பெண்களை வாழவிடுங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 3, 2026
பார்வையிட்டோர்: 119 
 
 

“உதயா.. உதயா” என்ற படபடப்பான குரல் கேட்டதுமே கவிதா தான் வீட்டு வாசல் கதவைத்தட்டியபடி அழைக்கிறாள் என உதயாவிற்குப் புரிந்துவிட்டது.

அதுவரை படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தவள் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள் கண்கள் அனிச்சையாக சுவர் கடிகாரத்தை பார்த்தன மணி 6:30.

ஐயோ இவ்வளவு நேரம் தூங்கி விட்டேனா ராத்திரி ரொம்ப நேரம் டிவி பார்த்ததின் பலன்’ என்று மனதுக்குள் சொல்லியபடியே வாசல் கதவை ஓடி வந்து திறந்தாள்.

கவிதா கதவை ஒட்டியபடி அப்போதுதான் பூத்த புத்தம் புது மலராய் நின்று கொண்டிருந்தாள் . கண்களில் மட்டும் ஏதோ ஒரு அச்சம் தெரிந்தது. செருப்பை உதறி வராண்டாவில் போட்டவள், உள்ளே வரும்போதே,” உதயா அந்த ஆளு இனிக்கும் ஸ்டேஷன் வரைக்கும் தொடர்ந்து ஃபாலோ பண்ணான் .நான் வேகமா உன் வீட்டுக்கு குறுக்கு வழியில் வந்துட்டேன்” என்றாள் சற்று நடுக்கமானகுரலில்

“கவி…உட்காருடி… ஒருநிமிஷம்…முகம் கழுவிட்டுவரேன்” என்று உதயா உள்ளே போன வேகத்தில் துண்டால் முகத்தை துடைத்தபடி ஓடி வந்தாள்.

உதயாவும் கவிதாவும் பள்ளி நாட்களிலிருந்து சினேகிதிகள். இருவரும் ஏழை குடும்பத்து பெண்கள் என்பது அவர்களின் முதல் ஒற்றுமை. கவிதாவின் அப்பா இதய நோயாளி. அவர்பார்த்துக்கொண்டிருந்த கொத்தனார் வேலைக்கு போக முடியாத நிலைமையில் வீட்டோடு முடங்கிவிட்டார். அம்மா

கனகா பிறவி ஊமை. பெண்ணை சீரும் சிறப்புமாக வளர்க்க முடியாத குறையைக் கண்ணில் தளூம்பும் நீரில் காட்டுவாள்..

ஆறுமாதம் முன்பு பிகாம் முடித்த கவிதா தாம்பரத்தில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் கிடைத்த வேலைக்குப்போய்க்கொண்டிருக்கிறாள். அதில் வருகின்ற சம்பளம் அவள் அப்பாவின் வைத்திய செலவுக்கு உதவியாக இருக்கிறது.

ஒருமாதமாக காலைஆறு மணிக்கு அடையார் பகுதிவண்ணான்துறையிலிருந்நது அருகிலிருந்த ரயிலடி வரை நடந்து மின்சார ரயில் ஏறி வேளச்சேரியில் ஒரு தனியார் நிறுவனத்தின் கம்ப்யூட்ட்ர கோர்சில் சேர்ந்து படிக்கிறாள் .எட்டும ணிக்குத்திரும்பி வந்து அரைமணியில் தாம்பரம் அலுவலகத்திற்கு மறுபடி கிளம்புவாள்.

உதயாவுக்கு ஒரே அண்ணன் தான் .ஐந்து வயதில்பெற்றோரை விபத்தில் இறந்துவிட்டாள்.அண்ணன் குமரவேல் ராணுவத்தில் பணிபுரிகிறான். உதயா கவிதாவைபோல அல்ல ..நல்ல தைரியசாலி. அவளும் ராணுவத்தில் சேரத்தான் பிரியப்பட்டாள்.குமரவேல் தங்கையை சமாதானப்படுத்தி,”குடும்பத்துக்கு நாட்டு சேவை செய்ய ஒருவர் போதும்மா.. நீ கல்வி சேவை செய்யலாம்.. பள்ளிக்கூட டீச்சர் வேலைக்குபோகலாம்’ என்று சொல்ல உதயா அரசுப்பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியை ஆக இருக்கிறாள்.அவளிடம் எந்த இளைஞனும் வாலாட்டமுடியாது. பார்வையிலேயே பொசுக்கிவிடுவாள். கவிதா அவளுக்கு நேர் எதிர் பயந்த சுபாவம்.

