தெய்வமும் கோயிலும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2025
பார்வையிட்டோர்: 539 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எவ்வளவு மனமோகனமான பிம்பம் அது! 

இவ்வளவு அழகிய உருவத்தை எங்கே வைக்க லாம் என்று பக்தர்களிடையே கேள்வி பிறந்தது. பக்தனுடைய இருதயமே என் ஸ்வர்க்கம்’ என்றது தெய்வச் சிலை. 

ஆனால் இருதயத்திலுள்ள உருவம் கண்களுக்குத் தென்படுவது எப்படி? எல்லாப் பக்தர்களும் ஒன்று சேர்ந்து சிலைக்காக அழகிய கோயில் அமைக்க நிச்ச யம் செய்தார்கள். ஒருவர் சந்தனமரம் கொண்டு வந்தார். மற்றொருவர் அதில் சித்திரவேலை செய்தார். ஸ்வர்க்கத்தில் இருந்த செளந்தரியங்கள் யாவும் அந்தக் கோயிலில் வந்து இறங்கின. 

கோயிலில் இருந்த சிலைக்குத் தினந்தோறும் பூஜை ஆரம்பமாயிற்று. ‘கோயிலுக்கு அழகு தரும் அழகிய பூக்களைக் கொண்டுவருபவர் யார்?’ என்ப தைப்பற்றிப் பக்தர்களுக்குள போட்டி உண்டா யிற்று. தூபம், தீபம், நைவேத்தியம், கோயிலை அழ காக்கும் பூசைத் திரவியங்கள் இவைகளைக் கொண்டு சேர்ப்பதில் ஒவ்வொரு பக்தனும் முனைந்திருந்தான். 

உற்சவ நாள் வந்தது. கோயில் முழுவதும் பூக்களால் நிரம்பியது. தூபம் கண்ணுக்குத் தெரி யாத வாசனைப் பூக்களை மலர்வித்தது. விளக்குகள் தாரகைகளோடு போட்டியிட்டன. பக்தர்களின் கூட்டம் பூஜையை முடித்துக்கொண்டு, அளவற்ற திருப்தியுடன் திரும்பியது. திரும்பி வரும் வழியில் ஏதோ காலில் தட்டுப்படுவதைக் கண்டு, ஒவ்வொரு வனும் திரும்பிப் பார்த்தான். 

கோயிலில் இருந்த தெய்வச் சிலை அது! ஆனால் ஒருவனாவது அதை அறிந்துகொள்ள முடியவில்லை. ஒவ்வொரு பக்தனும் அதை மிதித்துக்கொண்டே நடந்துபோனான். 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *