புரோக்கர் பொன்னுசாமி!





பெரிய அதிர்ஸ்டசாலி என்று சொன்னால் புரோக்கர் பொன்னுசாமியைத்தான் சொல்ல வேண்டும்!
அவன் செல்போனில் தினசரி கோடிக் கணக்கில் பரிசு விழுந்ததாக செய்திகள் எஸ். எம். எஸ். மூலம் வரும்!
பத்திரிகை, டி.வி. எல்லாம் ரியல் எஸ்டேட், கல்யாணம் போன்றவைகளில் அவன் புரோக்கர் தொழிலுக்குப் போட்டிக்கு வந்து விட்டதால், அவன் வருமானம் சுத்தமாக குறைந்து விட்டது!
வருத்ததில் இருந்த அவனுக்கு ஐம்பது லட்சம் பரிசு விழுந்திருப்பதாக ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது! அதைப் பார்த்தவுடன் ஒரே எரிச்சலாக இருந்தது.
அந்த செல்போன் நெம்பரைப் பார்த்து அவனும் கீழ் கண்டவாறு ஒரு எஸ்.எம்.எஸ். தட்டி விட்டான்.
ஐயா,
நானும் உங்களைப் போல் தான்!…என் புரொக்கர் தொழில் முன்பு மாதிரி இல்லை! …..தினசரி பேப்பரைப் பார்க்கும் பொழுது நாட்டில் ஈமுவில் ஆரம்பித்து, இண்டர் நெட் வரை ஏமாந்த பார்ட்டிகள் நிறைய இருப்பார்கள் என்று தான் எனக்கும் படுகிறது!….ஆயிரத்தில் ஒரு நபர் நமக்கு கூட மாட்டினால் போதும். கணிசமான தொகையைத் திரட்டி விடலாம்!…..நான் நல்ல புரோக்கர்…என் அனுபவமும் உங்களுக்குப் பயன் படும்!…என்னையும் உங்கள் தொழில் ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொள்ளுங்கள்…
– பாக்யா செப்19-25 2014 இதழ்
![]() |
கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில்…மேலும் படிக்க... |