பேசுவோம் வாழ்வோம்





தாமஸ் அன்று பள்ளி விடுமுறை என்பதால் பள்ளிக்குச் செல்லவில்லை. நண்பர்களோடு விளையாட அருகிலிருந்த விளையாட்டு மைதானத்திற்குச் சென்றான். அங்கு பல பிள்ளைகள் தங்களையே மறந்து விளையாட்டில் மூழ்கியிருந்தனர். அப்போது ஒரு பையன் சோகத்துடன் தான் சுமந்து வந்த பொருட்களின் பளுவைத் தூக்க முடியாமல் தள்ளாடி நடந்த வந்து கீழே விழுவதைக் கண்டான். அதைப் பார்த்த தாமஸ் உடனே அவனைத் தூக்கி விட்டான்.
அதோடு அவன் எடுத்து வந்து கீழே விழுந்த பொருட்களைச் சேகரித்து, அவனிடம் கொடுத்தான். பிறகு விளையாட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு அவனுக்குத் துணையாக அவனோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவன்; எடுத்து வந்த பொருட்களில் சிலவற்றைச் சுமந்து கொண்டு அவனுடன் நடந்தான்.
வழியில் ஒரு தேனீர் கடை வந்தது. அவனுக்கு தேநீர் வாங்கித் தந்தான். பேச்சுவாக்கில் அவனது பெயர் சேவியர் என்பது தெரிய வந்தது. சேவியர் வீடு முதலில் வந்தது. சேவியர் தாமஸை தன் வீட்டிற்கு அழைத்தான்.
வீட்டில் அமர்ந்து சிறிது நேரம் பேசி விட்டு தாமஸ் தன் வீட்டிற்குக் கிளம்பினான். அது முதல் இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். இருவரும் ஒரே பள்ளியில் படித்ததால் அவர்களது நட்பு நாளுக்கு நாள் மேலும் வளர்ந்து அந்தப் பள்ளியில் இறுதி வகுப்பு வரைத் தொடர்ந்தது.
அன்று பள்ளி இறுதி நாள். தேர்வுகள் முடிந்து விட்டன. சேவியரும் தாமஸூம் அன்று பள்ளியில் சந்தித்துக் கொண்டனர். சேவியர் தாமஸைத் தன்னோடு சிறிது நேரம் செலவழிக்க முடியுமா என்று கேட்டான். தாமஸூம் சரி என்றான். சேவியர் தாமஸை தாங்கள் பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்த விiளாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றான்.
இருவரும் அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். அதுவரை அமைதி காத்த சேவியர் இப்போது பேசலானான். “தாமஸ் அன்றைக்கு நான் பெரிய மூட்டையைச் சுமக்க முடியாமல் இந்த இடத்தில் கீழே விழுந்தது உனக்கு நினைவிருக்கின்றதா. அது வீட்டிலிருந்த என் பொருட்கள்தான்.
நான் சரியாகப் படிக்கவில்லை என்று என் வீட்டில் அன்று திட்டினார்கள். அதனால் எனக்கு மன உளச்சல் ஏற்பட்டது. வாழ்க்கையே வெறுத்துப் போனது. சே என்னடா வாழ்க்கையிது என்று வாழ்க்கையே கசந்தது. அப்போது எனக்கு ஆறுதல் சொல்ல யாருமில்லையே என்று ஏங்கித் தவித்தேன்.
நான் படிக்க பயன்படுத்திய புத்தகங்கள் மற்றும் பொருட்களைக் கட்டித் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். என் எண்ணமெல்லாம் அருகில் இருக்கும் ஏரியில் நான் சுமந்து வந்த மூட்டையை போட்டு விட்டு அம்மா பயன்படுத்தி வந்த தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு அந்த ஏரியில் விழுந்து மடிந்து போகலாமென்றுதான் இருந்தது.
ஆனால் உன்னைச் சந்தித்த பின் நீ என்மீது காட்டிய அன்பு, பாசம், பரிவு, நேர்மை, பிறருக்கு உதவும் நற்குணம், கனிவான ஆறுதலான பேச்சு மற்றும் அணுகுமுறை ஆகிய நற்பண்புகள்; என் மனதை வெகுவாக மாற்றியது. எனவே நான் என்னை முற்றிலும் மாற்றிக் கொண்டேன்.
அன்று நீ என்னிடமிருந்த பொருட்களை மட்டுமல்ல. என்னையும் சரியாக்கினாய். உன்னால்தான் இன்று நான் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அன்றைக்கு நீ மட்டும் என் வாழ்வில் குறுக்கிடவில்லையென்றால் நான் இந்த அருமையான, அழகான, ஆனந்தமான, இன்பமான வாழ்வை அன்றே இழந்து இறந்து போயிருப்பேன்” என்று கூறி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.
தாமஸ் அவனை ஆறுதல்படுத்தி சேவியர் நடந்ததை மறந்துவிடு. இனி சிறப்பாக வாழ முடிவெடு. நாம் இருவரும் இறுதிவரை நண்பர்களாகவே இருப்போம். நலமுடன் வாழ்வோம் என்று கூறி அரவணைத்துக் கொண்டான். அது சேவியருக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
நாம் மற்றவர்களோடு பேசும் விதம்; மற்றும் நமது அணுகுமுறை அவர்களின் மனக்குமுறலையும் துன்பத்தையும் களைகின்றது என்றால் அதுதான் நமக்குக் கிடைக்கும் வெகுமதி.
ஒரு சில வார்த்தைகள் ஆறுதல் தரும். ஒருசில வார்த்தைகள் அறுவருப்பைத் தரும். நாம் என்ன பேசுகின்றோமோ அந்த சொற்களின் தாக்கம் என்றேனும் ஒரு நாள் நம்மிடமே திரும்ப வந்தவிடும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. உள்ளத்தின் நிறைவே வாய் பேசும். உடல் தூய்மை நீரால் அமையும். மனத்தூய்மை வாய்மையால் காணப்படும் என்பதுபோல உள்ளத் தூய்மையை நமது செயலிலும் பேச்சிலும் காட்டுவோம்.
எப்போதும் எல்லோரிடமும் நல்லதே பேசுவோம். என்றென்றும் நலமுடன் வாழ்வோம்.
நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க... |