ஆசிரியர் – ஒரு பக்கக் கதை
 கதையாசிரியர்: வெ.ராம்குமார்
 கதையாசிரியர்: வெ.ராம்குமார் கதை வகை: ஒரு பக்கக் கதை
 கதை வகை: ஒரு பக்கக் கதை                                             தின/வார இதழ்: தினமணி
 தின/வார இதழ்: தினமணி                                            கதைத்தொகுப்பு: 
                                    சமூக நீதி
 கதைத்தொகுப்பு: 
                                    சமூக நீதி  கதைப்பதிவு: July 8, 2023
 கதைப்பதிவு: July 8, 2023 பார்வையிட்டோர்: 7,589
 பார்வையிட்டோர்: 7,589  
                                    பள்ளியில் ஆசிரியர் ஒருவர் எந்த மாணவரையும் குறைவாகப் பேசமாட்டார். படிக்காத மாணவனாக இருந்தாலும், கடுமையாகப் பேசமாட்டார். அவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாள் வந்தது. அவரிடம் படித்த, படித்துக் கொண்டிருக்கும் எல்லா மாணவர்களும் நெகிழ்ச்சியோடு கண்கலங்கி அவரிடம் பேசினார்கள்.

“எப்படி சார் உங்க சர்வீஸ்ல எந்த மாணவனையும் குறை சொல்லாமல் இருந்தீங்க?” என்று கேட்டார் ஒருவர்.
ஆசிரியர் கூட்டம் நடந்த இடத்துக்கு எதிரே இருந்த தோப்பைக் காட்டி, “இங்கே இப்போது எல்லா மரங்களும் நன்றாக வளர்ந்திருக்கு. ஆனால் ஆரம்பத்துல மரங்களை நட்ட கொஞ்சம் நாளைக்கு சில மரங்கள் வளரவே இல்லை. சில மரங்கள் மட்டும் வளர்ந்துச்சு. நாம் என்ன செஞ்சோம்? வளராத மரத்தைப் பிடுங்கிப் போடலையே. அதுக்கும் நல்லா தண்ணி ஊத்தினோம். தேவையான உரத்தைப் போட்டோம். இப்ப எல்லா மரங்களைப் போல அதுவும் வளர்ந்திருச்சு. அதுமாதிரிதான் படிக்காத மாணவனைத் திட்டாமல் அவனுக்குத் தேவையானதை நான் சொல்லிக் கொடுத்தேன்” என்றார்.
– ஜூன் 2019
 
                     
                       
                      