கவிதாவை விடாமல் காலை நேரம் பின் தொடர்ந்து பைக்கில் வந்த ஒருவன், ஒருநாள்,”எனக்கு உன்னை பிடிச்சிருக்கு நான் உன்னை காதலிக்கிறேன்” என்று வழி மறித்து சொல்ல, கவிதா” அதெல்லாம் முடியாது நான் கம்ப்யூட்டர் படிப்பை முடிக்கணும் எனக்கு நல்ல வேலை கிடைக்கணும் எனக்கு காதல் எல்லாம்

கிடையாது” என்றதற்கு” எனக்கு உன்மேல் காதல்இருக்கிறது நீ என்னை கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் பரவாயில்லை என்னோடு ஒரு நாளாவது இருந்தால் போதும்” என்று சொன்னதும் கவிதா பதில் சொல்லாமல் வேகமாய் நடந்துவிட்டாள்.

போனில் உதயாவிடம் நடந்ததை விவரித்தாள். அவள் சொல்லிக்கொடுத்தபடி மறுநாள் அந்த பைக் இளைஞன் நடுவழியில் முதல் நாள் சொன்னதையே விரக தாபத்துடன் வழியும்போது கவிதா கோபமாக” இப்படியெல்லாம் பேசினால் போலீஸில் உன்னை பற்றி புகார் கொடுப்பேன் “என்றாள்.

மறுநாளிலிருந்து அவன் பின் தொடர்வதும் நின்றது ஒருவாரமாகியது ஆனால் இன்று மறுபடிவந்துவிட்டான் என்பதை உதயா யூகித்தபடி” அந்த அயோக்கியன் வந்தானா என்ன பேசினான்?” என்று கோபமாகக்கேட்டாள்.

“ஆமாம் உதயா வந்ததோடு மட்டுமில்லை என்னிடம் “என்னைக்காவது ஒருநாள் நீ எனக்கு இணங்கித்தான் ஆகணும் “னான்.நான் “அதுக்கு வேற ஆள பாரு” ன்னதும் என் கையை பிடித்து இழுத்தான். காலை நேரம் .. ஆள் அரவமே இல்லை. எனக்கு வந்த கோபத்தில் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டேன். அப்புறம் பயமாக போய்விட்டது. அவனும் பைக்கில் கோபமாக கிளம்பிப் போய்விட்டான் .நான் நேரா இங்க வந்துட்டேன் “என்று கவிதா படபடப்பு அடங்காமல் சொல்லிமுடித்தாள்.

“அயோக்கிய ராஸ்கல். எத்தனை திமிர் இருந்தா இப்படி வந்து கையைப்பிடிப்பான். இப்பவே நானும் நீயும் போய் போலீஸ்லபுகார் கொடுப்போம்..”

கவிதாவின் வீடு அருகே இருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார்எல்லாம் எழுதிவாங்கிக்கொண்டார்கள். பைக் நம்பரையும் அந்த இளைஞனின் அடையாளத்தினையும் கவிதா கூறியதை குறித்துக்கொண்டார்கள்.

“பயப்படாம போய்ட்டுவா கவி.நாளைக்குசாயந்திரம் ஒருமாசலீவில் என் அண்ணா வரப்போறார். அவரை விட்டு இவன ஒரு வழி பண்றேன் நீ கவலைப்படாதே ..தைரியமா இரு”

உதயா தோழியின் தோளைத்தட்டி அவளை வழியனுப்பினாள்.

ஆனால் விதி வேறுவிதமாய் விளையாடிவிட்ட்டது.

மறுநாளின் விடியல்தான் தனது கடைசி விடியல் என் கவிதாவிற்குத்தெரிந்திருக்க நியாயமில்லை.

அந்தப்புற நகர் ஸ்டேஷன் நடை மேடை நோக்கி படிகளில் ஏறி நடந்தாள். அதிக கூட்டம் இல்லாத ஆள் அரவமில்லாத காலை நேரம் . கடைசி படி ஏறி நடைமேடைக்குச் செல்லஇருந்தபோது பின்பக்கமிருந்து அவள் முதுகில் ஏதோ ஒரு ஆயுதம் கூர்முனையைப்படர விடுவதிஅ உணர முடிந்தது. அது அழுத்த்வௌம் வலிதாங்காமல் ஐயோ என்று அலறும் போது முன் பக்கம் வந்த ஆயுதத்தை கவனித்தாள். மிரண்ட அந்தக்கணம் தோளில், மார்பில், வயிற்றில்,தொடையில் என்று அரிவாள்வெட்டு சதையை சீவிப்பாய்ந்தது .ரத்தம் பீறிட்டுக கொட்டஅப்படியே தரையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தாள் கவிதா..

