்பத்தை நிறைவேற்றி அவனுடன் வெளிநாடு செல்வவோமா? அல்லது தங்களுக்காகவும், தங்கள் மகள் தங்களின் மேல் உள்ள பாசத்திற்காகவும் அவனை இந்தியாவிலேயே பணி புரிய சொல்வேனா?
மிகவும் தர்ம சங்கடமாக உள்ளது கண்ணப்பன் என்றார் மீனாட்சி சுந்தரம்.
தங்களின் மகள் பாசம்… என்றோ ஒரு நாள் என்னை கவனித்து அதை நினைவில் வைத்திருந்து, இன்று என்னை பார்த்தவுடன் என் உடல்நிலையை மனதில் வைத்து அவள் எனக்கு ஜுஸ் தராமல் கவனித்த விதம்… தன்னையும் அறியாமல் கண் கலங்குகிறார் மீனாட்சி சுந்தரம் .
இவளை போன்ற ஒரு மருமகளை அடைய நான் கொடுத்து வைக்கவில்லை என கூறியபடியே மீனாட்சி சுந்தரம் சோபாவிலிருந்து எழ முயற்சிக்கிறார்., ஆனால் முடியவில்லை .
மகனும் அவரது மனைவியும் கைத்தாங்கலாக அவரை எழுப்ப மிகுந்த மன வருத்தத்துடன் மூவரும் கிளம்புகின்றனர்.
இரண்டு நல்ல குடும்பங்களும் வீடு, வசதி பணம், சொத்து என்று எதிர்பாராமல் தங்கள் பிள்ளைகளின் சந்தோஷம் தான் முக்கியம் என்று முடிவெடுத்ததை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
மறுநாள் நேற்று நடந்த நிகழ்வுகளை எல்லாவற்றையும் மறந்து விட்டு எந்த விதமான பதட்டமும் இல்லாமல் வழக்கம் போல அம்மாவை வார்டன் என்று கூறாமல் “நேற்று அம்மா தன்னை புகழ்ந்ததை நினைத்து பார்த்து” “அம்மா” , என் “கண் அப்பா” நான் ஆபீஸ்க்கு கிளம்புகிறேன் என்று கூறியபடியே சிரித்துக்கொண்டே வீட்டிலிருந்து வெளியே செல்கிறாள் கீது. தன்னை நீண்ட நாட்களுக்கு பின் அம்மா என்று கீது அழைத்ததை எண்ணி சந்தோஷம் அடைகிறாள் அபிராமி.
![]() |
என் பெயர்: D. சீனிவாசன் வயது: 65 (02.1960) பணி: ஓய்வு பெற்ற்வர் Mobille No: 9382899982 தற்போதைய முகவரி: சென்னை email ID : mvdsrinivasan@gmail.comமேலும் படிக்க... |