மனக்கவலை பலக்குறைச்சல் என்றது
கதையாசிரியர்: இராயர்-அப்பாஜி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 186
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இராயருடைய பட்டணத்தில் தாயால் யாதொரு குறைவும் இல்லாமல் பொசிக்கப் பலப்பட்டுக்கொண்டு யாதொரு கவலையுமில்லாமலிருக்கிற ஒரு வாலிபனானவன் தனக்குமுன் வருகின்ற யானைகளுடைய கொம்புகளைத் தன்னுடைய கைகளினாலே பிடித்துப் பத்துமார் தூரம் பின்னிட்டுப் போகும்படி நெட்டிவிட்டுப் பேசிக்கொண்டிருப்பான்.
ஒரு நாள் இராயர் சவ போகும்போது அவன் ஒரு யானையை நெட்டித் தள்ளி விட்டுப்போகிறதைப் பார்த்து அப்பாச்சியை நோக்கி, “இவன் இப்படிச் செய்வது என்ன காரணம்? இவ்வளவு வல்லமை இச்சிறுபாற்கு எப்படி இருக்கலாம்?” என்று கேட்க, குடும்பக் கவலை எவளவும் இல்லாமையால் இவ்வளவு பலத்துடந் இருக்கிறான்” என்று சொன்னான்.
பின்பு அவ்விருவரும் அந்தப் பிள்ளையாண்டானுடைய தாயாரை அழைப்பித்து, “உன்னுடைய பிள்ளை யாதொன்றால் சமுசாரக் காரியங்களை நிருவாகம் பண்ணிக்கொண்டு வருகிறான்” என்று கேட்டார்கள்.
அவள், “எனக்கு ஏக புத்திரனாகையால் அவனுக்கு யாதொரு கவலைக்கும் இடம் வையாமல் அவனை போஷித்துக்கொண்டு வருகிறேன்” என்றாள். அப்படியே செய்வது நல்லதல்ல. அது பின்னாடிக்கு வருத்தத்துக்கு ஏதுவாயிருக்கும். ஆகையால் அவனுக்குச் சாப்பாடு போடும்பொழுது, ‘நாளைக்கு உப்பில்லை, கொஞ்சம் உப்பு சம்பாதித்துக் கொண்டுவா” என்று கேள்” என்று சொல்லியனுப்பிவிட்டார்கள்.
அவள் அப்படியே தன் குமாரனுக்குச் சொன்னாள். அவள் அது சொன்னது முதற்கொண்டு “இதை நானெப்படிச் சம்பாதிப்பேன்” என்று பிள்ளையாண்டான் அதிகக் கவலையடைந்து கொண்டு இருந்தான்.
மறுநாள் அந்த வாலிபன் தெருவிலே போகும்போது ஒரு யானையை அவனுக்கு எதிரில் வரும்படி செய்ய, இவன் அதன் கொம்பைப் பற்றி நெட்ட அது இவனைத் தும்பிக்கையினாலே தூக்கிப் போட்டுப் போய்விட்டது.
அதை அப்பாச்சி இராயர்க்குக் காண்பித்ததுமன்றியில் அவனுடைய தாயாரை அழைப்பித்து நடந்த சங்கதிகளை விளங்கச் சொல்லி மனக்கவலையை பலக்குறைவுக்குக் காரணமென்று அறிவித்தான்.
அப்பாச்சியினுடைய புத்தியைக் குறித்து இராயர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
![]() |
பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை : மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை. இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க... |