ஊர்உலகத்திற்குத்தெரியும்போதே உதயா விற்கும் தெரிந்து போனது.ரத்த சகதியில் தோழியைக்கண்டு கலங்கிப்போனாள்.

போலீசிடம் கூச்சல் போட்டாள் அந்த இளைஞனைக் கைது செய்யவேண்டுமென கூட்டமாகப் போய் கதறினாள்.

“இன்ஸ்பெக்டர்…பைக் நம்பரை வச்சி நான் தகவல் திரட்டிட்டேன்.அவன் பெயர் திலக். பணக்கார முதலையின் ஒரே மகன் அவன்தான் அவளைத் தொல்லைபண்ணிட்டே இருந்தான். அவன்தான் கொலை செய்திருக்கிறான்”

“இல்லம்மா சிசிடிவி மில் வேற ஒருஆள் முகம் உடம்பு தெரியுது.தப்பிச்சிப்போனவனை போலீஸ் பிடிச்சிடும்.மேலும் திலக் நேத்து மதியமே பம்பாய்க்கு அவரு அப்பா கூட கிரிக்கட் மேட்ச் பார்க்கப்போயிட்டார்.ஏர்போர்ட்ல விசாரிசிச்ட்டோம்”

“இல்ல இல்ல்ல்ல”வீறிட்டாள் உதயா.

எய்தவன் எங்கோ இருக்க அம்பிற்குதண்டனைகொடுத்து கேசை மூடி விடுவார்கள் என உதயாவிற்கா தெரியாது!

மாலை அண்ணன் குமரவேல்வந்ததும் நடந்ததைச் சொல்லி கதறினாள்.கவிதாவின் பெற்றோர்களை சமாதானம் செய்ய இயலாமல் சுவரில் முட்டிக்கொண்டு ஓலமிட்டாள்.

குமரவேல் ,”முள்ளை முள்ளால் எடுப்போம்” என்றவன்தங்கையின் காதோடு தன் திட்டத்தை விவரித்தான்.

மறுநாள் திலக்கின் அம்மா உதயாவின் வீட்டுக்கூடத்து நாற்காலியில்கயிறால் கட்டப்பட்டு கிடந்தாள்..

காரில் ட்ரைவருடன்கோயிலுக்குப்போனவளை ராணுவ உடையில் போய் சந்தேகமே இல்லாதபடி பேசிக்கடத்திக்கொண்டு வந்துவிட்டான் குமரவேல். ட்ரைவருக்குக்கொடுத்த கணிசமான தொகை அவனை ஒருவாரத்திற்கு குடும்பமுடன் வெளியூர் போக வைத்தது.

அவளிடம் உதயா” உன் பையனுக்கு போனில் மெசேஜ் அனுப்பி இருக்கிறேன் உன் புருஷனிடம் சொல்லாமல் போலீசுக்கும் தெரிவிக்காமல் ஒழுங்காக நீ இங்கு வந்தாய்என்றால் உன் தாய் காப்பாற்றப்படுவாள் இல்லையென்றால் துப்பாக்கிக்கு இரையாவாள் என்றுவீடியோவுடன் மெசேஜ் போட்டிருக்கிறேன்”என்றதும் அந்தப் பெண்மணி கண்ணில் நீர் தளும்ப அதிர்ந்து பார்த்தாள்.

அடுத்த சில மணி நேரங்களில் திலக் உதயாவின் வீட்டு வாசலுக்கு வந்து நின்றான்.

கதவைத் திறந்து அவனை உள்ளே அழைத்துக் கொண்ட குமரவேல் “போலீஸ்க்கு உன் அப்பாவிற்கு ஏதும் தகவல் சொல்லவில்லை

தானே? அப்படி எதுவும் நடந்தால் உடனே உன் அம்மா உயிர் உடனே போய்விடும். நான் ராணுவக்காரன்.இதோ பாரு என் கையில் துப்பாக்கி.இதை உன் அம்மாவின் தலைக்கு பின்னால் அழுத்திக் கொண்டு நிற்கிறேன்.உன் தாயின் உயிர் உன் கையில்..இல்லை.., வாயில் இருக்கிறது ஒழுங்காக உண்மையைச் சொல். எதற்காக கவிதாவை நீ கொல்லச் சொன்னாய்?” என்று நேரடியாக குமரவேல் அவனை மிரட்டினான்.

