இயற்கையும் மனிதனும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2025
பார்வையிட்டோர்: 2,164 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டின் பின்னாலுள்ள புல்வெளியில் உலாவுவ தென்றாலும் குதிப்பதென்றாலும் அவனுக்கு மிகுந்த ஆசை. “அப்பா, புல்லிலே இப்படிக் குதிக் கக்கூடாது!” என்று அவன் தாய் எப்போதும் சொல் லிக்கொண்டே இருப்பாள். 

“ஏன்?” என்று அவன் அதிகப்பிரசங்கித்தன மாகக் கேட்பான். 

“புல்லிலே பாம்புகள் மறைந்து பதுங்கி இருக் கும்” என்று அவள் பதில் சொல்வாள். 

இப்போதெல்லாம் அவன் புல்வெளியில் விளை யாடப் போகும்போது ஒரு தடியை எடுத்துச் செல் வது வழக்கமாயிற்று. 

ஒரு நாள் அவன் அந்த மெத்தென்ற பசும் புல் நிலத்தில் குதித்துக்கொண்டே இருக்கையில், சடக் கென்று காலை மேலே தூக்கினான். பாம்புதான் தீண் டியிருக்கும் என்று நினைத்தான். ஆனால், காலைத் தூக்கிப் பார்த்ததும், ஒரு பெரிய கண்ணாடித் துணுக்கு காலில் புகுந்துகொண்டிருப்பது தெரிந்தது. 

சில நாளைக்கு முன்பு ராந்தல் கண்ணாடி உடைந்த தும், அந்தக் கண்ணாடித் துணுக்குகளைத் தானே ஜன்னல் வழியாக வெளியே புல்லில் வீசி எறிந்ததும் அவன் ஞாபகத்துக்கு வந்தன. 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *