தாடியும்…தூக்கமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 8,449 
 
 

ஒரு ஊர்ல ஒரு பெரியவர் இருந்தார்.அவர் ரெண்டு விஷயங்களில் தன்னைப் பற்றிப் பெருமை பட்டுக்குவார்.

ஒன்று அவருடைய நீண்ட தாடி பற்றிய பெருமை.வெண்மை நிறத்தில் அவருடைய காலைத் தொடுமளவுக்கு நீண்ட தாடி அவருக்கு.
அடுத்தது படுத்தவுடன் தூங்கிப் போகும் அவருடைய பழக்கம் பற்றியது.

http://1.bp.blogspot.com/_tmCeQu3ms5…less_night.jpg
யாரிடம் பேசினாலும் இதைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.
இந்த இரண்டு விஷயங்களிலும் தன்னையாரும் மிஞ்ச முடியாது என சொல்வார்.
ஒரு நாள் அவருடைய பேரன் ஊரிலிருந்து வந்திருந்தான்.

அவனிடமும் தாத்தா இது பற்றி பேசினார்.
பேரன் ‘சரி தாத்தா.நீங்க தூங்கும் போது உங்க நீண்ட தாடி போர்வைக்கு மேலே இருக்குமா இல்லை போர்வைக்கு அடியிலா?’ என்று சந்தேகம் கேட்க

படுத்தவுடனே தூங்கிப்ப் போகும் பழக்கத்தால் தாத்தாவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
இன்று தூங்கும் போது பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
இரவு தூங்கும் போது போர்வைக்கு அடியில் தாடி இருக்க வெளியே தெரியட்டும் என்று அதை எடுத்து போர்வைக்கு மேலே போட்டார்.

அது பார்ப்பதற்கு நன்றாக இல்லாததால் மீண்டும் எடுத்து போர்வைக்கு அடியில் போட்டார்.
மீண்டும் சரி வராததால் மேலேயும் மறுபடி கீழேயும்……..இப்படியே போர்வைக்கு மேலே…கீழே என்று மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டே இருந்ததில் அன்று இரவு தூங்கவேயில்லை.

மறுநாளும் இப்படி முயற்சித்து தூக்கம் தொலைக்கவே மனம் வெறுத்துப் போன தாத்தா தாடியா?தூக்கமா? னு யோசித்து முடிவில் தன்னுடைய நீண்ட தாடியை வெட்டி விட்டார்.

பிறகென்ன?தாடி பத்தின கவலை இல்லாம நிம்மதியாத் தூங்கத் தொடங்கினார்….ஹாஹா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *