வாடகை வீடு!





(2025ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராஜா ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறான் . இந்த நிலையில் புதிதாக ஒரு நகரில் கிளை தொடங்கியதால் அங்கு திடீரென மாற்றப்பட்டான்.
புதிய இடம் ஆட்கள் புதிது. ஜாலியாக வாழ்ந்த காலம் இப்போது மாறிவிட்டது. அதனால் தங்க ஒரு வீடு அல்லது ரூம் தேட வேண்டும். ஆபிசில் வேலையில் சேரும் முன் முதலில் தங்க இடம் தேட ஆரம்பித்தான். ஒன்றும் கிடைக்க வில்லை. எனவே தற்காலிகமாக லாட்ஜ் ஒன்றில் தங்கி வேலைக்கு சென்று வந்தான்.
அப்போது ஓர் வீட்டின் முன் இருந்த ‘டுலெட் போர்டை’ பார்த்து அங்கு சென்று விசாரித்தான்.
பின்னர் ஆபிஸ் வந்தவன் அங்கிருந்த செக்யூரிட்டி பாலுவிடம் வீடு இருக்கும் விவரத்தைக் கூறினான்.
அதைக் கேட்ட செக்யூரிட்டி பாலு “தம்பி! நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க. அந்த வீட்டில் எப்போதுமே போர்டு தொங்கும். அதை தினமும் நானும் பார்த்துட்டுதான் வாரேன்.. அதுக்கு என்ன காரணம்னு தெரியுமா?” என்றார்.
“தெரியலை. நீங்க சொல்லுங்க” என்று ராஜா கேட்டான்.
அதைக் கேட்ட பாலு, “சார்.. ஒரு வீட்டில் ரொம்ப நாளா போர்டு தொங்குதுன்னா அதுக்கு என்ன காரணமா இருக்கும்னு யாருக்காவது தெரியுமா. ஒன்னு வீட்டில் வசதி இருக்காது. அல்லது வீட்டுக்காரர் தொந்தரவா இருக்கும். இது தெரியமா நிறையபேர் அங்க வாடகைக்கு போய் இருக்காம கொஞ்ச நாளில் வீட்டை காலி செய்யறாங்க.. இதனால் யாருக்கு லாபம் தெரியுமா. அண்ட் வீட்டுக்காருக்குத் தான். அது எப்படின்னா அட்வான்ஸில் பாதி எடுத்துக்குவாரு. கரண்டும் மிச்சம். இப்படி மாசத்துக்கு 2 பேர் எப்பவும் வாறாங்க, இப்ப புரியுதா..” என்றார்.
அவர் சொல்வதை கேட்ட ராஜாவுக்கு நியாயமாக பட்டது.
உடனே ராஜா, “அண்ணே.. நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. நல்லவேளை நான் தப்பிச்சேன். ரொம்ப நன்றி. நான் வேற வீடு பார்க்கிறேன்” என்றபடி நடந்தான்.
– 13-06-2025