அவன் வெகுண்டவனாக” என்னை எதற்கு இப்படி கேட்கிறீர்கள்? எனக்கு எதுவும் தெரியாது. முதலில் என் அம்மாவை விடுங்கள்” என்றான்.

உதயா இப்போது அவன் அருகில் வந்து அவன் கன்னத்தில் ஓங்கி அடித்தாள்.

“ஐயோ வலிக்குது” என அவன் கன்னத்தைத் தேய்த்தபோது ”பொம்பிளை கைவிரல் அடிக்கே வலிக்குது உனக்கு.ஒரு அப்பாவிப்பெண்ணை அரிவாளால மாத்தி மாத்தி வெட்டினா அவளுக்கு எப்படி வலிச்சிருக்கும்? ஏண்டா நீ பணக்காரன் உங்கப்பன் உனக்கு எல்லாம் வச்சிருக்கான்.கவிதாக்கு படிச்சி வேலைக்குபோனாதான் நாலு காசு கிடைக்கும். ஏண்டா பெண்களை வாழவே விடமாட்டேங்கறீங்க? உன்னைக்காதலிக்க மறுத்ததுக்கு எவனுக்கோ காசைக்கொடுத்து அரிவாளால் வெட்டி பழி தீர்த்துப்பியா? “என்று கத்தியபடி பிறகு அவனையும் நாற்காலியில் அமர வைத்து கை கால்களைக்கயிறால் கட்டினாள்.

“முதலில் இவனை சுட்டு தள்ளுகிறேன்” என்று துப்பாக்கியை அவன் நெஞ்சில் வத்தபடி சீறினான் குமரவேல்

அவன் தாய் ,”ஹ்ம் ஹ்ம்”என்று தீனமாக அலறினாள்.

“நானும் இவனை சுட்டு தள்ளனும்னு தான் நினைச்சேன் ஆனா மகாபாரதத்தில் திரௌபதி கதை எனக்கு ஞாபகம் வந்தது. அஸ்வத்தாமன் பாண்டவர்களுடைய எல்லா குழந்தைகளையும் வெட்டி தள்ளினதும் அவனை பழிவாங்க அழைத்துக் கொண்டு வந்து திரௌபதி முன்னால் நிறுத்தினார்கள். திரௌபதி அவனைப் பார்த்தவள்” வேண்டாம் புத்திர சோகம் என்னோடு போகட்டும்.. இவனைப் பெற்றவளுக்கு அந்த சோகம் வர வேண்டாம் அவனை விட்டு விடுங்கள் “என்றாளாம். அதுபோல இவன் தாய்க்கு புத்திர சோகம் நம்மால் வர வேண்டாம் ஆனால் இவன் உண்மையை சொல்லாவிட்டால் அவன் தாயை சுட்டு விடுவோம்”

“வேண்டாம் வேண்டாம்” என்று அலறினான் திலக்

“அப்போ உண்மையை சொல்லு” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாள்.

திலக் சொல்ல ஆரம்பித்தான்.

தன்னை கவிதா காதலிக்கவில்லை என்பதாலும் தன்னைக்கன்னத்தில் அடித்ததாலும் பழிவாங்க ஒரு ஆள் மூலமாக அவளை வெட்டிப் போட பணம் கொடுத்தை ஒத்துக்கொண்டான். அவன் பேசியது அத்தனையும் வீடியோவில் பதிவு செய்த உதயா அடுத்த நிமிஷம் அதை ஊடகங்களுக்கு அனுப்பினாள். முகநூலில் போட்டாள். அவள்வீட்டு வாசலில் கூட்டம் கூட ஆரம்பித்தது.

உதயாவை பாரதி கண்ட புதுமைப்பெண் எனப்பாராட்டியது. சட்டம் செய்யவேண்டியதை தனி மனிதர்கள் செய்ததை ஊடகங்கள் விவாதமாக எடுத்துக்கருத்துக்களைக்கூற ஆரம்பித்தன. உதயாவால் எதுவும் பேசமுடியவில்லை.

கவிதாவை நினைத்து கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்தாள் உதயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *