தீவுக்கு ஒரு பயணம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 12, 2025
பார்வையிட்டோர்: 2,468 
 
 

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

கிங் துறைமுகக் கடற்கரை

இவாஞ்ஜிலின் கடற்கரையிலிருந்து வெளியேறி வளைந்து,நெளிந்து, ஏறி விழுந்து,…., மழைத் தூரல் விட்டிருந்தது , இலங்கையிலுள்ள வயல்வெளிகளைப் போலவே இருக்கிறது, புல் நிலங்களும் இருந்தன, விவசாய நிலங்களுக்கூடாக,.. இரண்டு வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய குறுகிய கிராமத்து சிறிய வீதியில் நெடுகவே வாகனம் ஓடியது, ” இந்தப் பகுதிகள் அராலியையே ஞாபகப்படுத்துகிறது ” என்று பூமலர் குறிப்பிட்டாள், ஒரு மதகு குறுக்கிட்டது, மதகில் ஒரு வாகனம் மட்டுமே போகலாம், குட்டி வீதீப்பாலம்,எதிரில் ஒரு வாகனம் வர ஓரம்கட்டினான், அது கடந்த பிறகு இவர்களுடையது ஓடியது, ஒரு வாகனம் மட்டுமே சுருங்கி ஓடுற மேலும் சில மதகுப்பாலங்களும் எதிர்ப்பட்டன,

தனியே அவன் வாகனம் ஓடி வந்தால் அந்த வீதிவலைக்குள்ளே சுற்றிக் கொண்டிருப்பான், வீடு வந்து சேரவே மாட்டான், பூமலருக்கு கிங் கவுண்டியிலுள்ள வீதிகள் அனைத்துமே தலைகீழ் பாடம், அத்துப்படி, ” இதிலே போறது எனக்கு அராலி வீதியிலே போறது மாதிரியே இருக்கிறது, இந்த வழியாலே ஓட விருப்பம் ” என்றாள்,, ” இந்த வீதியாலே போனாலும் வீட்டிற்றுப் போகலாம், அதாலே போனாலும் போகலாம், ( தீவுப் பிரதேசம் ) இப்படி பூமலர் மூளையக் குழப்பிக் கொண்டு வந்தாள்,” இப்ப நாம் கிங் துறைக்குப் போகப் போறோம், இந்த வீதியாலே விடு ” என்றாள்,தில்லை அப்படியே செலுத்தினான், வந்தடைந்து விட்டார்கள், தில்லை அராலித்துறையில் பார்த்தது மாதிரியே , இங்கே நீளப்பாக்கமும் குறுக்கவுமாக ஒரே இணைப்பிலான பெரிய தார் பூசிய அடைத்த உருளை தகரக் குழாய் மிதவை, மேலே அதே பலகைத்தளம்…பாவனையில் கழித்து விட்டது போல வீதி ஓரத்தில் இருப்பதைக் கண்டான், இங்கே எல்லா இடங்களிலுமே கிராமப்புற சாயல் காணப்படுகிறது, ஆனால், எந்த ஒரு வேலையையும் முறையாய் செய்த முடிப்புடனும் அழகாயும் இருக்கிறது,

எல்லாம் சிறிய, சிறிய துறைகள் (முகம்), ” இங்கே ஒரு காலத்தில் படகு கட்டி,..கலக்கிக் கொண்டிருந்தார்கள், கலிப்பஸை விட , பாய்மரக்கப்பல்கள் நிறைய கட்டி இருக்கிறார்கள், ஆங்கிலேயர்கள் எப்பவும் கடல் வலிமையைக் கூட்டிக் கொண்டிருந்தவர்கள், அதற்குதந்த மரங்கள் இயற்கயாக இங்கேயுள்ள வனப்பகுதியில் இருந்ததாலே,பிரெஞ்ச்காரரகளிடமிருந்து அபாயமிக்க பாறைக் கரையைக் கொண்ட தீவை அடிச்சுப் பிடிச்சு பறித்தெடுத்திருக்கிறார்கள்,

இந்த கரை எல்லாம் உயர், தாழ் அலைகள் பிரச்சனை உடையவை, அதாவது ஒரு நேரம் நீர் நிறைந்து இருக்கும்,. இன்னொரு நேரம் நிலம் தெரியும், சுனாமியின் போது கடல் உள்வாங்க கன்னியாகுமரிக் கடலில் நிலம் தெரிந்ததை இங்கே சாதாரணமாக பல மணி நேரத்தில் நேரிலே பார்க்கலாம், பூமியை சுற்றுற போது சந்திரன் இப்பகுதிக்கு அதிக கிட்ட வருகிறது, பெரிய ஏணி ஒன்றை சாற்றி வைத்து சந்திரனுகே ஏறி போய் விடலாம் போல கிட்ட வருகிறதோ, சந்திரனின் ஈர்ப்பு விசை பூமியைத் தாக்குறதால் அலைகள் அதிகமாக கொந்தளிக்கிறதால்,..காற்றழுத்தம் வேறுபடுகிறது, அலை உள்வாங்கி பழையபடி வருகின்றது, அது நிகழ ஞாயமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது, தாழ் அலையின் போது வளைகுடாவின் கரையோரங்களில் ஒரு பீச்சளவு பரந்த பகுதியில் ஈரமண் நிலப்பரப்பை பார்க்க முடிகிறது, இங்கே இருக்கிற பீச்சுகள் இவைதான், ஒருநாள் பீச், இரண்டு நாள் பீச்,..பிறகு நீர் வந்து மூடி விடுகிறது, அபாயமற்ற முறையில் படிப்படியாய் நீர் குறைந்து, ஏறுறதெல்லாம் நேர அளவில் அளந்த விபரங்கள் பீச்சில் குறித்து , குறித்து வைத்திருக்கிறார்கள், தில்லையின் அண்ணருக்கு குருவிகளை, பறவைகளைப் பார்க்கிறது மாதிரி சுற்றுலாப் பயணிகளிற்கு ‘ அலை ‘பையித்தியம், இததைப் பார்க்கவே ஃபண்டி பே க்கு வருகிறார்கள், உலகிலேயே,..இங்கே மட்டும் தான் இந்த அதிசயம் நிகழ்கிறதோ ? அப்படி போலவே படுகிறது,

இந்த துறையிலே அகண்ட 50 அடி அகலத்தில் சாய்ந்து கீழே நீருக்கு தளப் பாதை இறங்கிறது, வேற என்ன செய்த கப்பலை கடலுக்கு இறக்கிய பாதை. வன்னி விவசாயிகளின் ஏர் இறைப்பு மேடைப் போல கல்லுப் போட்டு மொங்காண் இட்டு தார் பூசி அதெல்லாம் அழகாக செய்வார்கள்,,சிறிய நாக உலோகப் குழாய்களைக் கொன்ட தடுப்பு வேலி. ஓரப்பகுதியில் பெரிய கற்கள்,அதில் குமிழ்களை உடைய பாறையிலே ஒட்டி மூடிக் படர்ந்து கிடக்கிற அல்காபாசி, கற்களிடையே தாமரை இலையைப் போன்ற இலையைக் கொண்ட ஒரு தாவரத்தையும் பார்த்தான், பறவைகள் விதைகளைப் போட்டிருக்கலாம்,

ஜெயந்தியும் பூமலரும் அப்பிள் போனில் அங்கே,இங்கே நின்று படமாக எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்,” தோற்றமும் முக்கியம் “என்று உடையைப் பற்றி கவலைப்படாத தில்லைக்கு கூடை,கூடையாய் புத்திமதிகளை அப்பப்ப்பச் சொல்லிக் கொண்டுமிருந்தார்கள், தில்லையும் படம் எடுத்தான், அல்கா, மிதவை,..இப்படி வகையறாக்கள், பிறந்ததிலிருந்து அவனுக்கு தலை மயிர் சரியாக நின்றதில்லை, பரட்டைத்தை தலை, இப்ப மொட்டை வேறு விழத் தொடங்கி விட்டது, இவர்கள் சொல்லியா கேட்கப் போகிறது,” ஆடை பாதி, ஆள் பாதி”. இவனை ஒரு சினிமா நடிகனாக்கி விடுறது என்ற முடிவில் தான் அவர்கள் இருந்தார்கள், போதுமடா சாமி!

– தொடரும்…

– அக்டோபர் 2022 – ஜனவரி 2023, பதிவுகள்.காம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *