பாதுகாப்பு – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,960 
 
 

“வீட்டை நல்ல பூட்டிட்டியான்னு பாரு…’ மனைவி மஞ்சுளாவிடம் சொன்னான் சேகர். சரிபார்த்துவிட்டு சாவியுடன் வந்தாள் மஞ்சுளா.

“சாவியை எதிர்த்த வீட்டு செல்வியிடம் கொடுத்து, பார்த்துங்கங்கன்னு சொல்லிட்டு சீக்கிரம் வா…. பஸ்ஸுக்கு நேரமாச்சு…’

சிறிது தூரம் நடந்திருப்பார்கள். மஞ்சுளா, கணவனின் தோளை தொட்டாள்.

“ஏங்க… நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க… வீட்டைப் பூட்டி சாவியை கையில் எடுத்துக்கொண்டு போனால் தொலைஞ்சா போகும்? அடுத்த வீட்டுக்காரங்ககிட்ட கொடுத்து ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆனா என்ன பண்றது?…’

“உனக்கு எப்பவுமே யோசனை கம்மிதான்… நாம ஊருக்குப் போயிட்டு வந்து செல்விகிட்ட சாவி வாங்கறவரைக்கும் நம்ம வீட்டு வாசலுக்கு யாரு வந்தாலும் என்னன்னு பார்ப்பாங்க… நம்ம வீட்டு சாவி அவங்ககிட்ட இருக்கிற வரைக்கும் நம்ம வீட்டை கண்காணிச்சுகிட்டே இருப்பாங்க… அது கூடுதல் பாதுகாப்பு… புரியுதா?’

மஞ்சுளா வாயடைத்துப் போனாள்.

– குன்றக்குடி சிங்காரவடிவேல் (ஜூலை 2011)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *