சிவ சக்தி




என்னங்க! இன்னும் நம்ம சமையல்காரர் வரலை! வேலைக்கார்ரும் வரலை! மணி ஒன்பது ஆகிடுச்சு.
அவங்கவங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும். நமக்குத்தான் ஒரு வேலையும் இல்ல, காத்துகிட்டு இருக்கிறதைத் தவிர, அப்படினு நினைச்சுகிட்டாங்க போல.
இன்றைக்கு பிரதோஷம்!
அவங்க விரதங்கிற பேரிலே பட்டினியா கிடக்கிறாங்களோ, இல்லையோ? நம்மலை பட்டினி போட்டு ஒரு கால பூஜையை சாயங்காலாம் பண்ணலாம்னு இருக்கலாம். என ஆதிசிவனாயும், உமா மகேஸ்வரியாய் குடிக்கொண்டுள்ள ஆதிபுரம் கோவிலில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டு இருந்தனர்.
யாரோ, வாரப்ல இருக்கு, இன்றைக்கு பக்தர்களின் பக்தியின் ஆழத்தையும், போக்கையும் சோதனை செஞ்சிட வேண்டியதுதான்.என்றார் தந்தையான ஈசன்
ஆகட்டும் சுவாமி! என்றார், தாயாகிய அம்பாள்.
வந்தவன் குருக்கள் இல்லாத்தைப் பார்த்து அலுத்துக்கொண்டே, இன்றைக்கும் இல்லையா? இதே வேலையாப் போச்சு!
இந்த ஐயருக்கு. நான் எப்படி விளக்கு ஏற்றுவேன்?
இன்றைக்கு சனிக்கிழமை விளக்கேற்றுதல் தடைப்படக்கூடாது என புலம்பிக்கொண்டே சனிபகவான் சந்நிதி சென்றுவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
சாமி புன்முறுவலாக அம்பாளைப் பார்த்தார்.
அடுத்தவர் வருகிறார்
அடடே, என்ன தேஜஸ் இவன் முகத்தில். யார் இவன்? என ஆச்சரியத்தோட பார்க்கின்றார்கள்.
நந்தியைப் பார்த்து வணங்கி விட்டு சிவனிடம் வந்து நின்று, என்னோட பிராரத்தனையை கேட்க மாட்டியா? நான் உனக்கு பாலா,தேனா அபிஷேகம் பண்றேனே! அதை உத்தேசித்தாவது, எனக்கு கருணைக் காட்டக்கூடாதா?
அம்பாளிடமும், இதே கோரிக்கயை வைத்து நீயாவது சொல்லப்படாதா? என வருத்தத்துடனே பிரகாரம் சுற்றி வெளியேறினான்.
ஏன் சுவாமி, இவன் கோரிக்கைத்தான் என்ன? அம்பாள்.
ஏன் உனக்குத்தெரியாதா?
உங்கள் வாயால வந்தா அது தானே நடந்துவிடும் அல்லவா.ஆகையால் கேட்டேன். ஆக, அருள் புரிய முடிவு செய்து விட்டாய். செய்துவிடுகிறேன். என்றார் சிவன்.
அவன் கேட்படியே அவளின் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் வந்தது அன்று.
இனி அவனுக்கு ஒரு குறையும் இல்லை அப்படித்தானே? எனக் கேட்டாள் அம்பாள்.
அது எப்படி? நல்ல வரன் அமைய கேட்டான், கொடுத்தோம் யாம்!
சரியாக வேண்டக் கூடத் தெரியவில்லை இவனுக்கு .
தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடு என்றல்லவா கேட்டு இருக்க வேண்டும். என்றார் சிவன்.
அது அவனின் அறியாமை சுவாமி. நீங்கள் பூரணமாக அனுக்கிரஹம் செய்யலாமே? என்றாள் அம்பாள்.
எல்லாம் அவன் செய்த கர்ம விதிப்படி நடக்கும்.எனக் கூறினார்.
மாலை நேரம்..
ஒரு வழியாக குருக்களும், பிரசாதம் தயாரிப்பவரும் வந்து விட்டனர்.
ஏன் காலையிலே வரலை?
வேற ஜோலியாயிடுத்து.
சரி, சாயந்திரம்தான் பிரதோஷமாச்சே சேர்த்தே அபிஷேகம் எல்லாம் பண்ணிடலாம்னுதான் வந்தேன்.
சரி,சரி நான் போய் தயிர்சாதம் பிராசாதம் பண்ணிட்டு போறேன், வெளியே வேலை இருக்கு.
என்னப்பா இப்பத்தான் வந்தே! அதுக்குள்ளே போறங்கிற. இருந்து ஒத்தாசை பண்ணிட்டுப் போ! என்றார் குருக்கள்.
உமக்கு என்ன ? தட்டிலே விழும்.
எனக்கு வெறுங்கையோட போன அடிதான் விழும், நான் இன்னொரு கோவில்ல போய் பிரசாதம் பண்ணனும்.
மக்கள் கூட்டம் ஏகமாய் திரண்டது. நந்தி பகவானிடம்.
நந்தியின் சந்தோஷமும் நமது சந்தோஷம் என சுவாமி கண்டு மகிழ்ந்து இருந்தார்.
ஏனெனில் அடியார்களுக்கு அடியார் அல்லவா? அவர்
அடுத்து, சனிபகவானிடமும், பைரவரிடம், துர்கையிடம், எனக் கூட்டம் கூடி வழிபட்டது.
