போராடியும் தீர்வென்பதில்லை





சாருமதி அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியையாக வேலை பார்ப்பவள். கயல்விழி சாருமதியின் மாணவி இருவரின் வீடும் அருகருகே உள்ளது. டீச்சர் போலாமா? என கயல் அழைக்க இரண்டு நிமிடம் கயல் வந்து விடுகிறேன் என பதில் வர கயல் காத்திருக்கிறாள்.
இருவரும் பேசிக்கொண்டே செல்கின்றனர். பள்ளி முடிந்ததும் சாருவின் வீட்டிலேயே வீட்டுப்பாடங்களை முடித்து விட்டு சாப்பிட்டு விட்டு தூங்குவதற்கு மட்டுமே கயல் வீட்டிற்குச் செல்வாள். சாரு பாடம் எடுப்பதற்கு குறிப்புகள் எடுத்துக் கொண்டு இருக்க கயல் அவளின் மடியில் படுத்துக் கொண்டாள். சாரு தலையை வருட அப்படியே உறங்கி விட்டாள். கயலின் அம்மா அவளை அழைக்க வந்தாள், இருவரையும் பார்த்துவிட்டு கயலை உடன் பிறந்த தங்கச்சி போல பார்த்துக் கொள்கிறாள் என சாருவின் அம்மாவிடம் கூறிக்கொண்டு இருக்கிறாள்.
ஆமா லதா சாரு ஒற்றை பிள்ளையாகவே இருந்து விட்டாள், கயலின் மேல் அவளுக்கு அதிக பாசம் என்று சாருவின் அம்மா கூறுகிறாள்.
அம்மா நன்றாக தூங்கிக் கொண்டு இருக்கிறாள், காலையில் அனுப்பி வைக்கிறேன் என்கிறாள், சரிம்மா என சிரித்து விட்டு அவள் சென்று விட்டாள்.
வழக்கம்போல் பள்ளி முடித்து வீட்டிற்குச் செல்ல புறப்படும் போது தலைமையாசிரியர் உங்களை அழைத்து வர சொன்னார் என செந்தில் கூறுகிறான். கயலிடம் நீ இங்கு எனக்காக காத்திரு நான் வந்து விடுகிறேன் என அவளை தனது இருக்கையில் அமர்த்தி விட்டுச் சென்றாள் சாரு. கயல் தனது வீட்டுப்பாடங்களை செய்து கொண்டிருந்தாள், பின்பு கழிப்பிடம் சென்று வரலாம் என அங்கிருந்துச் செல்கிறாள்.
அவளைப் பின் தொடர்ந்த கணித ஆசிரியர் சதாசிவம் அவளின் மார்பின் மீது கை வைத்து அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்துக் கொண்டிக்கிறார், கயல் அவரை தடுக்க முயற்சிக்கிறாள். அந்த வேளையில் கயல் என சாருவின் குரல் கேட்டதும் அவர் போய் ஒளிந்துக்கொள்ள சாரு உள்ளே வருவதற்குள் கயல் கழிவறைக்குள்சென்று விடுகிறாள். கயல் என அழைக்க வரேன் டீச்சர் என தனது உடை முடி அனைத்தையும் சரி செய்துக் கொண்டு வெளியே வருகிறாள். போலாமா? என கேட்க தலையசைக்கிறாள். வீட்டிற்கு போகும் வழியில் ஓயாமல் வாயடித்துக் கொண்டு வருபவள் அன்று மௌனத்தை தழுவி இருந்தாள். கயல் என்கிட்ட எதாவது மறைக்கிறாயா? என கேட்க இல்லை அக்கா உங்ககிட்ட மறைக்க ஒன்னும் இல்லை, தலைவலி அதான் என்கிறாள்.
இரவில் நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் தோளை சாரு தொடவும் பயந்து கத்திவிட்டாள்.
ஏய் கயல் என சாரு அழைக்கவும் அவளை கட்டி அணைத்துக் கொண்டு அழுக ஆரம்பித்தாள். என்ன ஆச்சு என கேட்க நடந்ததை கூறுகிறாள், நீங்க மட்டும் சரியான நேரத்திற்கு அங்கே வராமல் போயிருந்தால் என்நிலைமை என்ன ஆகியிருக்கும் என என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை. அந்த இடத்திற்கு இனி செல்லும்போதெல்லாம் எனக்கு பயமாக இருக்கும், என கூறி அழுகிறாள். எனக்கு எதாவது பண்ணிக்கலாம் என தோணுகிறது அக்கா என்கிறாள். தவறான முடிவு கயல், இந்த மாறி பல பேர நான் உங்க அம்மா ஏன் பல பெண்கள் தினமும் கடந்து வந்து கொண்டுதான் இருக்கிறோம். நீ தவறான முடிவு எடுத்தால் என்ன விஷயம் என தெரியாமலையே உன்னை பற்றி ஆயிரம் கதைகளை அக்கம் பக்கத்தினர் உருவாக்கி விடுவார்கள், இதுக்கு இது தீர்வு இல்லை கயல். இந்த மாதிரி ஒரு எண்ணம் உனக்கு இனிமேல் தோணவே கூடாது. எந்த பிரச்சனை என்றாலும் என்னிடமோ உன் அம்மாவிடமோ சொல்லிவிடு சரியா என்கிறாள். சரி நான் இருக்கேன் நேரம் ஆகிவிட்டது வா எதையும் யோசிக்காத என கூறி விட்டு அவளை தூங்க வைத்து விட்டாள், சாருக்கு தூக்கம் வரவில்லை.
மறுநாள் தலைமையாசிரியரிடம் நடந்ததை கூறி போலீஸில் புகார் கொடுக்கலாம் என கூறுகிறாள்.
சாரு நாம் போய் புகார் கொடுத்தால் நமது பிள்ளை பேரும் சேர்ந்து வரும் ஊடகம் அவளை கேள்வியாலையே கொல்லும், அவ இங்க அனுபவித்த வலிய விட அதிகமா இருக்கும் அவளை இந்த சமூகம் வேற மாறி பார்க்கும்.
அது மட்டுமில்லாமல் அவங்க பெரிய இடம் சுலபமா இதுல இருந்து வெளிய வந்துருவாங்க, இதுக்கு என்னதான் சார் தீர்வு கடுமையான சட்டங்கள் பல இருப்பினும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தும் அதிகாரிகளை இச்சமூகம் கொண்டிருந்தால் மட்டுமே தண்டனை என்பது சாத்தியமாகும். ஆக அதுவரைக்கும்
இந்த மாறி மிருங்களுக்கு பல பேர இரையாக கொடுக்க வேண்டும் என சொல்ல வரிங்களா? உன் கோவம் எனக்கு புரிகிறது சாரு நம்மால் என்ன பண்ண முடியும் சொல்லு, நாளைக்கு இந்த சமூகத்துல எனது பிள்ளைகளை எவ்வாறு பாதுகாக்க போகிறேன் எனக்கு தெரியவில்லை பயமா இருக்கு சார். அதிகார திமிராலயும் பண திமிராலயும் என்ன வேணா பண்ணலாம் என்கிற தைரியம் இவங்களுக்கு எப்படி சார் வருது, அப்படியே துணிந்து ஒரு பெண் அவருக்கு எதிராக செயல்பட்டால் அவளின் நடத்தை பற்றி உடன் இருப்பவர்களையே பேச வைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிக்கிறோம், வாழவேண்டும், எங்கள் தலைமுறையையும் வாழ வைக்க வேண்டும்.
இதுதான் தீர்வு நான் சொல்றது சரிதானா சார்.
அந்த பயத்தை என்கிட்ட இருந்து போக்க எதாவது பண்ணுங்க அக்கா என்று என்னை கட்டிக் கொண்டு
அழும் அவளிடம் இவ்வாறு பயந்து தான் நீ இறுதி வரை பயணிக்க வேண்டும் என இச்சமூகம் கூறுகிறது, இதுதான் தீர்வு என அந்த பேதையிடம் எப்படி சொல்வேன் என கேட்கிறாள். சாரு, நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் என கதவை திறந்துக் கொண்டு வெளியே செல்கிறாள்.
சாரி மேடம் ஏதோ புத்தி தடுமாறி இவ்வாறு நடந்துக் கொண்டேன் என்கிறான் சதாசிவம். அவ எனக்கு பொண்ணு மாதிரி அவமேல கையை வச்சதுக்கு உங்களை கொன்னு போடுகிற அளவுக்கு எனக்கு கோவம் இருக்கு, உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு நாளைக்கு இதே மாதிரி உங்க பொண்ணுக்கு நடக்கும் பொழுது என்னை மாதிரி ஒருவர் உங்கள் பொண்ணை காப்பாற்ற வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன், என கூறிவிட்டு செல்கிறாள் சாருமதி..
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பு பற்றி கேட்டுக் கொள்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் உனக்கு யார்மூலம் என்ன பிரச்சனை வந்தாலும் என்னிடம் வந்து கூறு நான் இருக்கிறேன் என கூறுவதன் மூலம் பிள்ளைகள் மேற்கொள்ளும் சில தவறான முடிவுகளில் இருந்து அவர்களை மீட்கலாம்,