சுவாமி அம்பாளைப் பார்த்து, இனி எத்தனை சம்பந்தர் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.
ஏன் சுவாமி நவக்கிரகங்கள் அனைத்தும் தங்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை! பரிவார தெய்வங்கள் என்ற வகையில், அவையும் நம் வணஙகத்திற்குரியவைதானே?
அவைகள் ஒரு மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவைதானே?
உண்மைதான்! உமையே!
பரிவாரத் தெய்வங்களே கூடாது என்று சொல்லவில்லை.அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது எனத்தான் சொல்கிறேன்.
என்ன சுவாமி? பராசக்தி வசனம் எல்லாம் பேசுகிறீர்கள்?
உண்மையே யாம் பேசுவோம்.
சோதிடம் என்பது நல்ல கலைதான். ஆனால் ஆன்மிகத்தில் அதற்கு என்ன வேலை ?
பரிகாரம் என்ற பெயரிலே திருக்கோவில்களை அசுத்தம் செய்வதும், கடமைக்கு ஆங்காங்கே விளக்கேற்றவதும், பக்தி, வேண்டுதல் ,பட்டினி என்ற பேரிலே உடலை கொடுமைப் படுத்துவதும் நாம் எப்பொழுது விரும்பினோம்.
இவை அனைத்தும் சோதிடத்தின் மீது மக்களின் அதீத நம்பிக்கை.
அவர்கள் எனக்காக ஒரு வரி பதிகம் , பக்தியுடன் பாடினாலே எமது அருள் கிடைக்கும் என இன்னும் அறியலையே?
ஆலயத்தில் உண்மையான பக்தியும், தூய்மையும்தான் முக்கியம். தூய்மை இல்லாத இடத்தில பக்தி எப்படி இருக்கும்
இந்த கூட்டத்தில் எல்லோரும் நம்மை பார்த்துக் கொண்டு இருக்க, நான் ஒருவனைத்தான் கவனித்துக் கொண்டு இருக்கின்றேன்.
அதோ அவனைப் பார்..
வரும் பக்தர்கள் வழிபட வேண்டி, திருக்கோவிலை சுத்தமாக பராமரித்து, பூச் செடிகளை கவனித்து,நீர் வார்த்து, மலர் கொய்து,தொடுத்து , அன்போடு அனைவரிடமும் அணுகி, தனக்கென்று எதுவும் வேண்டாமல் இங்கே வந்தவர்களின் நியாயமான குறைகளை கலைந்து விடு ஈஸ்வரா… என வாய் ஓயாமல் என் நாமத்தை பக்தியுடன் சொல்கிறான் பார்.
அவனைத்தானே சுவாமி நீங்கள் கடுமையாக சோதிப்பீர்கள்?
ஆம்! அப்போதுதான் அவன் என் அடியாரவான். நான் வேறு,அவன் வேறு அல்ல,என்று உணர்வான்.
அதனால் தான் அனைவரும் அடியார்க்கு அடியார் ஆக வேண்டும் என்பது என் ஆசையாக உள்ளது.
அடியார்க்கு அடியவராகி விட்டால்?
பொறாமை தலை தூக்காது. அன்பு தான் தலை தூக்கும்! அன்பு தலை தூக்கினால் தான் உள்ளத்தில் பக்தி வளரும்!
நம்மைப் பார்த்து அவர்கள் என்றாவது பொறாமைப் படுகிறார்களா? உமா.
இல்லையே! சுவாமி
அது போலத் தான் அடியார்களைப் பார்த்து, அடியார்க்கு அடியார்களும்! பொறாமைப் படமாட்டார்கள்.
இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம் தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!
இப்படி நாமே தொண்டர்களின் உள்ளத்தில் ஒடுங்கி விடுவதால், தொண்டர்களுக்குத் தொண்டர்கள் ஆகின்றன நவக்கிரகங்கள், உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்கள்.
நவக்கிரகங்களும் அடியார்களின் கர்ம பலனைக் கொடுக்கும் போதும், அவர்களின் பற்றற்ற நிலையினைப் பார்த்து, ஒரு அடிப் எப்படிப் பணிந்து பக்தியுடன் கொடுப்பானோ, அப்படிக் கொடுக்கும். இதுதான் அவர்களுக்கு நான் வழங்கிய ஆணை. என்றார் சுவாமி.
மகழ்ச்சி. சுவாமி
வா,உமா, நம்மை ஒரு பக்தர் அவரது இல்லத்திற்கு சிரத்தையிடன் உணவு உண்ண அழைக்கிறார், அடியார் போல் வேடமனிந்து அவரது இல்லம் சென்று உணவருந்தி அருளாசி வழங்குவோம் என்று விடைமீதேறிப் புறப்பட்டனர்.
சிலா மூர்த்திகள் மட்டும் உடைய ஆதிபுரம் கோவிலில் அபிஷேகம், அலஙகாரம் அர்ச்சனை என நடந்து நடை சாற்றப்பட்டது.
எல்லோருக்குமாக ஈசனை வேண்டும் பக்தனுக்குத்தான் சோதனை முதலில் வரும் .இறைவன் யார் வழியில் வருகிறார் உதவுகிறார் என்பதனை சிந்தித்து தெளிவு பட வைக்கும் நல்ல ஆன்மிக கதையை படைத்துள்ளார் அய்யாசாமி . வேண்டுதலிலும் குறை இல்ல வேண்டுதல் முழுமையாக இருக்கவும் வேண்டும் என்று தெளிவு செய்துள்ள கதை .பாராட்டுக்கள் .